twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாறன் என்ற பெயர் எம்.ஜி.ஆருக்கு இருந்தது... அந்த பெயரை இயக்குனர் வெற்றிமாறனுக்கு வைத்தது இவர் தான்

    |

    சென்னை: மாறன் என்ற பெயரின் மீது எனக்கு எப்போதும் காதல் தான் என்று கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், செல்ஃபி படத்தின் இயக்குனர் மதிமாறன் அவர்களின் தந்தையுமான புகழேந்தி தெரிவித்தார்.

    Recommended Video

    Ela.Pugazhendi | Vetrimaaran க்கு நான்தான் பெயர் வைத்தேன் | Filmibeat Tamil

    மேலும் அவர் கூறுகையில், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் மாறன் என்ற பட்டம் வழங்கப்பட்டது என்றும், செல்ஃபி என்பது தமிழ் சொல் தான் என்றும் தெரிவித்தார்.

    செல்ஃபி திரைப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட படத்தின் இயக்குனர் மதிமாறனின் தந்தையும், முன்னாள் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அவர்கள், நமது பிலீம்பிட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டிஇங்கு பார்க்கலாம்.

     என்ஜாய்...என்சாமி பாடல் மூலம் புகழ் பெற்ற அறிவு...யாருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டார் தெரியுமா ? என்ஜாய்...என்சாமி பாடல் மூலம் புகழ் பெற்ற அறிவு...யாருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டார் தெரியுமா ?

     கலைஞரின் குடும்பம்

    கலைஞரின் குடும்பம்

    கேள்வி: மாறன் என்ற பெயர் மீது உங்களுக்கு ஏன் அவ்வளவு மோகம்?

    பதில்: மாறன் என்ற பெயரின் மீது எனக்கு எப்போதும் ஒரு காதல். அதற்கு அடிப்படை காரணம் என்னுடைய இதயத்தில் நீக்கமற இருப்பவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான். கலைஞரின் வழியின் நான் வரும்பொழுது, எங்களுடைய மரியாதைக்குரிய மறைந்த முரசொலிமாறன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். இந்த மாறன் என்கிற பெயரின் மீதுள்ள காதல் கலைஞரின் குடும்பத்திலும் எதிரொலித்தது. உதாரணமாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் போன்றோருக்கும் வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்கும் கூட தெய்வத்தாய் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு மாறன் என்ற பெயர் சூட்டினோம். மாறன் என்பதற்கு தமிழில் வீரன் என்ற பொருளும் உண்டு.

     செல்ஃபி என்பது பெயர்ச்சொல்

    செல்ஃபி என்பது பெயர்ச்சொல்

    கேள்வி: உங்களது மகன் மதிமாறன் எடுக்கும் செல்ஃபி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்: செல்ஃபி என்கிற தலைப்பு என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. செல்ஃபி என்பது பெயர்ச்சொல். செல்ஃபி என்ற சொல் எல்லா மொழிகளிலும் பரவியுள்ளது. இதை தமிழ்மொழியும் உள்வாங்கியுள்ளது. எனவே செல்ஃபி என்ற சொல் தமிழ் தான். செல்ஃபி என்ற வார்த்தையில் ஆயுத எழுத்தை ( ஃ )பயன்படுத்தும், அது அழகாக இருக்கிறது. பொதுவாக எனக்கு தமிழ்மீது ஆர்வம் அதிகம். செல்ஃபி என்பதன் பொருள், மனிதர்கள் ஒவ்வொருவரும் தன்னை தானே செல்ஃபி எடுத்து கொள்ள வேண்டும். அதாவது சுயமாக சிந்தித்து அவரவர்கள் செயல்பட வேண்டும் என்பது மையக்கருத்து.

     இவர்கள் தான் கடமையை செய்பவர்கள்

    இவர்கள் தான் கடமையை செய்பவர்கள்

    கேள்வி: இயக்குனர் வெற்றி மாறன் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: இயக்குனர் வெற்றிமாறன் எனது அக்கா மகன். தாய்மாமன் என்ற முறையில் அவனுக்கு நான் பெயர் வைத்தேன். வெற்றிமாறனுக்கு மட்டுமின்றி, எனது நண்பர்களின் மகன்களுக்கும் தமிழ்மாறன், மணிமாறன், எனது மகன் மதிமாறன் ஆகியோருக்கும் மாறன் என்றும் பெயர் வைத்தேன். மாறன் என்பது வீரத்திற்கும் அடையாளம், தமிழுக்கும் அடையாளம். வெற்றி மாறன், இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் உதவியாளராக இருந்து இன்று சிறந்த இயக்குனராக வலம்வருவது என்னை பெருமை கொள்ள செய்கிறது.

    மதிமாறனுடைய செல்ஃபி வெற்றி பெரும்

    ஒரு சில பேர் கடமைக்காக வேலை செய்பவர்கள். ஒரு சிலர் பேர் கடமையை சிறப்பாக செய்பவர்கள். கடமைக்காக செய்பவர்கள் நடிப்பவர்கள். ஆனால் இயக்குனர் வெற்றிமாறனும், எனது மகன் மதிமாறனும் கடமையை செய்பவர்கள். கண்டிப்பாக அவர்களும் வெற்றி பெறுவார்கள். செல்ஃபி படமும் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/AT0Fna3NNXo இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் செல்ஃபி படத்தின் இயக்குனர் மதிமாறன் அவர்களின் தந்தை புகழேந்தி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள் .

    English summary
    MGR is Called as Maran and the same name suited to Director Vetrimaran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X