விடிய விடிய டார்ச்சர் செய்த நாஞ்சில் விஜயன்.. எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டேன்.. கதறிய நடிகை!
சென்னை: விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயன், தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக திருநங்கை விஜே வைஷு கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது பெரும் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், Arrowroots Tamil யூடியூப் சேனலுக்கு திருநங்கை விஜே வைஷு பேட்டி அளித்துள்ளார்.
அதில், நாஞ்சில் விஜயனும் நானும் 2011ஆம் ஆண்டில் இருந்து நண்பர்களாக பழகி வந்தோம். அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு என்னுடைய குடும்பத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, பொருளாதார ரீதியாக நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். அந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாகவும், அரவணைப்பாகவும் நாஞ்சில் விஜயன் இருந்ததால் அவர் மீது எனக்கு காதல் உருவானது. முதல் முதலில் நான் தான் அவரிடம் காதலை சொன்னேன். இரண்டு நாள் கழித்து பின், என்னுடைய காதலை அவர் ஏற்றுக் கொண்டார்.

காதலித்தோம்: ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நானும் அவரும் காதலர்களாக தான் பழகி வந்தோம். திருமணம் செய்து கொள்வதற்கு கூட என்னிடம் அனுமதி கேட்டார். என்னால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நான் தான் அவருக்கு அனுமதி கொடுத்தேன். திருமணத்திற்கு பிறகும் என்னுடன் அவர் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தார். ஆனால், குழந்தை பிறந்த பிறகு வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. இனிமேல், நாம் பழகினால் அது சரியாக வராது என்று என்னை ஒதுக்கி விட்டார். என்னுடைய நம்பர் அனைத்தையும் பிளாக்கின் போட்டு விட்டார். வேறு யாருடைய ஃபோனில் இருந்து பேசினாலும் எனக்கு அவர் பதில் சொல்வதில்லை.
இதனால் தான், நான் கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார் கொடுத்தேன்.
ஏமாற்றிவிட்டார்: இத்தனை ஆண்டுகளாக கணவன் மனைவியாக நாங்கள் வாழ்ந்து கொண்டு இருந்தோம். இந்த விஷயம் நாஞ்சில் விஜயன் அவர்களின் குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும். நாஞ்சில் விஜயனின் மாமியார் என்னுடைய தோழிதான் நாஞ்சில் விஜயனின் தங்கை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, நான் தான், அவர்களை அழைத்துச் சென்றேன். அதன் பிறகு தான் அவர்கள் இருவரும் நண்பர்களாகி அவருடைய மகளையே அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவை அனைத்தும் எனக்கு தெரிந்து தான் நடந்தது. திருமணம் செய்து கொண்டாலும், உன்னுடன் தான் இருப்பேன் என்று சொன்னார். அதை நம்பித்தான் அவர் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.
கணவன் மனைவியாக வாழ்ந்தோம்: ஆனால், இப்போது என்னை யார் என்றே தெரியாது, திருநங்கைக்கூட பழகினால் குடும்பமானம் போய்விடும், குழந்தையின் வாழ்க்கை போய்விடும் என்று சொல்கிறார். நான் திருநங்கை என்பது இப்போது தான் தெரிந்ததா. ஒரே அறையில் பல நாட்கள் ஒன்றாக இருந்து இருக்கிறோம். ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கவேண்டிய அனைத்து விஷயமும் எங்களுக்குள் நடந்து இருக்கிறது. அப்போது நான், ஒரு திருநங்கை என்று தெரியவில்லையா? நம்பவைத்து ஏமாற்றிவிட்டார். நாஞ்சில் விஜயனின் மாமியார் எனக்கு போன் செய்து, எனக்கு ஸ்டாலின் தெரியும், ஆட்களை வைத்து உன்னை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார். நான் பெரியதாக எதையும் கேட்கவில்லை, திருமணத்திற்கு பின் எப்படி என்னுடன் வாழ்ந்தாரோ அப்படி என்னுடன் வாழ்ந்தால் போதும் என அந்த பேட்டியில், விஜே வைஷூ கண்கலங்கி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











