»   »  கிளாமர் தமிழச்சி!

கிளாமர் தமிழச்சி!

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் கிளாமரில் பிரளயத்தைக் கிளப்பி வரும் முமைத்கான் வாயில் தமிழ் படு போடு போடுகிறதாம். கேட்டால் நான் பச்சைத் தமிழச்சி என்று படு தெம்பாக கூறுகிறாராம் முமைத்கான்.

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் இருந்து வந்த ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா போன்றோரின் காலம் இப்போது இல்லை. ஆனால் இது புதிய தலைமுறையாயிற்றே. இதனால் வித்தியாசமான ரூபத்தில் இப்போது கிளாமர் ஆட்டங்கள் கோலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கின்றன.

முதலில் மும்தாஜ், பிறகு ரகஸ்யா, அப்புறம் அபிநயஸ்ரீ என்று அதகளப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இப்போது முமைத்கானின் கொடி மடமடவென தடதடத்துக் கொண்டிருக்கிறது.

அர்ஜூனுடன் மருதமலை படத்தில் ஒரு குத்துப் பாட்டில் ஆடியிருக்கிறார் முமைத்கான். இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் கரை புரண்டோடியிருக்கிறாராம் இப்பாட்டில்.

மதுரை வீரன் படத்தில் ஆடிய ஆட்டமும் முமைத்தின் ஆட்டக்களத்தில் அதிரடி வேகத்தைக் கூட்டியிருக்கிறதாம்.

ரகஸ்யா வகையறாக்களை பேக் சீட்டில் தள்ளி விட்டு முமைத்கானின் கிளாமர் குவாலிஸ் படு வேகமாக பறந்து கொண்டிருக்கிறது. தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் அதிகம் அலம்பல் பண்ணாமல், அதேசமயம் ஆட்டத்தில் எந்தக் குறையும் இல்லாமல், சிலம்பிக் கொண்டிருக்கிறார் முமைத்கான்.

தமிழில் இப்போது தயாராகி வரும் பெரும்பாலான படங்களில் முமைத்கான் நீக்கமற நிறைந்திருக்கிறார். முமைத்கானிடம் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தமிழை படு சரளமாக, இலக்கணப் பிழையின்றி பேசுவதுதான்.

என்க்கு என்று பேசாமல் எனக்கு என்று அழகாக பேசுகிறார். தமில் என்று கொல்லாமல், தமிழ் என்று சொல்கிறார். எப்படி இப்படி என்று வியந்து போய் முமைத்திடம் கேட்டால், பச்சைத் தமிழச்சி சார் நான், எங்களது பூர்வீகம் திருச்சிக்குப் பக்கத்தில் உள்ள ஊர்தான். காலப் போக்கில் எனது தாத்தா காலத்தில் மும்பைக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்.

இருந்தாலும் வீட்டில் நாங்கள் தமிழில் பேசத் தவறுவதில்லை. அதனால்தான் என்னாலும் தமிழில் பொளந்து கட்ட முடிகிறது என்றார்.

Please Wait while comments are loading...