ஒரு லிப் கிஸ்சுக்கு 100 கோடி சம்பளமா.. தயாரிப்பாளர்கள் அரிச்சந்திரனாக இருக்க முடியாது..பிரபலம்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 148 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. அதே போல, லியோ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், லியோ படம் ரூ.160 கோடியை வசூலித்ததாக வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார். இதனால், லியோ படத்தின் வசூலை போலியானது என்ற செய்தி இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் பேட்டி அளித்துள்ளார்.

அதில், எந்த ஒரு தொழிலை செய்தாலும் அதில் நேர்மையாக தொழிலை எங்கேயுமே செய்யவே முடியாது அதுவும் குறிப்பாக சினிமாவில் நேர்மையான பிசினஸை எப்போதுமே செய்ய முடியாது செய்யவே முடியாது. அதேபோல பணம் சம்பாதித்த ஒருவன் எப்பொழுதுமே பணக்காரன் வேஷம் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அவனுக்கு நஷ்டம் ஏற்பட்டு ஏழையாகி விட்டான் என்றால் மறுபடியும் யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.

Leo Vijay Nandhavanam Nandakumar
Photo Credit: Seven Screen Studio

எல்லாமே பொய்: தமிழ்நாட்டில் இருக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. அதில், முதல் நாளிலேயே அனைவரும் படத்தை பார்த்து விட மாட்டார்கள் அப்படி பார்ப்பதற்கு மக்களிடம் பணம் இல்லை. அப்படி இருக்கும் போதே லியோ படம் முதல் நாளில் எப்படி அவ்வளவு வசூலை அள்ளும், கடைசியில் வருமான வரித்துறையிடம் உண்மையை சொல்லிமாட்டிக்கொண்டார். ஹாலிவுட் திரைப்படத்தின் வசூல் கூட இவ்வளவு இல்லை, ஆனால், தமிழ் சினிமாவில் வார்த்தைக்கு வார்த்தை பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளர் ஒரு படம் இத்தனை கோடி லாபம், அத்தனை கோடி லாபம் என சொல்வதற்கு முக்கிய காரணமே, அடுத்த பெரிய நடிகரின் படம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். என்னுடைய படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டது என்று உண்மையை சொன்னால், அடுத்து எந்த நடிகரும் அவருடைய படத்தில் நடிக்க மாட்டார்கள். இதற்காகத்தான் இப்படி ஒரு பொய்யை தயாரிப்பாளர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

100 கோடி சம்பளமா: மிகப்பெரிய நடிகரான விஜய்யிடம், நான் இவ்வளவு பல சம்பளத்தை உங்களுக்கு கொடுப்பதாக சொல்லி இருக்கிறேன். யார் உங்களிடம் கேட்டாலும் இந்த சம்பளத்தையே சொல்லிவிடுங்கள் என, மியூச்சுவலாக இருவரும் பேசிக் கொள்வார்கள். விஜய் அப்படி 200 கோடி சம்பளம் வாங்கியிருந்தால் பலருக்கு உதவி செய்திருப்பார். ஆனால் இப்போது வரைக்கும் அவர் எதையும் செய்தது போல தெரியவில்லை. அப்படி இருக்கும்போதே இவை அனைத்தும் பொய்தான் என்று தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், லியோ படத்தில் ஒரு லிப் கிஸ்சுக்கு 100 கோடி சம்பளம் கொடுத்தார்களா.. எல்லாம் பொய், விஜய்யை வைத்து படம் எடுத்தாலே தயாரிப்பாளர் தலையில் துண்டுதான் போடவேண்டும்.

அரிச்சந்திரனாக இருக்க முடியாது: அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்கள் இப்படி ஒருபொய்யை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். சினிமாவை பொருத்தவரை எந்த ஒரு தயாரிப்பாளரும் அரிச்சந்திரனாக இருக்க முடியாது. பொய் சொன்னால்தான் அடுத்தடுத்து அவர்களுக்கு படம் எடுக்க பணம் கிடைக்கும். இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால், அந்த உண்மை எல்லாம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு ஒவ்வொன்றாக வந்து கொண்டு இருக்கிறது என இயக்குனர் நந்தவனம் நந்தகுமார் அந்த பேட்டிகள் பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X