»   »  சிம்புவால் வம்பில்லை - நமீதா

சிம்புவால் வம்பில்லை - நமீதா

Subscribe to Oneindia Tamil

சிம்புவுடன் நடிப்பதால் ஒரு பிரச்சினையும் இல்லை. அவருடன் நடிப்பதற்காகப் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் டன்லப் நமீதா.

சிம்புவுடன் ஜோடி சேர ஒரு பக்கம் முன்னணி நடிகைகள் பயந்து, பின்னங்கால் பிடறியில் பட தெறித்து ஓடுகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் சிம்புவுடன் நடிப்பதில் ெபருமை என்று கூறி மாறி மாறி புகழாரம் சூட்டும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சிம்புவுடன் இணைந்து நடிக்க புக் ஆகியுள்ள வேதிகாவும், நமீதாவும் மாறி மாறி சிம்புவைப் பற்றி சிலாகிக்கிறார்கள். முதலில் வேதிகா, சிம்புவைப் பற்றி வியர்க்க விறுவிறுக்கப் பாராட்டினார்.

இப்போது நமீதாவின் டர்ன், அவரும் சிம்பு அபாரம், அற்புதம் என அசத்தலாக பாராட்டியுள்ளார்.

நமீதா உள்ளிட்ட ஐந்து நாயகிகளுன் ஜீவன் நடித்து வெளியாகியுள்ள நான் அவனில்லை படம் ஹிட் ஆகியுள்ளதால் நமீதா சந்தோஷமாகியுள்ளார். அதில் அவரது கிளாமரும், நடிப்பும் பரவலாக பேசப்படவே, குஷியாகிப் போன நமீதா, பத்திரிக்கையாளர்களைக் கூப்பிட்டு சின்னதாக ஒரு விருந்து வைத்து அசத்தினார்.

அப்படியே செய்தியாளர்களுக்குப் பேட்டியும் கொடுத்தார். அதில் சிம்புவைப் பற்றித்தான் பெரிதும் பாராட்டினார் நமீதா.

நமீதா பேசுகையில், நான் அவனில்லை படத்தில் புக் ஆவதற்கு முன்பே அப்படத்தின் ஒரிஜினலை நான் பார்த்து விட்டேன். அப்போதே தெரியும், இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று. அதுபோலவே இப்போது படம் ஹிட் ஆகியுள்ளது.

இப்படத்தில் நடிக்கவும், கிளாமருக்கும் நல்ல வாய்ப்பு உள்ளதை அறிந்துதான் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன். ஐந்து நாயகிகள் நடித்திருந்தாலும் கூட எனது கேரக்டர்தான் வெகுவாக பிரஸ்தாபிக்கப்படுகிறது.

இதனால்தான் நான் ஹீரோயின்கள் எத்தனை பேர் என்று பார்ப்பதில்லை, கதையை மட்டுமே பார்ப்பேன்.

தமிழில் இப்போது ஐந்து படங்கள் என்னிடம் உள்ளன. விஜய்யுடன் அழகிய தமிழ் மகனிலும், அஜீத்துடன் பில்லாவிலும் நடித்து வருகிறேன்.

இரண்டிலுமே எனக்கு மெயின் ஹீரோயின் கேரக்டர் இல்லாவிட்டாலும் கூட எனது கேரக்டர்தான் அதிகம் பேசப்படும், பாருங்கள்.

ஒரே நேரத்தில் விஜய், அஜீத் படங்களில் நடிப்பது பெருமையாக உள்ளது. அதேபோல சிம்புவுடன் கேப்டன் என்ற படத்திலும் நடிக்கிறேன். இதிலும் இன்னொரு ஹீரோயின் இருக்கிறார். ஆனால் எனது கேரக்டருக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று சிம்பு கூறியுள்ளார்.

நானும், அவரும் இப்படம் குறித்து டிஸ்கஸனில் இருந்தபோது, படம் குறித்த பிற தகவல்களை வெளியில் சொல்ல வேண்டாம் என பிராமிஸ் வாங்கிக் கொண்டார். எனவே அதுகுறித்து விளக்கப் போவதில்லை (எங்க உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணீங்க மேடேம்?)

சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு எந்த அசவுகரியமும் இல்லை. சிம்பு என்றில்லை எந்த ஹீரோவுடனும் நடிக்க எனக்கு பிரச்சினை ஏற்பட்டதில்லை. எனது ஒத்துழப்பை குறித்தும், நடிப்பு குறித்தும் யாரும் இதுவரை குறை கூறியதில்லை.

சிம்பு திறமையானவர், சினிமா வித்தைகள் பல தெரிந்தவர். அப்படிப்பட்டவருடன் இணைந்து நடிக்க ஏன் பயப்பட வேண்டும். வேலை தெரியாதவர்களுடன் சேர்ந்து நடிக்கத்தான் பயப்பட வேண்டும்.

மன்மதன், வல்லவன் படத்திலேயே என்னை ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டார் சிம்பு. நான்தான் வெறும் டான்ஸ் வேண்டாமே என்று மறுத்து விட்டேன்.

அதை மனதில் வைத்துத்தான் இப்போது தனது நாயகியாக்கியுள்ளார் சிம்பு. அதேசமயம், எனக்கு நெருக்கமானவர்கள் குத்துப் பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டால் மறுக்க மாட்டேன், உடனே ஒ.கே. சொல்லி விடுவேன்.

ரஜினி சார் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். குத்துப் பாட்டு கிடைத்தால் கூட போதும் உடனே ஒத்துக் கொண்டு விடுவேன் என்று ஜிலிர்ப்புடன் சொன்னார் நமீதா.

ரசிகர் மன்றம் ஆரம்பித்ததன் நோக்கம் என்னவோ?

எனது ரசிகர்களை ஒருங்கிணைத்து செயல்படும் எண்ணத்தில்தான் மன்றம் ஆரம்பித்துள்ளேன். ஏழைகளுக்கு உதவ இந்த மன்றம் பயன்படும். இதில் எந்தத் தவறும் இருப்பதாக நினைக்கவில்லை.

மன்றம் ஆரம்பித்துள்ளதால் நான் ஏதாவது கட்சியில் இணையப் போவதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றார் நமீதா.

தொடர்ந்து கிளாமராக நடிப்பது அலுக்கவில்லையா என்று கேட்டால், இல்லவே இல்லை. சினிமாவே கிளாமர் உலகம்தான். அதில் அப்படித்தான் நடிக்க முடியும். ரசிகர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள், எதை ரசிப்பார்கள் என எனக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்பத்தான் நடித்தும் வருகிறேன்.

எனக்கு என்ன வயதாகி விட்டது, கிளாமர் வேடங்களைப் புறக்கணிக்க. இந்த இளம் வயதில்தான் கிளாமர் காட்ட முடியும். ரசிகர்கள் விரும்பும் வரை, அவர்களுக்கு அலுக்கும் வரை கிளாமர் காட்டி நடிப்பது எனது கடமை. அதிலிருந்து நான் தவற மாட்டேன் என்று கூறி அசத்தினார் நமீதா.

கடமை சரி, கட்டுப்பாடு பிளஸ் கண்ணியத்தையும் பத்திரமாக பார்த்துக் கொண்டால் சரி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil