»   »  5 நாயகிகள்-ஒரு அபார அனுபவம்!

5 நாயகிகள்-ஒரு அபார அனுபவம்!

Subscribe to Oneindia Tamil

நான் அவனில்லை படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு அணுக்கும், அந்தப் படம் அபார அனுபவமாகவே இருந்திருக்கும். காரணம் படத்தில் ஒன்றுக்கு ஐந்து நாயகிகளாச்சே!

ஏற்கனவே ஐந்து நாயகிகளுடன் இணைந்து நடித்த அனுபவத்தை சிலாகித்துக் கூறி விட்டார் அதிர்ஷ்ட நாயகன் ஜீவன். இப்போது இயக்குநர் செல்வாவின் பங்கு.

நான் அவனில்லை படத்தில் சினேகா, நமீதா, கீர்த்தி சாவ்லா, மாளவிகா, ஜோதிர்மயி என ஐந்து அட்டகாச நாயகிகள். ஒரு நாயகியை வைத்தே சமாளிக்க முடியாமல் (உதாரணம்: நிலா!) திணறுகிறார்கள் இயக்குநர்கள். நீங்கள் எப்படி ஐந்து பேரையும் கையாண்டீர்கள், கஷ்டமாக இல்லையா? என்று இயக்குநர் செல்வாவைப் பிடித்து செல்லமாக கலாய்த்தோம்.

நாம் கலாய்த்த இடம் ஐம்பெரும் நாயகிகளுடன் ஜீவன், செல்வா ஆகியோர் இணைந்து கொடுத்த பேட்டி. சினேகா சில்லென்ற காஸ்ட்யூமில் வந்து கலக்கினார். நமீதா போர்த்திய உடையுடன் வந்து போரடித்தார். மாளவிகாவோ, கல்யாணமான அறிகுறியே இல்லாத வகையில் படு கலர்புல் ஆடையுடன் வந்து கலங்கடித்தார். கீர்த்தியின் உடலில் இஞ்ச் கணக்கில்தான் உடை ஒட்டிக் கொண்டிருந்தது. ஜோதிர் மயியும் தன் பங்குக்கு ஜொலித்தார்.

இவர்களின் அசைவுகளையும், நெகிழ்ச்சியான கட்டங்களையும் படம் எடுக்க பத்திரிக்கை புகைப்படக்காரர்களிடையே போட்டா போட்டியே நடந்தது.

ஓவர் டூ செல்வா. இந்தப் படம் கே.பாலச்சந்தர் இயக்கிய படம். அதை சிறப்பாக செய்ய வேண்டுமே என்ற பயத்துடன்தான் இயக்கினேன்.

தமிழ் சினிமா உலகில் ஒரே படத்தில் நடித்த அத்தனை நாயகிகளும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.

ஐந்து பேரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். நன்கு ஒத்துழைத்தனர். ஒரு சண்டை கூட இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அவ்வளவு ஒற்றுமையாக நடித்தார்கள்.

எனக்கு இவர்களைக் கையாளுவது கஷ்டமாகவே இல்லை. எனக்கு கஷ்டமே கொடுக்கவில்லை யாரும் (அப்ப நீங்க கொடுத்தீங்களா அய்யா?). ஈகோ பிரச்சினை எதுவும் இல்லாமல், தோழிகள் போலப் பழகினார்கள்.

ஜீவன்தான் ஜெமினி சார் ரோலில் நடித்துள்ளார். ஒரிஜினல் நான் அவனில்லை படத்தில் ஜெமினியின் ஒரு ஜோடியாக நடித்திருந்த லட்சுமி மேடம் இந்தப் படத்திலும் இருக்கிறார். ஆனால் நீதிபதி வேடத்தில் நடித்துள்ளார் (நல்ல வேளையாப் போச்சு போங்க)

லட்சுமி நடித்த வேடத்தில்தான் சினேகா இப்படத்தில் நடிக்கிறார். மாளவிகாவுக்கும், நமீதாவுக்கும் சிறப்பான ரோல். பி.ஆர்.வரலட்சுமி நடித்த வேடத்தில் மாளவிகாவும், ராஜ சுலோச்சனா வேடத்தில் நமீதாவும் நடித்துள்ளனர்.

ஜெயபாரதி நடித்த வேடத்தில் ஜோதிர்மயி நடித்துள்ளார். ஜெயசுதா நடித்த வேடத்தை கீர்த்தி சாவ்லா செய்துள்ளார்.

ஒரிஜினல் படத்தில் இருந்த சில காட்சிகளை இதில் மாற்றி அமைத்துள்ளேன். இப்போதைய ரசிகர்களுக்குப் பொருத்தமாக அதை செய்துள்ளேன் என்றார் செல்வா.

ஐந்து நாயகிகள் ஆச்சே, யாருக்கு ஜாஸ்தி சம்பளம் கொடுத்தேள் என்று செல்வாவிடம் கேட்டதற்கு படு டிப்ளமேட்டிக்காக, அதை தயாரிப்பாளரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறி எஸ்கேப் ஆனார்.

ஹய்யோ, ஹய்யோ!

Please Wait while comments are loading...