twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive: மீடூவுக்கு பிறகு சினிமாவில்.... 'லாலா கடை சாந்தி' பாட்டு புகழ் நிஷா ஓபன் டாக்!

    மிடூ விவகாரம் குறித்து நடிகை நிஷா கருத்து தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை : 'மீடூ'வுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நடிகை நிஷா தெரிவித்துள்ளார்.

    2018 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவை உலுக்கிய பிரச்சினைகளில் ஒன்று மீடூ. இந்த ஹேஷ் டேகில் பெண்கள் தெரிவித்த பாலியல் புகாரில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் சிக்கினர். அடுத்து யார் யாரைப் பற்றி சொல்ல போகிறார்கள் என்ற பீதி தமிழ் சினிமாவில் நிலவியது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார், பிரபல ஐட்டம் சாங் நடிகை நிஷா. இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியதாவது,

    ஐட்டம் டான்ஸராக 250 படங்கள்

    ஐட்டம் டான்ஸராக 250 படங்கள்

    " நான் இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். எல்லா படங்களிலுமே ஐட்டம் டான்ஸராக தான் நடித்துள்ளேன். சினிமாவை பொறுத்த வரை ஒரு நடிகையோ, நடிகரோ குறிப்பிட்ட விஷயத்தில் ஹிட்டாகிவிட்டால், பின்னர் அதே ரோலில் தான் அவரை நடிக்க வைப்பார்கள்.

    இமேஜ் மாற வேண்டும்

    இமேஜ் மாற வேண்டும்

    ஆனால் இந்த இமேஜ் மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தற்போது அசால்ட் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது எனது இமேஜை மாற்றும் என நினைக்கிறேன். இந்த புத்தாண்டில் அது சாத்தியப்படும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன். ஐட்டம் டான்ஸ் நிஷாவை விரைவில் ஹீரோயினாக நீங்கள் பார்ப்பீர்கள்.

    கடவுள் 2 -ல் சிறிய பாடல்

    கடவுள் 2 -ல் சிறிய பாடல்

    தற்போது வேலு பிரபாகரன் இயக்கும் கடவுள் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறேன். இது ஒரு சிறிய பாடல் தான். இருப்பினும் ஒரு புதுமையான விஷயம் இதில் இருக்கும்.

    மிடூவுக்கு பிறகு

    மிடூவுக்கு பிறகு

    மீடூ விவகாரம் வந்த பிறகு சினிமாவில் நிறைய மாறியிருக்கிறது. யார் எப்படி அணுகுகிறார்கள் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. பாலியல் ரீதியாக அணுகுவது மாறியிருக்கிறது. நான் சினிமாவில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். எனது அம்மாவும் ஒரு டான்ஸர் என்பதால், அவர் என் கூடவே இருப்பார். அதனால் என்னை யாரும் அதுபோன்று அணுகியது இல்லை", என நடிகை நிஷா கூறினார்.

    English summary
    The item song actress Nisha says that the metoo hashtag have bought a change in cinema industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X