twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெட்டிக்களைய வேண்டிய ‘முடி’ சாதியா? ஈகோவா? சமூக கேள்விகளை எழுப்பும் ‘முடி’ குறும்பட விமர்சனம்!

    |

    வெட்டிக்களைய வேண்டிய முடி சாதியா? ஈகோவா? இவ்விரு துருவங்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டு முழிக்கும் 'பாபா சலூன்' மணியின் லாக் டவுன் வாழ்க்கை தான் இந்த "முடி".

    "நீ ஸ்ட்ரீமில்" வெளியாகியிருக்கும் நாற்பது நிமிட டெலி ஃபிலிமான "முடி" மலையாள ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஸ்டார் படங்களை தேடி தேடி பார்த்த நாம் ஓடிடி வந்த பின் ஒவ்வொரு நல்ல படமும் ஸ்டாராகிக்கொண்டிருப்பதை கண்கூடாக பார்கிறோம். யூடியூப் போன்ற தளத்தில் பல்லாயிரக்கணக்கான குறும்படங்கள் இருப்பதால் எளிதில் நல்ல குறும்படங்கள் நமக்கு காண கிடைப்பதில்லை. ஆனால் நீ ஸ்ட்ரீம், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் நன்கு வடிகட்டப்பட்ட சிறந்த கன்டன்டுகள் கிடைக்கின்றன. இங்கணம் வரவேற்பது நம் இயல்பாகும். அவ்வகையில் நாற்பது நிமிடங்கள் செலவிட்டு பார்க்க தக்க படமாக "முடி" வெளி வந்திருக்கிறது.

    ‘Mudi’ Short film Tamil review

    வட்டமலை பகுதியில் சக்கிலியர் இனத்தைச்சேர்ந்த இளைஞர்களுக்கு சலூனில் முடி வெட்ட அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் முடி வெட்ட பஸ் ஏறி டவுனுக்கு சென்று சிரமப்படுகிறார்கள் என்கிற டிவி செய்தியில் படம் தொடங்குகிறது. கொங்காடு பகுதியில் முடி திருத்தம் தொழில் செய்பவர் மணி. அம்பேத்க்கர் படம் இட்ட பாபா சலூனை நடத்தி வருபவர் வட்டமலை பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவ முன்வருகிறார். அரிசி பருப்பிலிருந்து, பேட் வரை மளிகை லிஸ்ட் கொடுத்து அனுப்புகிறார் மணியின் மனைவி ஆனால் இவர்கள் வசிக்கும் 17வது வார்ட் கோவிட் கண்டைன்மெண்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. அவ்வார்டு சுற்றிழும் நீர் சூழப்பட்ட ஒரு சின்ன தீவு. இப்பொழுது மணி கலப்பணி செய்வதைத்தாண்டி அன்றாட விஷயங்களுக்கே திண்டாட்டமாகிப்போகும் சூழல் நிகழ்கிறது. தீவுக்குள்ளேயே ஒரு மளிகை கடை அமைந்திருந்தாலும் அம்மளிகைக்கடையில் பொருட்கள் வாங்க மணி மறுக்கிறார். அதற்க்கு காரணம் மளிகை கடைகாரர் சுரன் மணியின் பால்ய சிநேகிதன். மணியின் சாதியை காரணமாக கொண்டு அவரை ஏமாற்றி அவர் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் பதினைந்து வருடத்திற்குமேற்பட்ட ஒரு பகை ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே மணியின் ஈகோ அவரை தன்மானம் விடுத்து அந்த கடையில் மளிகை வாங்கி வாழ்க்கை நடத்த வேண்டுமா என்கிற கேள்வி கொக்கியில் மாட்டி விட்டிருக்கிறது. இவையனைத்தும் போதாதென்று கதையை மேலும் சுவாரஸ்யமாக்க மணியின் டீனேஜ் மகளும் சுரனின் டீனேஜ் மகனும் ஒருவரையொருவர் காதலித்து கொண்டிருக்கிறனர். இப்படி ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் முடிச்சுகள் எவ்வாறு அவிழ்ந்தன.. யாரால் அவிழ்க்கப்பட்டன.. என்பதை கலை நேர்த்தியுடன் பேசியிருக்கிறது இயக்குனர் யாஸிர் முகமதின் "முடி".

