»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

காதல் பட இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் விரைவில் திரும்பி வருவார் என்று, அவரை தனது படத்திற்கு புக் செய்துள்ள இயக்குனர்கலாபுதியவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஷங்கர் தயாப்பில் உருவான காதல் படத்தின் இசையமைப்பாளரான ஜோஷ்வாவுக்கு உகாலி என்ற மனைவியும், 2 குழந்தைகளும்உள்ளனர். இந் நிலையில் திடீரென ஜோஷ்வாவை காணவில்லை. பெங்களூரைச் சேர்ந்த கீ போர்டு வாசிப்பாளர் நடாஷா என்றபெண்ணுடன் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை போலீஸாரும்ஜோஷ்வாவையும் அந்தப் பெண்ணையும் தேடி வருகிறார்கள்.

இந் நிலையில் ஜோஷ்வாவின் இரண்டாவது படமான காதல் வளர்த்தேன் பட இயக்குனர் கலாபுதியவன், விரைவில் ஜோஷ்வா திரும்பிவருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

காதல் வளர்த்தேன் படத்திற்கு 6 பாடல்கள் இசையமைத்துத் தர ஒப்புக் கொண்டு ரூ. 6 லட்சம் அட்வான்ஸ் வாங்கியுள்ளார் ஜோஷ்வா. படத்தொடக்க விழாவுக்கு அவர் வரவில்லை. இருந்தாலும் எங்களை அவர் ஏமாற்றி விட மாட்டார் என்று நம்புகிறோம். அவர் நாணயமானவர்.எங்களது வாழ்க்கையை கெடுக்க மாட்டார்.

திட்டமிட்டபடி படப்பிடிப்பு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கும், ஜோஷ்வாவை மாற்றும் எண்ணம் இல்லை என்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil