For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சொந்த மருமகளை மிரட்ட முடியுமா? ஜாங்கோ இசை வெளியீட்டில் செம நக்கலாக பேசிய ’நக்கலைட்ஸ்’ தனம் அம்மா!

  |

  சென்னை: பிரபல யூடியூப் சேனலான 'நக்கலைட்ஸ்' யூடியூப் சேனலில் அம்மாவாக நடித்து கலக்கி வரும் தனம் அம்மாவுக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

  எனக்கு 25 வயசுதான் ஆகுது | Nakkalites Dhanam amma Fun speech | Jango audio launch | Filmibeat Tamil

  10க்கும் மேற்பட்ட புதிய படங்களில் அம்மா உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

  வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் நடத்தியும் பலன் இல்லாம போயிடுச்சே.. புலம்பும் இடுப்பு நடிகை! வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் நடத்தியும் பலன் இல்லாம போயிடுச்சே.. புலம்பும் இடுப்பு நடிகை!

  சமீபத்தில் நடந்த ஜாங்கோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் ஏகப்பட்ட நகைச்சுவை நக்கல்களை அள்ளி வீசி ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்க செய்தார்.

  நக்கலைட்ஸ் தனம் அம்மா

  நக்கலைட்ஸ் தனம் அம்மா

  கோவையை சேர்ந்த குசும்புக்கார பசங்க எல்லாம் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் நைட்டியுடன் மிரட்டல் அம்மாவாக நடித்து அசத்திய தனம் அம்மாவுக்கு தமிழ் சினிமாவில் தற்போது ஏகப்பட்ட படங்கள் கைவசம் உள்ளதாக ஜாங்கோ இசை வெளியீட்டு விழாவில் அவரே கூறியுள்ளார்.

  25 வயசு தான்

  25 வயசு தான்

  ஆச்சி மனோரமா சொல்வதை போலவே எப்போதுமே நடிகைகளுக்கு வயது 25ஐ தாண்டாது. எனக்கும் 25 வயசு தான். ஆனால், இவங்க தான் அம்மா, பாட்டி என கதாபாத்திரங்கள் கொடுக்கிறாங்க, குறைந்த பட்சம் அக்கா கதாபாத்திரம் கொடுத்தா நல்லா இருக்கும் என செம நக்கலாக தனது பேச்சை ஆரம்பிக்க அரங்கமே சிரிப்பலையில் மிதந்தது.

  ஒரே நாளில் 7 புடவை

  ஒரே நாளில் 7 புடவை

  இந்த படம் முழுக்க நான் நடித்தது போல இருக்கும். ஆனால், ஒரே ஒரு நாள் தான் இந்த படத்தில் நான் நடிச்சேன். பெரிய வீட்டு பெண் கதாபாத்திரம்மா நல்லா காஸ்ட்லியான பட்டுப் புடவையோடு வாங்க என இயக்குநர் சொன்னதும், நான் லோயர் மிடில் கிளாஸ் சார், என் கிட்ட இருக்க நல்ல புடவையை எடுத்துட்டு வரேன் என்று சொன்னேன். ஒரே நாளில் 7 புடவையையும் கட்டி படம் முழுக்க நடித்தது போல மாற்றிய தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் தான் அந்த பாராட்டுக்கள் போய் சேரணும் என்று தொழில் ரகசியத்தையும் படாரென போட்டு உடைத்தார்.

  சொந்த மருமகளிடம்

  சொந்த மருமகளிடம்

  யூடியூபில் பிரபலமான உடன் டிவி தொடர்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. முதலில் அதெல்லாம் நமக்கு செட் ஆகாது என நினைத்தேன். இப்போ அதுவும் நல்லா தான் இருக்கும் என தோணுது. மாமியார் கதாபாத்திரத்தில் நடித்தால் மருமகளை எப்படி எல்லாம் பழி வாங்கலாம். சொந்த மருமகளிடம் அப்படியெல்லாம் நிஜத்தில் பேச முடியுமா என்ன? என கேள்வி எழுப்பி மீண்டும் அரங்கத்தை அதிர செய்தார்.

  டைம் லூப் கான்செப்ட்

  தெலுங்கில் அமலா பால் நடிப்பில் வெளியான வெப்சீரிஸ் குடி எடமாயித்தே போலவே தமிழில் முதன் முறையாக டைம் லூப் கான்செப்ட்டில் ஜாங்கோ திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை சிவி குமார் தயாரிக்க அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்கி உள்ளார். அறிமுக நடிகர் சதீஷ் குமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஒரே நாளில் நடக்கும் கதையாக உருவாகி உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் பேசிய பல வீடியோக்கள் நமது தமிழ் பிலிமி பீட் யூடியூப் தளத்தில் உள்ளது. கண்டு ரசியுங்கள்!

  English summary
  Nakkalaites Dhanam Amma funny speech at upcoming Jaango movie audio launch recently happened in Chennai Satyam theater video goes viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X