»   »  கிஸ்ஸுக்கு மறுத்த நமீதா!

கிஸ்ஸுக்கு மறுத்த நமீதா!

Subscribe to Oneindia Tamil

குத்தாட்டம், கும் முத்தம் இரண்டும் எனக்குப் பிடிக்காது, அப்படிப் பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறுகிறார் திடமான நமீதா.

குத்தாட்டம், கும் முத்தம் இரண்டும் எனக்குப் பிடிக்காது, அப்படிப் பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறுகிறார் திடமான நமீதா.

கவர்ச்சிப் புயலாக தமிழ் சினிமாவுக்கு வந்து, கிளாமர் சுனாமியாக மாறி களேபரப்படுத்தி வருபவர் நமீதா. ஆரம்பத்தில் மூத்த ஹீரோக்களுடன் முத்துக் குளித்து வந்த நமீதா இப்போது விஜய், அஜீத், சிம்பு என இளவட்டங்களுடன் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளார்.

விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜீத்துடன் பில்லா-2, சிம்புவுடன் கெட்டவன் என பிசியாகி இருக்கிறார் நமீதா. மூத்த ஹீரோக்களுக்கு இனி ஸாரியா என்று நமீதாவிடம் கலாய்த்தபோது அப்படியெல்லாம் இல்லை. எந்த ஹீரோவுடனும் நடிக்க நான் தயாராகத்தான் இருக்கிறேன். யாருடனும் நான் ஈசியாக மேட்ச் ஆவேன் என்று முகத்தில் துளிர்த்த முத்து வியர்வையை ஒத்தி விட்டபடி கூலாக சொன்னார் நமீதா.

முதல் முறையாக விஜய், அஜீத்துன் இணைந்துள்ளேன். அதேபோல சிம்புவுடனும் இணைந்துள்ளேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிம்புவுடன் நடிப்பது குறித்து பலரும் தேவையில்லாமல் குழப்பமாக பேசுகிறார்கள்.

நான் யாருடனும் நடிப்பேன், அதில் எனக்கு பயமோ, தயக்கமோ இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பர்சனல் லைப் இருக்கும். அதில் நாம் தலையிட முடியாது. அதைப் பார்த்து தயங்கவும் கூடாது. ஒரு நடிகையாக சிம்புவுடன் இணைந்து நடிக்கிறேன், தட்ஸ் ஆல் என்றார்.

குத்துப் பாட்டுக்கு ஆடுவது ஃபேஷனாகி விட்டது. நீங்கள் மட்டும் ஆடாமல் இருக்கிறீர்களே என்றபோது, ஒரு பாட்டுக்கு ஆடுவதாக இருந்தால் இந்நேரம் எக்கச்சக்கமான படங்களில் ஆடியிருப்பேன். எத்தனை பேர் என்னிடம் குத்துப் பாட்டுக்காக அணுகினார்கள் தெரியுமா? ஆனால் எனக்குத்தான் அதில் உடன்பாடு கிடையாது.

கோடி ரூபாய் கொடுத்தாலும் குத்துப் பாட்டுக்கு ஆட மாட்டேன். அதேபோல எனக்குப் பிடிக்காத இன்னொரு விஷயம் முத்தக் காட்சி. பப்ளிக்காக ஆயிரக்கணக்கானோர் பார்க்க முத்தம் கொடுப்பது அருவறுப்பான விஷயம். அது இருவர் மட்டும் பகிர்ந்து கொள்ளக் கூடிய இதமான அனுபவம். அதை கொச்சைப்படுத்தக் கூடாது.

முத்தம், குத்து இரண்டிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கவே மாட்டேன். சமீபத்தில் கூட ஒரு இயக்குநர், அதுவும் பெண் இயக்குநர், என்னிடம் அப்படிப்பட்ட ரோலில் நடிக்கக் கூப்பிட்டார். கும்பிடு போட்டு திருப்பி அனுப்பி விட்டேன் என்றார் படபடப்பாக.

கூல் செய்து, கிளாமரை ஓவர் டோஸாக தருகிறீர்களே என்றோம். நான் கிளாமர் நடிகைதான். ஆனால் ஓவராக எல்லாம் கிளாமர் காட்டியதில்லை. அசிங்கமாக, அருவறுப்பாக நான் கிளாமர் காட்ட மாட்டேன். அழகான கிளாமர்தான் என்னோட சாய்ஸ் (அன்லிமிட்டெட் கிளாமர் ரசிகர்களின் சாய்ஸாம்) என்று விளக்கினார் நமீதா.

நமீதா சமீபத்தில் தொடங்கி வைத்த ரசிகர் மன்றத்தில் அதற்குள் 1 லட்சம் பேர் சேர்ந்து விட்டார்களாம். அடுத்து அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி ஏழைகளுக்கு உதவப் போகிறாராம் நமீதா.

அரைகுறை டிரஸ்ஸில் வந்து போகும் நமீதா கூட ஒரு வகையில் ஏழைதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil