»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் சினிமா உலகில் தங்கள் கவர்ச்சியைக் காட்டி கொடிகட்டிப் பறந்த கதாநாயகிகள் இன்று காணாமல் போய் விட்டார்கள். "காலமெல்லாம் காதல் வாழ்க "படத்தில் கெளசல்யா என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கெளசல்யா. எந்த ஆர்ப்பாட்டமோ, பந்தாவோ இல்லாமல் , தன் உருவத்துக்கு ஏற்ப வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அதற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுப் பெற்று வருகிறார். விளம்பர மாடலான இவர் அறிமுகமானது என்னவோ மலையாளம் (ஏப்ரல்-19) என்றாலும் தமிழ்ப்படம் தான் இவரைப் பிரபலப்படுத்தியது. இந்தக் கன்னடத்துப் பைங்கிளி இப்போது நான்கு தென்னிந்திய மொழிகளில் பிரபலம். "ஜேம்ஸ் பாண்ட் படப்பிடிப்பு இடைவேளையில் சந்தித்த போது மனம் திறந்து பேசினார் கெளசல்யா.

தமிழில் கெளசல்யா என்ற பெயரில் பிரபலமானலும் கூட மலையாளத்தில் நந்தினி என்ற பெயரில் நடிக்கிறீர்களே எப்படி?

கவிதா என் சொந்தப் பெயர். மாடலிங் செய்து கொண்டிருந்த என்னை பாலச்சந்திரமேனன் ஏப்ரல்-19 என்ற மலையாளப் படத்தில் அறிமுகம் செய்த போது, கவிதா என்ற பெயரில் நிறைய நடிகைகள் இருப்பதால், என் பெயரை, நந்தினி என்று மாற்றினார். அடுத்த படமான "காலமெல்லாம் காதல் வாழ்க" படத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயரான கெளசல்யா எள்ற பெயரை எனக்குச் சூட்டினார்கள். அதன் பிறகு இரண்டு கன்னடப்படம், இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து முடித்து விட்டு மீண்டும் மலையாளப் பட வாய்ப்பு வந்த போது மலையாளத்தில் ஏற்கனவே நான் பிரபலமான நந்தினி என்ற பெயரிலேயே, தொடர்ந்து வைத்துக் கொண்டேன். கேரள ரசிகர்களுக்காக, நந்தினி என்று மலையாளத்தில் எழுதி கையெழுத்துப் போடவும் கற்றுக் கொண்டேன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளில் நடிக்கிறீர்களே என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?

""உண்மையைச் சொல்வதென்றால், இபபோது தமிழில்தான் அதிக கவனம் செலுத்துகிறேன். கன்னடத்தில் இரண்டு படங்கள், தெலுங்கில் நாலைந்து படங்கள், மலையாளத்தில், மம்முட்டியுடன் ஒன்று, மோகன்லாலுடன் ஒன்று, என்று நாலு படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய படங்கள் வருகின்றன. மலையாளத்தில் சப்ஜெக்ட வேல்யூ உளள படங்கள் டேட்ஸ் இல்லாததால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

தொடர்ந்து தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், வர வர வேறு மொழிப படஙகள் ஒத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை வந்து விட்டது. தமிழில், வானத்தை போல, ஏழையின் சிரிப்பில், தை பொறந்தாச்சு ஆகிய மூன்று படங்கள் வெளியாகி ஒடிக்கொண்டிருக்கின்றன. கார்த்திக்குடன் சந்தித்த வேளை, பிரபு தேவாவுடன் ஜேம்ஸ் பாண்ட், கவிதாலயம் ராஜகாளியம்மன், பூப்போல மனசு, இளையவன், குபேரன் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நன்றாக தமிழ் பேசக் கற்றுக் கொண்டு விட்டேன்.

