»   »  எல்லோருமே எனக்கு வசதிதான்: நமீதா

எல்லோருமே எனக்கு வசதிதான்: நமீதா

Subscribe to Oneindia Tamil

சப்பையோ, குப்பையோ, நெட்டையோ, குட்டையோ, எல்லா ஹீரோக்களுடனும் சேர்ந்து நடிக்க நான் தயார்தான் என்று அதிரடியாக கூறியிருக்கிறார் நமீதா.

நெகு நெகுவென ஓங்கு தாங்காக வளர்ந்திருக்கும் நமீதாவுடன் ஜோடி போட இளம் நடிகர்களுக்கு லேசாக பயம்தான். காரணம் நமீதாவின் பனை மர உயரம்.

சத்யராஜ், சரத்குமார் போன்ற ஓரிரு ஹீரோக்களுக்கு மட்டுமே பொருத்தமானவராக இருப்பார் நமீதா என்ற கருத்தும் கோலிவுட்டில் உண்டு.

ஆனால் நமீதாவின் கருத்தோ வேறு மாதிரியாக இருக்கிறது. ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்த நான் அவனில்லை பட செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஜில்லென்று வந்திருந்த நமீதாவை ஓரமாக கூட்டிக் கொண்டு போய் கொஞ்ச நேரம் உசாவினோம்.

சில்லென்ற தென்றல் போல நம்மிடம் நமீதா கொட்டிய முத்துச் சிதறல்களிலிருந்து சில துளிகள் இதோ ...

எந்த ஹீரோவுடனும் சேர்ந்து நடிக்க நான் தயார்தான். உயரமான நடிகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று கூறவே மாட்டேன். உயரமோ, குள்ளமோ, யாருடனும் சேர்ந்து நடிக்க நான் தயார்தான். எல்லா ஹீரோக்களுக்கும் நான் பொருத்தமாகத்தான் இருப்பேன்.

என்னுடன் நடிக்க எந்த ஹீரோவுக்கும் அசவுகரியமாக இருக்காது, சொகுசாகத்தான் இருக்கும்.

விஜய்யுடன் தற்போது நடித்து வரும் அழகிய தமிழ் மகன் படத்தில் எனது போர்ஷனை எடுத்து முடித்து விட்டார்கள். அதுக்கு மேல என் கிட்ட கேட்காதீங்க, மத்த விஷயங்களை சொல்லக் கூடாதுன்னு டைரக்டர் சொல்லியிருக்கிறார் என்று செல்லமாக சிரித்து நிறுத்தினார் நமீதா.

உங்க உயரத்தைப் பார்த்து பல ஹீரோக்கள் பயப்படுறாங்களே என்று நாம் வம்பு வளர்த்தோம். அதற்கு செல்லமாக சிணுங்கியபடி, கண்டிப்பா அப்படிச் சொல்ல மாட்டாங்க. எனது உயரம் ஒரு பிரச்சினையே கிடையாது. எந்த ஹீரோவுடனும் சேர்ந்து நடிக்கக் கூடிய உடல் வாகு எனக்கு உள்ளது.

எந்த மாதிரியான உடல் வாகுடனும் கூடிய ஹீரோவுடனும் அட்ஜஸ்ட் செய்து நடிக்கக் கூடிய அளவுக்கு எனது உடல் வாகு இருக்கிறது. ஆரம்பத்தில் சத்யராஜ் சாருடன் சேர்ந்து நடித்தேன். பிறகு சரத்குமாருடன் இணைந்தேன். இப்போது விஜய்யுடன் இணைந்துள்ளேன். ஜீவனுடனும் சேர்ந்திருக்கிறேன்.

இதுவே எனது உடல் வாகுக்கும், ஜோடி சேருவதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிரூபிக்கும். எந்த ஹீரோவுடனும் சேர்ந்து நடிக்க வசதியானவள்தான் இந்த நமீதா என்கிறார் முகத்தில் துளிர்த்த வியர்வையை ஸ்டைலாக ஒத்தியபடி.

நான் அவனில்லை படத்தில் அழகான, அமர்க்களமான பிசினஸ் பெண்மணியாக நடிக்கிறாராம் நமீதா. ஜீவனை விரட்டி விரட்டிக் காதலிப்பவராகவும் வருகிறார். காதல் கலையைச் சொல்லித் தருகிறாராம்.

ஒரு பெண் காதல் கலையை சொல்லித் தரும்போது இரும்பான இதயங்களும் உருகிப் போகும். அதிலும், நமீதா போன்ற அழகான இமயமலை சொல்லித் தந்தால் எப்படி இருக்கும். படத்தைப் பார்க்கப் போகும் இளவட்டங்களுக்கு இனி இரவெல்லாம் அக்கப் போர்தான்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil