»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கோலிவுட் நடிகைகள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் நடிகை நமிதா.

மாடலிங் வழியாக தெலுங்கு, தெலுங்கு வழியாக தமிழ் என்று தனது கலைப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர் நமிதா.

தற்போது தமிழில் சரத்குமாருடன் ஏய், சத்யராஜூடன் மகாநடிகன், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு நாள் ஒரு கனவு ஆகிய படங்களில்நடித்து வருகிறார்.

இதில் ஏய் படத்தின் விநியோக உரிமையே நமிதாவை நம்பித்தான் இருக்கிறது. காரணம் வகைதொகையில்லாமல் அவர் காட்டியிருக்கும்கவர்ச்சிதான்.

அதேபோலத்தான் மகாநடிகன் படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நமிதாவிற்குப் போட்டியாக மும்தாஜூம் களத்தில் இருப்பதால்ரசிகர்களுக்கு பெரிய கவர்ச்சி விருந்தே காத்திருக்கிறது.

இந்த இரண்டு படங்களும் கிட்டத் தட்ட முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகி உள்ளன. இப்போது சூட்டிங் செல்லும் வகையில் நமிதா கையில்இருப்பது ஒரு நாள் ஒரு கனவு படம் மட்டும்தான்.

தனுஷ், சோனியா அகர்வால், நமிதா ஆகிய 3 பேரை மட்டுமே சுற்றி நகரும் வகையில் இந்தக் கதை முதலில் அமைக்கப்பட்டிருந்தது.மொத்தப் படத்தையும் அயர்லாந்தில் எடுக்க செல்வராகவன் திட்டமிட்டிருந்தார்.

இந் நிலையில் தனுஷ் நடித்து வெளிவந்த ட்ரீம்ஸ் படம் படுத்துவிடவே, தம்பிக்காக ஒரு நாள் ஒரு கனவு படத்தில் கூடுதல் கவனம் செலுத்தசெல்வராகவன் முடிவு செய்திருக்கிறார்.

3 பேரை வைத்து மட்டுமே படம் என்று ரிஸ்க் எடுக்க விரும்பாமல் கதையை பெருமளவு மாற்றியிருக்கிறாராம். ஆனால் அதுவும்புதுமையாக இருக்குமாம். படப்பிடிப்பை இந்தியா முழுக்க நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தியில் ரிஷிகபூர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான நமிதா, அங்கேயே முன்னேற முடியுமாஎன்று பார்த்தார். ஆனால் எதுவும் வொர்க் அவுட் ஆகாததால் கோலிவுட்டுக்கே வந்து விட்டார்.

ஆனால் இவரை காலி செய்வதில் கோலிவுட் நடிகைகள் மும்முரமாக இருப்பதாகத் தெரிகிறது. சிலர் இவரைப் பற்றிய வதந்திகளைப் பரப்ப,சிலர் கூட இருந்தே குழி பறிக்கிறார்களாம்.

இதுபற்றி நமிதா புலம்பியதாவது:

எனக்கு கபூர் என்று ஒரு பாய் பிரண்ட் இருக்கிறார். சில சமயங்களில் அவர் என்னுடன் சூட்டிங்கிற்கு வருவதுண்டு. ஆனால் எனக்குதிருமணமாகி விட்டதாகவும், ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டதாகவும் செய்தி பரப்புகிறார்கள்.

இதனால் எனக்கு வர இருந்த வாய்ப்புகள் கை நழுவி போய்விட்டன. இந்த செய்திகளைப் பார்த்து எனது ஹவுஸ் ஓனர், வீட்டைக் காலிசெய்யச் சொல்கிறார்.

இந்த வதந்திகளை யாராவது நிரூபித்தால் சினிமாவை விட்டே போய் விடுகிறேன். இது இப்படியென்றால் சில நடிகைகள் எனக்கு தப்புதப்பாக அட்வைஸ் கொடுத்து எனது மார்க்கெட்டை காலி செய்ய முயற்சிக்கிறார்கள்.

என்னிடம் வந்து, கவர்ச்சியைக் காட்டாதே, நடிப்புத் திறமையைக் காட்டு என்று கூறுகிறார்கள். என்னை ஒழித்துக் கட்டவே இது போல்ஐடியாக கொடுக்கிறார்கள் என்றார் நமீதா.

நல்ல வேளையாக அவர்களின் யோசனையைக் கேட்டு கவர்ச்சி சேவையை நிறுத்தும் முடிவுக்கு நமிதா வரவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil