For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நடு ராத்திரில பரிசல் ஓட்டின திகில் ஸ்டோரி... மின்னல்முரளி அனுபவங்களை பகிர்ந்த குருசோமசுந்தரம்

  |

  சென்னை: சமீபத்தில் வெளியாகிய மின்னல் முரளி என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

  Recommended Video

  Minnal Murali | Guru Somasundaram | Hero, Villain இருவருக்கும் என்ன வித்யாசம் ? | Filmibeat Tamil

  இயக்குனர் பாசில்ஜோசப் இயக்கத்தில் டோவினோ சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். மலையாளத்தின் 2021-ன் சிறந்த ஐஎம்டிபி வரிசையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

  விறுவிறுப்பான திரைக்கதை, சுவாரஸ்யமான காட்சிகளோடு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ள மின்னல் முரளி படத்தில் 'சூப்பர் வில்லன்' ஆக டெர்ரரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள குரு சோமசுந்தரம் நம்மிடையே பிரத்தியேகமாக வீடியோ வீடியோ கான்ஃப்ரென்சிங் மூலம் பேசினார்.

  நயனை நினைத்து எழுதியிருப்பாரோ? 2 மில்லியன் பார்வைகளை கடந்த நான் பிழை பாடல் நயனை நினைத்து எழுதியிருப்பாரோ? 2 மில்லியன் பார்வைகளை கடந்த நான் பிழை பாடல்

  வேற லெவல் ப்ரோ

  வேற லெவல் ப்ரோ

  கேள்வி : குழந்தைகள் கிட்டல்லாம் எப்படி ரீச் இருக்கு?

  பதில் : அமோகமான வரவேற்பு இருக்கு. எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. நிறைய சின்ன பசங்கல்லாம் பார்த்துட்டு நல்ல ரெஸ்பான்ஸ் குடுத்தாங்க. இதுலதான் க்ளியரான ஒரு ஸ்டோரி இருக்கு. மத்த சூப்பர் ஹீரோவுக்கெல்லாம் இருக்காதுன்னு சொல்லல எனக்கு அது அவ்வளவா தெரியாது. ஆனா இந்த படத்துல உள்ள சூப்பர் ஹீரோவுக்கு உள்ள கதையெல்லாம் பாக்குறப்ப ரொம்ப ஆர்வமா இருக்குன்னு சின்ன சின்ன குட்டி பசங்க சொன்னாங்க. பல நாடுகளில் இருந்தும், பல மக்கள் குடுத்த வரவேற்பு ரொம்ப உற்சாகத்த குடுத்திருக்கு.

   உத்து உத்து பாத்துகிட்டு

  உத்து உத்து பாத்துகிட்டு

  கேள்வி : தமிழ்- மலையாளம் ரெண்டு இண்டஸ்ட்ரிலயும் ஒர்க் பன்றது எப்படி இருக்கு ?

  பதில் : சிலசமயம் நான் கடிவாளம் கட்டின குதிரை மாதிரிங்க. இங்க என்ன நடக்குது, அங்க என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டுல்லாம் இருக்க மாட்டேன். ரொம்பல்லாம் இண்டஸ்ட்ரிய பத்தி அது எப்படி இது எப்படின்னு பாக்க தோன்றதுல்ல. நான் என் வேலைய ஒழுங்கா பார்த்தேன்னா, அதுல என் நடிப்பு நல்லா வரும். அது இண்டஸ்ட்ரி-க்கு ஹெல்ப் ஆ இருக்கும். இண்டஸ்ரி நல்லா வளரனும்ன்னா.. அத உத்து உத்து பாத்துகிட்டு இருக்கனும்ன்னு இல்ல. அவங்க அவங்கள பாத்து வளர்ந்துகிட்டாலே போதும்.

   ஏ.. அங்க பாறை இருக்கு

  ஏ.. அங்க பாறை இருக்கு

  கேள்வி : ஷூட்டிங் நடக்குறப்ப மறக்க முடியாத சீன் எது?

  பதில் : அந்த பரிசல் சீன் மறக்க முடியாது. வயநாடு பக்கத்துல ஓடுற நிஜமான ஒரு ஆறு. பரிசல் ஓட்டி கத்துகிட்டேன். மிட் நைட் ரெண்டர மணிக்கு ஷூட். ஆறு சீற்றமா இருக்கு. நான் மிதமான வேகத்துலதான் பரிசல் ஓட்டி பழகிகிட்டேன். ஆனா அந்த நடு ராத்திரில அந்த இடத்துல ரொம்ப த்ரில்லிங்கா இருந்துச்சு. படத்துல பாக்கும் போது சாதாரணமாத்தான் இருக்கும். ஆனா, இருட்டுல ஓட்டிட்டு போறப்ப.. பக்கத்துல இருந்தவர் அங்க ஒரு பாற இருக்குன்னு வேற சொன்னாரு. எனக்கு பயமாவும் இருந்துச்சு. அதே நேரத்துல நல்லாவும் பண்ணிருந்தோம். எந்த ஆபத்தும் இல்லாம தப்பிச்சோம் .

   சூப்பர் ஹீரோ சூப்பர் காதல்

  சூப்பர் ஹீரோ சூப்பர் காதல்

  கேள்வி : படத்துல காதல் சீன் தேவையா?

  பதில் : அன்பு நிறைஞ்சதுதான் உலகமே. சாதாரணமா இருக்கவங்களே சூப்பர் லவ் பண்ணும் போது, ஹீரோ சூப்பரா லவ் பண்ண வேண்டாமா? எதிர் பாலினம்ன்னு காட்டிட்டாலே அங்க, அன்பு, காதல், பாசம் எல்லாத்தயும் காட்டனும். அப்பதான் ஒரு கனெக்ட்டா பார்ப்பாங்க.இந்த சூப்பர் ஹீரோ சூப்பர் காதல் இன்னமும் அதிகமான காதல் என்று இந்த படத்தில் வில்லனாக நடித்த குரு சோமசுந்தரம், மனமெல்லாம் குழந்தையாக சிரிக்க சிரிக்க பதிலளித்தார். இந்த பேட்டியின் முழு வீடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனல் மூலம் காணலாம் .

  English summary
  Minnal Murali Villan Guru Somasundaram Exclusive Interview
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X