தெலுங்குப் படங்கள் பெரும்பாலும் பெரிய பட்ஜெட்டில் வியாபார நோக்கத்தில் தயாரிக்கப்படுகிறது. மலையாளத்தில் சப்ஜெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தமிழில் ரொம்பவும் கமர்ஷியலாக இல்லாமல், அதே நேரத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் பண்ணுவார்கள். இதைத் தவிர பிலிம் மேக்கிங என்று பார்த்தால், மலையாளப்படம் கம்மி பட்ஜெட்டில் வேகமாக படத்தை முடித்து விடுவார்கள்.

இதுவரை நடித்த படங்களில் உங்களுக்கு முழு திருப்தியைத் தந்த கேரக்டர் எந்தப்படத்தில் அமைந்ததாக சொல்கிறீர்கள்?

என் முதல் படம் காலமெல்லாம் காதல் வாழ்க. நான் ஏற்ற அந்த கதாபாத்திரம் என்னை பிரபலப்படுத்தியது. தொடர்ந்து வெளிவந்த நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, ஆசையில் ஒர் கடிதம், உள்பட எல்ல்ாப் படங்களிலுமே, கதாபாத்திரத்தின் வழியாக்தான் எனக்கு பெயர் கிடைத்திருக்கிறதே ஒழிய நடிப்பால் சாதிக்கும்படியான கேரக்டர் எனக்கு இதுவரை அமையவில்லை. சமீபத்தில் வெளிவந்த, தை பொறந்தாச்சு படத்தில் கூட எனக்கு அழுகிற காட்சியே இல்லை. சீரியஸான காட்சிகள் கூட ரொம்ப லைட்டா சொல்லப்பட்டிருக்கும். வித்தியாசமான பல கதாபாத்திரங்களில் நடிக்கிற வாய்ப்புகள் கிடைககின்ற திருப்தியுடன் நான் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்.

சினிமாவில் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் ஏதாவது உண்டா? எப்படி சமாளிக்கிறீர்கள்?

பிடிக்காத விஷயம் என்றால், அது(EXPOSURE OF SEX)முகத்தை சுளிக்க வைக்கும் கவர்ச்சி தான். காலமெல்லாம் காதல் வாழ்க, சமயத்தில் அம்மா துணையுடன் வந்து கொண்டிருந்த நான் பிறகு தைரியமாகவே வருவேன். நடிகையாக வருவதில் பணமும், புகழையும் விரைவாகப் பெறலாம். அதே சமயம், பாதுகாப்பின்மையும் உண்டு. யார் வேணடுமானாலும் விமர்சனம் பண்ணலாம். மார்க்கெட்டு சூடு பிடிப்பதும் உண்டு. ஓவர் நைட்டில் டவுனாவதும் உண்டு. நிரந்தரமான வாழ்க்கை கிடையாது. நடிகையாக வந்தால் பல தியாகங்களைச் செய்ய வேண்டும். பசியைத்தாங்கிக் கொள்ளவும் வேண்டும். பசி இல்லாத போது சாப்பிடவும் வேண்டும். இப்படி இந்தத் தொழிலைப் பற்றி நன்கு உணர்ர்ந்து கொண்ட பின்பு சினிமா உலகில் அடி எடுத்து வைத்ததால் எதையுமே, சமானித்து வருகிறேன்.

நடிக்க வந்ந பின் உங்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் ஏதாவது உண்டா?

ரொம்ப முக்கியமான மாறுதல் ஒன்றை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். நான் ஒரு சிடுமூஞ்சி, முன் கோபக்காரி, தொட்டதுக்கெல்லாம், குற்றம் கண்டு பிடிக்கும் கேரக்டர். நடிக்க வந்த பின்பு நிறைய மாறி இருக்கிறேன். நானா, இப்படி மாறிட்டேன்னு ஆச்சரியமாக உள்ளது. பொறுமை எப்படி வந்ததோ தெரியவில்லை. பல வேளைகளில் கோபத்தை அடக்க கற்றுக் கொண்டேன். கிசு கிசு, காஸிப் வந்திச்சுன்னா கண்டுக்காம விட்டுடறேன்.

