»   »  நக்மாவின் தேடல்!

நக்மாவின் தேடல்!

Subscribe to Oneindia Tamil


எனக்கே, எனக்கான ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்று மனம் திறந்து கூறியுள்ளார் முன்னாள் நாயகி நக்மா.


தென்னிந்திய சினிமாவை ஒரு காலத்தில் கலக்கியவர் நக்மா. கிளாமரால் மட்டுமல்ல நடிப்பாலும் ரசிகர்களை மிரட்ட முடியும் என்பதை நிரூபித்தவர் நக்மா. படு வேகமாக போய்க் கொண்டிருந்த நக்மாவின் திரை வாழ்க்கையில் சரத்துடன் கொண்டிருந்த காதல் முறிவுக்குப் பின்னர் பெரும் தொய்வு ஏற்பட்டது.

சென்னையிலிருந்து மூட்டை முடிச்சுகளோடு மும்பைக்கேத் திரும்பிப் போனார் நக்மா. அங்கு போன பின்னர் தென்னிந்திய சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் சுத்தமாக நழுவிப் போய் விட்டன.

தற்போது போஜ்புரி மொழிப் படங்களில் நக்மாதான் டாப் ஸ்டாராக மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.

நடிக்க வந்த இத்தனை ஆண்டு காலத்தில் பலருடன் இணைத்து பயங்கரமாக கிசுகிசுக்கப்பட்டவர் நக்மா. முதலில் சரத்குமார். பிறகு பிரபுதேவா, அப்புறம் கிரிக்கெட் ஸ்டார் செளரவ் கங்குலி என தொடர்ந்து பலருடன் வரிசையாக இணைத்துப் பேசப்பட்டவர் நக்மா.

ஆனாலும் தன்னைப் பற்றிய கிசுகிசுக்களாக் நக்மா ஒருபோதும் கலங்கியதில்லை. மாறாக தனது வேலைகளில் படு தீவிரமாக இருந்து விடுவார்.

இந்த நிலையில்தான் தனது வாழ்க்கையில் ஆண் துணை இல்லாதது பெரும் சூனியமாக இருப்பதாக நக்மா மனம் திறந்து கூறியுள்ளார்.

வர் அளித்த பேட்டியில்,

என்னை உண்மையாக நேசிக்கும், நல்ல மனம் படைத்த, நீண்ட நெடிய வாழ்க்கைத் துணைக்கு தகுதியான ஒருவருக்காக காத்திருக்கிறேன்.

எனது வாழ்க்கையில் பலரை நான் சந்தித்துள்ளேன். அப்போதெல்லாம் உண்மையான அன்புடன் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் துரதிர்ஷ்டவசமாக யாருமே அப்படி இல்லை.

மும்பையில் இப்போது நான் தனித்து வசித்து வருகிறேன். என்னைச் சுற்றிப் படப்பிடிப்புகள், புதிய படங்களின் ஒப்பந்தங்கள் என சினிமா வாழ்க்கை பிசியாகத்தான் உள்ளது. ஆனால் எனது வாழ்க்கையில்தான் சூனியம் ஆக்கிரமித்துள்ளது.

எந்தவித குடும்ப பந்தமும் இல்லாமல், குடும்ப உறவுகளும் இல்லாமல் தனித்து வாழ்கிறேன்.

எனது தங்கை ஜோதிகாவைப் போல நானும் திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்படுகிறேன். எனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

கடந்த காலங்களில் தவறான சிலரிடம் என்னை நான் ஒப்படைத்து தவறு செய்து விட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போதுதான் நான் உணர்ந்துள்ளேன். இருந்தாலும் எனக்கு நம்பிக்கை விட்டுப் போகவில்லை.

எனக்கே, எனக்கென்று ஒரு ஆண் மகன் கண்டிப்பாக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார் நக்மா.

நல்ல நம்பிக்கை என்றுமே வீண் போனதில்லை நக்மா, பி சியர்ஸ்!

Read more about: nagma

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil