»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil
கோடம்பாக்கத்தில் ஓல்டு ஹீரோக்கள் மத்தியில் இப்போது மிக டிமாண்டில் இருக்கிறார் நமீதா.

விஜய்காந்துடன் எங்கள் அண்ணாவில் நடித்து தமிழுக்கு அறிமுகமான இவரை, சரத்குமார் தனது ஏய் படத்தில்புக் செய்தார். விடுவாரா சத்யராஜ். அவரது மகா நடிகன் படத்தில் நமீதா தான் வேண்டும் என்று ஒற்றைக் காலில்நின்று ஜோடியாக்கிவிட்டார்.

இந்தப் படத்தில் முதலில் ஹீரோயினாக புக் செய்யப்பட்டவர் மாளவிகா தான்.

தயாரிப்பாளரையும், டைரக்டரையும் பிடித்து, கெஞ்சி அவர்களுக்காக ரொம்பவே விட்டுக் கொடுத்து இந்தஹீரோயின் சான்ஸைப் பிடித்தார் மாளவிகா. ஆனால், நமீதா தான் வேண்டும் என ஹீரோ சத்யராஜ் சொல்லிவிடவேறு வழியில்லாமல் மாளவிகாவை வெட்டிவிட்டு விட்டார்கள்.

தொடர்ந்து இப்படியே ஓல்டு ஹீரோக்களுடனேயே நடித்தால் அடுத்து பிரபுவும் கார்த்திக்கும் ஜோடிபோட்டுவிடுவார்கள் என்று பயத்தில் இருக்கும் நமீதா இப்போதெல்லாம் எந்தத் தயாரிப்பாளராவது கால்ஷீட்கேட்டுப் போனால், ஹீரோ யாரு தனுஷா? விஜய்யா என்று கேட்க ஆரம்பித்துள்ளாராம்.

இளம் ஹீரோக்களுக்கு ஜோடி என்றால் ரேட்டைக் கூட குறைத்துக் கொள்ளத் தயார் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் விஜய்காந்த், சரத்குமாருடன் டூயட் பாடிய நமீதாவை இளம் ஹீரோக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.இதனால் நமீதாவே போய் அவர்களைச் சந்தித்து சான்ஸ் கேட்டு நச்சரித்து வருகிறார்.

அப்படி தனுஷை போய் நமீதா நச்சரித்ததன் விளைவாக ஒரு படம் கிடைத்துள்ளது. ஹீரோயினாக அல்ல, ஒருபாட்டுக்கு டான்ஸ் ஆட வாய்ப்பு வந்துள்ளது. படத்தின் பெயர் தேவதையைக் கண்டேன். இதில் தனுஷுடன்குத்தாட்டம் போடப் போகிறாராம் நமீதா. டான்சுடன் அப்படியே ஓரிரு காட்சிகளில் தலை காட்டிடவும் முயன்றுவருகிறார்.

கவர்ச்சி விஷயத்தில் எந்தக் குறையும் வைக்காத நமீதா அதைப் பற்றி தைரியமாகவே பேசுகிறார்.

எங்கள் அண்ணாவில் லேசு பாசாக கவர்ச்சியை தட்டி விட்ட இவர் ஏய் படத்தில் கதி கலங்கிப் போகும் அளவுக்கு கவர்ச்சியில்புகுந்து விளையாடியுள்ளார்.

இதில் ஒரு தப்பும் இல்லை என்று சொல்லும் நமீதாவின் ஸ்டேட்மென்ட்டைப் பாருங்கள்:

படம் பார்ப்பதற்கு இளைஞர்கள்தான் அதிகம் வருகிறார்கள். அவர்களைக் கவர கவர்ச்சி காட்டுவதில் என்ன தப்பு? எங்கும்கவர்ச்சிக்குத் தான் மதிப்பும் மரியாதையும் உள்ளது. பிறகு ஏன் மறைத்து வைக்க வேண்டும்?

வயசு இருக்கும்போதுதான் கவர்ச்சி காட்ட முடியும், வயதைத் தொலைத்த பிறகா காட்ட முடியும், காட்டினாலும் யார் பார்ப்பார்கள்என்று கேட்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil