For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சின்ன வயசு கிரஷ், வாங்கிய அடி, இந்தியில் அறிமுகம்... மொத்தமாக மாறிய கணேஷ் வெங்கட்ராம்!

  By
  |

  சென்னை: மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் இப்போதுதான், முதல் இந்தி படத்தில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம். 'கேங்ஸ் ஆப் பனாரஸ்' என்ற இந்தப் படம், நம்மூர் 'பொல்லாதவனி'ன் ரீமேக்!

  பொல்லாதவன் Remake Guns Of Banaras | Ganesh Venkatraman Exclusive Interview

  'பொல்லாவதன்ல டேனியல் பாலாஜி பண்ணிய கேரக்டர்லதான் நடிக்கிறேன். ஆனா, இந்தியில அந்த கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. விக்ரம் சிங் அப்படிங்ற வில்லனா நடிச்சிருக்கேன். டிரக் அடிக்டா, ரொம்ப கரடுமுரடனா லுக்ல வர்றேன். இந்தப் படத்துக்காக, பனாரஸ் பகுதியில சில காலம் தங்கி, அங்க உள்ள கல்ச்சரை தெரிஞ்சுகிட்டு, அந்த கேரக்டரா மொத்தமா மாறியிருக்கேன்' என்கிறார் கணேஷ் வெங்கட்ராமன்.

  குட்டி ஸ்டோரியை கண்டுக்காத அட்லீ.. ட்விட்டரில் வளைத்த விஜய் ரசிகர்கள்.. குவியும் ட்ரோல்கள்!

   உங்களுக்கு இந்தி தெரிஞ்சிருந்தாலும் பனராஸ் ஸ்லாங் வேற மாதிரி இருக்குமே?

  உங்களுக்கு இந்தி தெரிஞ்சிருந்தாலும் பனராஸ் ஸ்லாங் வேற மாதிரி இருக்குமே?

  கண்டிப்பா. நீங்க சொன்ன மாதிரி பனாரஸ் ஸ்லாங் வேறதான். அதுக்காக எனக்கு ஒரு வாத்தியார் ரெடி பண்ணிருந்தாங்க. அவர் எனக்கு 15 நாள் பயிற்சி கொடுத்தார். முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, பிக்கப் பண்ணிட்டேன். பிறகு நல்ல பேசினதாக அந்த வாத்தியாரே சொன்னார்னா பாருங்க.

   தமிழ்லதான் கவனம் செலுத்திட்டு இருந்தீங்க... இந்த வாய்ப்பு எப்படி கிடைச்சது?

  தமிழ்லதான் கவனம் செலுத்திட்டு இருந்தீங்க... இந்த வாய்ப்பு எப்படி கிடைச்சது?

  நான் எப்பவும் இந்தியில கவனம் செலுத்தியதில்லை. தமிழ்லதான் நல்ல கேரக்டர்கள்ல நடிக்கணும்னு ஆசை. தெலுங்குல ஒரு படத்துல வில்லன் கேரக்டர் பண்ணியிருந்தேன். நாகார்ஜூனா நடிச்சிருந்த அந்தப் படம் ஹிட்டாச்சு. 'கேங்ஸ் ஆப் பனாரஸ்' டைரக்டர் ஐதராபாத் காரர். அவர் அதுல என் நடிப்பைப் பார்த்துட்டு ரெகமன்ட் பண்ணியிருக்கார். தயாரிப்பாளரும் இப்படி ஒரு ஆள்தான் வேணும்னு ஓகே சொல்லிட்டாங்க. அப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது.

   இதோட டிரைலரை மாதுரி தீக்‌ஷித் அறிமுகப்படுத்தி இருக்காங்களே?

  இதோட டிரைலரை மாதுரி தீக்‌ஷித் அறிமுகப்படுத்தி இருக்காங்களே?

  ஆமா. அவங்க மேல எனக்கு சின்ன வயசுல இருந்தே கிரஷ் இருந்தது. காதலர் தினமும் அதுவுமா அவங்க, நான் நடிச்ச இந்தி பட டிரைலரை வெளியிட்டதுதான் எனக்கு கிடைச்ச, வாலண்டைன்ஸ் டே பரிசு. இந்த படத்தோட டிரைலர் பார்த்துட்டு பாராட்டினாங்க. குறிப்பா என் கேரக்டரை குறிப்பிட்டுச் சொன்னாங்க. இந்தப் படத்தோட சண்டை காட்சியை அமைச்சது, ஷாம் கவுசல். பிரபல இந்தி நடிகர் விக்கி கவுஷலோட அப்பா. ரொம்ப கஷ்டப்படுத்திட்டார். காட்சிகள் யதார்த்தமா அமையணும்னு நிஜமாவே அடி வாங்கியிருக்கேன்.

   அடுத்து என்ன யூகி சேது படத்துல நடிக்கிறீங்களாமே?

  அடுத்து என்ன யூகி சேது படத்துல நடிக்கிறீங்களாமே?

  ஆமா. இதுல லீட் ரோல் பண்றேன். என் கேரக்டர் பற்றி, டைரக்டர் யூகிசேதுவே சொல்வார். 80 சதவிகித ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. மார்ச் மாதம் மொத்த ஷூட்டிங்கும் முடிஞ்சிரும். முழுக்க லண்டன்லதான் ஷூட்டிங் நடந்திருக்கு. ரொம்ப மிரட்டலா இருக்கும். அப்புறம் தெலுங்குல

  'தாடி'ன்னு ஒரு படம் பண்றேன். இதுல நான் நடிகர், நம்ம ஶ்ரீகாந்த், சினிமா பத்திரிகையாளரா நடிக்கிறார். வெவ்வேறு பின்னணிகளை கொண்ட இரண்டு பேர் சேர்ந்து சமூக பிரச்னையை தீர்க்க எடுக்கிற முயற்சிகள்தான் படம்.

   நீங்க சினிமாவுக்கு 10 வருஷமாச்சு... ஹேப்பிதானா?

  நீங்க சினிமாவுக்கு 10 வருஷமாச்சு... ஹேப்பிதானா?

  கண்டிப்பா. அடிக்கடி என் லைஃபை திருப்பிப் பார்ப்பேன். நான் அமெரிக்காவுல படிச்சுட்டு இருந்திருக்க வேண்டியவன். இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் பலபேரோட வாழ்க்கையை மாற்றி அமைச்சிருக்கும். அது என் வாழ்க்கையையும் மாற்றி அமைச்சிருக்கு. அந்த சம்பவத்தால அமெரிக்காவுல படிக்கிறதுக்கான ஸ்காலர்ஷிப் எனக்கு கிடைக்கலை. அதனால, இந்த துறைக்கு வந்தேன். சினிமாவுல ஆரம்பத்துல இருந்து இப்ப வரைக்கும் என் வளர்ச்சி படிப்படியா இருக்கு. இது எனக்கு மகிழ்ச்சிதான். ரொம்ப ஹேப்பியா போயிட்டிருக்கு. 'கேங்க்ஸ் ஆப் பனாரஸ்' வந்தா, வித்தியாசமான கேரக்டர்களை தமிழ் டைரக்டர்கள் எனக்குத் தருவாங்கன்னு நம்பறேன்.

  English summary
  Actor Ganesh Venkatram, will be making his Bollywood debut with the film 'Guns of Banaras'. whose trailer was launched recently in Mumbai by Bollywood heart throb Madhuri Dixit
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X