உங்கள் குடும்பப பிண்ணனி பற்றியும், சொந்த வாழ்க்கை பற்றியும் சொல்லுங்களேன்?

""என் அம்மா பூர்ணிமா, இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். ஒரு இந்தியரை மணக்க வேண்டும் என்று என் அப்பா இன்ஜினியர் சிவசங்கரனை பெங்களூரில் கை பிடித்தார். எனக்கு ஒரு அண்ணன், பெயர் சண்முகா. கம்ப்யூட்டர் இன்ஜினியர். என் அப்பா பெங்களூர் டிரான்ஸ்போர்டில் உயர் அதிகாரி. அவருடன் பிறந்தவாகள் ஆறு ச்க்ோதரர்கள்., நான்கு சகோரிகள். சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா எனக்கு ஏராளம். ஒரு கூட்டுக் குடும்பமாகத்தான் வாழந்து வருகிறோம்.

எஙகள் வீட்டில் யாருக்குமே தமிழ் எழுதப் படிக்கத்தெரியாது.அதனால் நான் நடித்த படத்தை யாருமே பார்த்ததில்லை. பெங்களூரில் மட்டும் நான் அசைவம் கொஞ்சமாக சாப்பிடுவேன். வெளியூர் போனால் சுத்த சைவம். தயிர் சாதம், பழங்களைச் சாப்பிட்டு சமாளித்துக் கொள்வேன்.

காலமெல்லாம் காதல் வாழ்க கெளசல்யா, தை பொறந்தாச்சு கெளசல்யா என்ன வித்தியாசம்?

நான் நடித்த முதல் மலையாளப்படத்தின் கான்ட்ராக்டில் சிக்கிக் கொண்டிருந்த போது தைரியமாக கட்டுப்பாட்டை மீறி நடித்த படம் காலமெல்லாம் காதல் வாழ்க. அந்தப் படத்தின் ரிலீஸ் அன்று காண்டிராக்ட் முடிந்தது. சுதந்திரப் பறவையானேன். தமிழ் பேசத் தெரியாத நான் நன்றாக பேசக் கற்றுக்கொண்டேன்.

சினிமா உலகத்தை பற்றிய ஒரு தெளிவு மூன்றாண்டுகளில் கிடைத்த அனுபவம் என்னை நன்றாக பட்டை தீட்டியுள்ளது. எதையும் சிந்தித்து தீர்க்கமாக முடிவு எடுக்கும் மெச்சூரிட்டி - இப்படி எனக்குள் நல்ல பரிமாண வளர்ச்சிகள் தென் படுகிறது. நான் நடித்த கதாபாத்திரத்தின பெயர் என்பதால் கெளசல்யா என்ற பெயர் பிரபலமானதால் தை பொறந்தாச்சு படத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக்காலப் பெண்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு நண்பர்கள் யார்? யார்?

ஹைடெக் பெண்களாச்சே ரொம்ப சுதந்திரமா இருக்காங்க. புத்திசாலியா, தைரியசாலியா, ஹானஸ்டா இருந்தால் பெண்கள் எவ்வளவோ சாதிக்கலாம். சினிமா உலகில் யாருக்குமே நண்பர்களும் கிடையாது. எதிரிகளும் கிடையாது. என் வேலை உண்டு எனறு இருப்பவள் நான். யார் வம்புக்கும் போக மாட்டேன். யார் பற்றியும் கவலைப்பட மாட்டேன். என்னால் மற்றவர்களுக்கு சிறிய அளவு கூட தொந்தரவு ஏற்படக்கூடாது என்று நினைப்பவள். யாருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிற அள வுக்கு நடந்து கொள்ளக் கூடாது என்பது என் பாலிசி.

Read more about: killed tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil