பிரிந்தது உடல் தான்.. அவரின் நினைவே போதும்.. கணவரை நினைத்து கலங்கும் ஸ்ருதி சண்முகப்பிரியா!
சென்னை: நாதஸ்வரம் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. அந்த சீரியலைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் 2022 ஆம் ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அரவிந்த் திருமணமான ஒரு வருடத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் நினைவில் இருந்து மீளாமல் இருந்த ஸ்ருதி சண்முகப்பிரியா மீண்டும் சீரியல்களில் நடித்து வருகிறார். அவரின் பேட்டியை தற்போது பார்க்கலாம்.
சேள்வி: 15 வருடத்திற்கு முன்பு ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் இப்போதும் மீண்டும் ரீ டெலிகாஸ்டாகி டிஆர்பியில் முன்னணியில் இருக்கிறது அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: நான் நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிறது. பல சீரியல்களில் நடித்து விட்டேன். ஆனால், இப்போது வரை, நாதஸ்வரம் சீரியலில் நடித்ததை பலரும் பேசி வருகிறார்கள். நான் நடிக்கும் சீரியல்களுக்கு எனக்கு அங்கீகாரம் கிடைத்தாலும், நாதஸ்வரம் சீரியலில் நான் நடித்த ராகினி கதாபாத்திரத்தை இன்னும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கேள்வி: இயக்குநர் திருமுருகன் அடுத்ததாக சீரியல் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அது எப்போது தொடங்கும்?
பதில்: அது எப்போது தொடங்கும் என தெரியவில்லை. ஆனால், அதற்காக நாங்கள் ஆர்வமாக காத்துக் கொண்டு இருக்கிறோம். அது நாதஸ்வரம் 2வாக இருந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். ஏனென்றால், மீண்டும் அனைத்து உறவுகளையும் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் அதற்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.
கேள்வி: நீங்கள் நடிகையாவதற்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததா?
பதில்: என்னுடைய ஆசைக்கு அவர்கள் குறுக்கே நிற்கவில்லை, படிப்பு தான் முக்கியம், அதற்கு எந்தவிதமான பாதிப்பும் வரக்கூடாது என்று சொன்னார்கள். இதனால், தினமும் கல்லூரிக்கு சென்று கொண்டு தான் நாதஸ்வரம் சீரியலில் நடித்தேன். இப்போது நான், மூன்று டிகிரி படித்து இருக்கிறேன் . அதற்கு காரணம் என் பெற்றோர் அவ்வளவு கடுமையான இருந்தது தான்.
கேள்வி : உங்களால் மறக்க முடியாத சைல்டுவுட் மெமரி என்ன?
பதில்: நான் பள்ளியில் படித்து முடிக்கும் நேரத்தில் 17 வயதிலேயே நடிக்க வந்து விட்டதால், கல்லூரியில் நடிகையாக என்னை பலர் பார்த்ததால், என்னால் எதார்த்தமாக இருக்க முடியவில்லை. ஆனால், பள்ளியில் படிக்கும் போது நான் நானாக இருந்தேன், எனக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்தேன் அந்த நினைவுகளை என்னால் என்றுமே மறக்க முடியாது.

கேள்வி: உங்கள் கணவர் அரிவிந்த் பற்றி சொல்லுங்க.
பதில்: எனக்கு எல்லாமே அவன் தான். அரவிந்த் இப்போது உயிரோடு இல்லை என்றாலும், நண்பர்களிடம் பேசும் போதும், நான் தனியாக இருக்கும் போதும் அவனைப் பற்றி பேசிக்கொண்டே நினைத்துக் கொண்டுதான் இருப்பேன். நான் நினைக்க நினைக்க அவனுடைய நினைவுகள் எப்பொழுதும் என்னுடன் தான் இருக்கும். அவனுடைய நண்பர்கள் மூலமாகவோ, என்னுடைய நினைவுகள் மூலமாகவோ அவன் என்னுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
கேள்வி: உங்கள் கணவர் அரவிந்தின் மறக்க முடியாத நினைவுகள் என்ன?
பதில்: இப்போது அரவிந்தின் நினைவுகள் மட்டும் தான் என்னுடன் இருக்கிறது. அவரின் நினைவுகளுடன் தான் நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன். ஆனால், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், திருமணத்திற்கு முன்பு 'தீரா காதல்' பாடலை ஃப்ரீ வெட்டிங் சூட்டிங் எடுத்ததை என்னால் நிச்சயமாக மறக்கவே முடியாது, அது ஒரு நல்ல நினைவாக மனதில் இருக்கிறது என்று ஸ்ருதி சண்முகப்பிரியா அளித்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