    மணியின் ஈகோ எளிதில் விட்டுக்கொடுக்கக்கூடிய சாதாரணமான கோபம் அல்ல அது காலகாலமாக தன் மேல் தன் இனத்தில் மேல் கக்கப்படும் வன்மத்தை எதிர்த்து வரக்கூடிய கோபம். கோபத்தையும் தாண்டி தன்மானம் காத்துக்கொள்ள வரும் ஈகோ. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் படத்தில் யார் முதலில் விட்டுக்கொடுக்கிறார்கள் அது எப்படி நடக்கிறது ஈகோ என்னவாயிற்று போன்ற குட்டி குட்டி சீன்கள் மூலம் கவனம் ஈர்க்கிறார்கள் கதை வசனம் எழுதியிருக்கும் யாஸிர் மற்றும் ஹாஷிர்.

    கொங்காடு பஞ்சாயத்தின் 17வது வார்டையும், பாபா சலூன் வைத்திருக்கும் மணியின் வீட்டையும் கலை நேர்த்தியுடன் படம் பிடித்திருக்கிறது அஹ்மத் நசீபின் கேமரா. படத்தில் மணியின் எண்ணவோட்டங்களை துளியும் சிந்தாமல் சிதராமல் நமக்கு கண்முன் கொண்டுவந்து சேர்த்திருப்பதற்கு காரணம் கேமரா பிடித்தவரே கத்திரியும்(எடிட்டிங்) பிடித்திருப்பதுதான்.

    மணியாக நடித்திருக்கும் ஆனந்த் பள், அவரின் காதல் கதை தெரிந்த அன்பு மனைவியாக நடித்திருக்கும் மஞ்சு, ஏ4 ஷீட்டில் அம்பேத்கர் வரையும் டீனேஜ் மகளாக வரும் நிவ்யா, மளிகைகடை ஓனராக வரட்டு கவுரவம் பார்க்கும் சுரனாக வரும் அவிசென்னா, இயல்பான பார்ட்டி மெம்பராக வரும் நசீர் கருத்தென்னி என அனைவரும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள். டெலி ஃபிலிமென எந்த குறையும் வைக்காமல் அழகாக ஒரு பாடலையும் வடித்தெடுத்திருக்கும் இசையமைப்பாளர்கள் விமல் மற்றும் ரனீஷுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். படம் முடிந்தபின்பும் முனுமுனுக்க வைக்கும் பாடலை பாடியிருக்கும் உன்னிமாயா நம்பீசன், அழகாக வரிகள் இயற்றி இருக்கும் மெஹட் மக்பூல் என ஒவ்வொருவரும் தங்கள் பங்கினை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    படம் முழுக்க லாக் டவுனில் நடப்பதாலும் நாம் தற்போது மூன்றாம் கட்ட அலையை நோக்கி சென்றுகொண்டிருப்பதாலும் சில இடங்களில் இன்னும் லாக்டவுன் இன்னல்களை சிறப்பாக காட்சிப்படுத்திருக்கலாம் என ஆங்காங்கே தோன்றுகிறது.

    சாதிய ஒடுக்குமுறைகளை படமாக்கும் இன்றைய இளைஞர்கள் வெறுமனே ட்ரெண்டிங்காக இருக்கும் பேசு பொருளை படமாக்குகிறார்களா என்கிற சந்தேகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை என்றாலும் "முடி" திரைப்படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை ஒரு பொட்டு கூட வீணடிக்காமல் வெட்ட வேண்டிய முடிகளை நல்ல அரசியல் தெளிவோடு வெட்டி வீசியிருக்கிறது இந்த "முடி".

    'நீ ஸ்ட்ரீமில்' கண்டு களியுங்கள்.

    செம ஹாட் அப்டேட்... விக்ரமில் இணையும் அடுத்த 2 வில்லன்கள் இவர்கள் தான் செம ஹாட் அப்டேட்... விக்ரமில் இணையும் அடுத்த 2 வில்லன்கள் இவர்கள் தான்

    English summary
    Malayalam short film ‘Mudi’ which released in Nee Streem OTT platform receives good response at audience. This movie also talks about Caste issue strongly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X