கடன் சுமையில் ரோபோ சங்கரின் குடும்பம்.. யாருக்கும் அருகதை இல்ல.. கொந்தளித்த நாஞ்சில் விஜயன்!

சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ரோபோ சங்கர். தனது தனித்துவமான வித்தியாசமான நகைச்சுவையால் கவர்ந்த ரோபோ சங்கர், கடந்த வாரம், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயமானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு இருந்த குடிப்பழக்கம் தான் உயிரிழப்புக்கு காரணம் என பேச்சு எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து நாஞ்சில் விஜயம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ரோபோ சங்கர் அவர்களின் இறப்பை யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்பு, குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோமே என வருத்தப்பட்டு கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதைத்தாண்டி அவருடன் நெருங்கி பழகிய எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு, இன்றைக்கு நான் பேட்டி கொடுக்க வந்ததற்கு முக்கிய காரணம், சமூக வலைதளங்களில் பலர் வாய்க்கு வந்தபடி பலவிதமான கருத்துக்களை பரவி வருகின்றனர். அந்த கருத்துக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் தான் பேட்டி கொடுக்க வந்தேன்.

Robo shankar Nanjil Vijayan interview
Photo Credit:

நாஞ்சில் விஜயன்: பலர் இணையத்தில் ரோபோ சங்கரின் மரணத்திற்கு காரணம் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் தான் என்று சொல்கிறார்கள். அதுவும் ஒரு காரணமே தவிர, அது மட்டும் தான் காரணம் இல்லை. அவர் மேடை கலைஞராக இருந்தபோது அவர் உடம்பில் பூசிக்கொண்டு இருந்த பெயிண்ட், ஓயாத உழைப்பு இப்படி எல்லாம் சேர்ந்துதான் அவருடைய மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்கே சென்றார். ஆனால், அவருடைய மனைவி பிரியங்கா போராடி அவரை அந்த பழக்கத்திலிருந்து மீட்டு வந்தார். குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்த அவரை, எந்த தொலைக்காட்சி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று நடிக்க வாய்ப்பு கொடுத்தது.

மனஅழுத்தத்தில்: கடந்த இரண்டு வருடமாகவே அவருக்கு சரியான வேலை வாய்ப்பு இல்லை. வளசரவாக்கத்தில் அவர் இருக்கும் வீட்டுக்கு மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் மாதம் இஎம்ஐ கட்ட வேண்டும். வாய்ப்பு இல்லை என்றால் அவர் என்ன செய்வார். இதற்காகவே அவர் ஓடி ஓடி உழைத்தார். அவரால் பிரபலமான தொலைக்காட்சி கூட அவருக்கு வாய்ப்பு தரவில்லை, எப்போது கலைஞர்களின் நிலைமை இதுதான். 22 வயதே ஆன ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, மீது பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஆனால், முன்பு போல் வருமானம் இல்லாததால் பல பிரமோஷனை இந்திரஜா செய்து வருகிறார். அவரையும் பலர் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

கடனில் ரோபோ சங்கரின் குடும்பம்: ரோபோ சங்கர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபோதே ஐம்பது லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது. அவ்வளவு பணத்தை செலவு செய்த தான் பிரியங்கா அக்கா அவரை வீட்டு வந்தார். மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவ செலவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள். இந்திரஜா தாலி உட்பட அணிந்திருந்த அத்தனை நகைகளையும் மருத்துவமனையிலேயே கழட்டி கொடுத்தார். அதேபோல அவரது கணவர் கார்த்திக்கும் தன் கையில் அணிந்திருந்த செயின், மோதிரம் என அனைத்தையும் கழட்டி கொடுத்து தான் மருத்துவ செலவு செய்யப்பட்டது. அனைத்தையும் அருகில் இருந்து கண்கூடாக பார்த்தவன் நான். சோசியல் மீடியாவில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதற்காக அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று நினைத்துவிடக்கூடாது, அவர்கள் குடும்பம் மிகப்பெரிய கடன் சுமையில் தான் இருக்கிறது. அதே போல ரோபோ சங்கரின் மனைவி இறுதி ஊர்வலத்தில் ஆடியதை சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள், இறுதி ஊர்வலத்தில் ஆடியது வேதனையின் உச்சத்தில் ஆடினார், தனது கணவருக்கு பிடித்ததை கடைசியாக செய்தார், அதை தமிழ் மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்று நாஞ்சில் விஜயன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X