»   »  நமீதாவின் அவா!

நமீதாவின் அவா!

Subscribe to Oneindia Tamil

சினிமாவில் சூட்டைக் கிளப்பி வரும் நமீதா, படு அணலான அரசியல் பக்கமும் ஒரு கண் வைத்திருப்பது போலத் தெரிகிறது. அவரது பேச்சில் லேசு பாசாக அந்த அரசியல் அவா தெறிப்பதை உணரலாம்.

மூத்தவர்களுடன் ஒரு ரவுண்டை முடித்து விட்ட நமீதா, இப்போது இள வயசு ஹீரோக்களுடன் அடுத்த அட்டகாசத்தை ஆரம்பித்துள்ளார். விஜய், அஜீத், சிம்பு என படு தெம்பாக ரவுண்டு கட்ட ஆரம்பித்துள்ள நமீதா, சைடில் ரசிகர் மன்றங்களையும் முடுக்கி விட்டு வெளுத்துக் கட்டி வருகிறார்.

இன்னிக்கு தேதியில், நமீதா கையில் 6 தமிழ்ப் படங்கள் உள்ளதாம். எங்கள் அண்ணாவில் ஆரம்பித்து நான் அவனில்லை வரை அமர்க்களப்படுத்தி வரும் நமீதா, நான் அவனில்லை படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதால் குஷியாகியுள்ளார்.

இப்படத்தில் ஐந்து நாயிககள் என்றாலும் கூட நமீதாவின் ரோல்தான் வெயிட்டான ஒன்றாம். ரசிக்கும்படியும், கிறங்கும்படியும் கில்லி போல வந்திருக்கிறது நமீதாவின் கேரக்டர்.

மூத்த நடிகர்களுடன் நடித்து முடித்தாகி விட்டது. அடுத்து இளம் தலைமுறையினருடன் ரவுண்டு கட்ட ஆரம்பித்தாகி விட்டது. அடுத்து இலக்கு என்னவோ என்று நமீதாவிடம் கேட்டால், சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும். அதுதான் பாக்கி என்று கணக்கு காட்டுகிறார்.

ரஜினி சாருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். இதற்காக ரஜினி சாரை நேரில் சந்தித்து கெஞ்சக் கூடத் தயாராக இருக்கிறேன். ஒரு நடிகையாக இதுதான் எனது வாழ்க்கை லட்சியம்.

நான் அவனில்லை படத்தில் எனக்கு கிடைத்த ரோல் பெருமையைத் தருகிறது. மிகச் சிறந்த கேரக்டர் அது. நன்றாக நடித்துள்ளேன். ரசிகர்களும் சிறப்பான வரவேற்பைத் தந்துள்ளனர். குஷியாக உள்ளேன்.

படம் ரிலீஸ் ஆனதிலிருந்தே எனக்கு போன் கால்கள் வந்தவண்ணம் உள்ளன. எல்லாம் பாராட்டுக்கள்தான். பல நடிகர், நடிகைகளும் கூட எனது நடிப்பைப் பாராட்டியுள்ளனர்.

எனவே இனிமேல் சதையை மட்டும் நம்பாமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிக்கப் போகிறேன். கதைக்குத் தேவைப்பட்டால் கிளாமர் காட்டுவேன். அதில் எப்போதுமே எனக்குத் தயக்கம் இருந்ததில்லை.

ரசிகர் மன்றம், சமூக சேவை என கிளம்பியுள்ளீர்களே, அந்த ஆசை இருக்கிறதோ என்று டபாய்த்தோம். சமூகத்தில் தேவையானவர்களுக்கு உதவுவதில் என்ன தவறு இருக்க முடியும். நான் ரசிகர் மன்றம் ஆரம்பித்த பின்னர் பலரும் வந்து பல்வேறு உதவிகளைக் கேட்கின்றனர். இதில் எனக்கு மன திருப்தியும், சந்தோஷமும் ஏற்படுகிறது.

இதைப் பார்த்து சிலர் அரசியலில் சேரப் போகிறீர்களா என்று கேட்கிறார்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்கள். சரியான நேரத்தில் சரியான முடிவை நானும் எடுப்பேன் என்றார் நமீதா.

இவரும் வருவாரா என்று எதிர்பார்த்து இலவு காத்திருப்போம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil