twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பப்ளிசிட்டிக்காக நடிகைகளைப் பாட வைக்க மாட்டேன்!- இசையமைப்பாளர் சத்யா

    By Shankar
    |

    சென்னை: வெறும் பப்ளிசிட்டிக்காக நடிகைகளை நான் பாட வைக்க மாட்டேன். தேவைப்பட்டால் மட்டுமே பாட வைப்பேன் என்று இசையமைப்பாளர் சத்யா கூறியுள்ளார்.

    எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமானவர் இசையமைப்பளார் சத்யா. நெடுஞ்சாலை, தீயா வேலை செய்யணும் குமாரு, கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா - 2 உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இவரது இசையில் வெளி வந்துள்ள சமீபத்திய படம்.

    Music Director Sathya interview

    தனது இசை பயணம் குறித்து அவர் கூறியதாவது...

    என்னுடைய அப்பா இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார் அவரது கனவை நிறைவேற்றப் பாடுபட்டேன். சிறு வயதிலே கர்னாடக சங்கீதம் பயின்றேன்.

    கங்கை அமரன், ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பலரிடம் கீபோர்டு பிளேயராக பணியாற்றி இருக்கிறேன். பல விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தேன்.

    சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கிய 'ஏன் இப்படி மயக்கினாய்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். ஆனால் ஜெய், அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும்தான் என்னைப் பிரபலமாக்கியது.

    அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் வேளை செய்தேன் சமீபத்தில் வெளியான உன்னோடு கா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் பட பாடல்களின் வெற்றி எனக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    உன்னோடு கா படத்தில் என் மகள் வைமித்ரா ஒரு பாடலை பாடியுள்ளார்.

    Music Director Sathya interview

    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ஆர வல்லி சூர வல்லி என்ற பாடல் மிகவும் பிரபலமாகி உள்ளது.

    இப்போது என்னென்ன படங்கள்?

    தற்போது ஜெட்லி, அசுரகுலம், இயக்குநர் பார்த்திபனின் அடுத்த படம் என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.

    Music Director Sathya interview

    இப்போதெல்லாம் நடிகைகளைப் பாட வைக்கிறார்களே?

    இதுவரை என் இசையில் நடிகைகள் யாரும் பாடியதில்லை. பப்ளிசிட்டிக்காக அதைச் செய்யவும் மாட்டேன். படத்துக்கு, அந்தப் பாடலுக்குத் தேவைப்படும் பட்சத்தில் பாட வைப்பேன்.

    வித்தியாசமாக ஏதாவது செய்திருக்கிறீர்களா?

    ஜெட்லீ என்று ஒரு படம். வித்தியாசமான கதை. அதற்கான பின்னணி இசை புதிய வடிவில் அமைத்திருக்கிறேன்.

    Read more about: interview sathya
    English summary
    Engeyum Eppothum music director Sathya's interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X