»   »  நானும் சேரனும்- நவ்யா

நானும் சேரனும்- நவ்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கும் சேரனுக்கும் முடிச்சு போட்டு வரும் செய்திகள் எல்லாமே வெறும் கட்டுக் கதைகள் என்று சொல்லி கலகலவென சிரிக்கிறார் நவ்யா நாயர்.

மாயக்கண்ணாடியில் கலக்கி வரும் நாயருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன.

தமிழில் தேறாமல் போய் தெலுங்கில் முன்னணிக்குப் போய்விட்ட பாய்ஸ் ஹீரோ சித்தார்த் தனது புதிய தமிழ் படத்துக்கு நவ்யாவையே ஹீரோயினாக்க பரிந்துரைத்திருக்கிறார். மேலும் அவரே நவ்யாவிடம் பேசியும் வருகிறார்.

அதே பேலா கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ள ஒரு மெகா பட்ஜெட் படத்துக்கும் நவ்யாவை அணுகியிருக்கிறார்கள்.

தமிழில் நடிக்கத் தெரிந்த நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட நவ்யா, மாயக்கண்ணாடியை பெரியும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வரும் நவ்யா, ஆடும் கூத்து படத்தில் கூத்தாடி வீட்டுப் பெண்ணாக பக்கா கிராமத்து ரோலை செய்து வருகிறார்.

எந்த ரோலையும் பக்கவாக பேலன்ஸ் செய்யும் பக்குவம் பெற்றுவிட்ட நவ்யா, வாயைத் திறந்தால் சேரன் புகழ் தான் பாடுகிறார்.

சேரன், எவ்வளவு பெரிய கிரியேட்டர் தெரியுமா என்று வாய் பிளக்கிறார் நவ்யா.

நல்ல கதை எழுதவும், அதை அழகாக இயக்கிச் செல்லவும், தானே நடிக்கவும் தெரிந்த சேரன் மாதிரியான ஆட்கள் ரொம்ப அபூர்வம் என்கிறார்.

தமிழில் எனக்கு ஒரு புதிய கதவை திறந்து விட்டிருக்கிறார் சேரன். இதுவரை நான்கு தமிழ்ப் படங்களில் நடித்துவிட்டாலும் அதில் எல்லாம் இல்லாத சவாலான பாத்திரத்தை மாயக்கண்ணாடியில் எனக்குத் தந்திருக்கிறார் சேரன்.

இந்தப் படத்தில் நான் நடித்த நாட்கள் மறக்கவே முடியாதவை. எனது கேரக்டருக்கு அவர் ஸ்பெஷல் கேர் தந்தார் என்ற நவ்யாவுக்கு பிரேக் போட்டோம்.

உங்களையும் சேரனையும் இணைத்து ஏகப்பட்ட செய்திகள் வருகிறதே என்று கேட்டால் பரபரவென சிரிக்கிறார் நவ்யா.

இது பொழுது போகாதவர்களின் கற்பனை. தேறாத நடிகை, நடிகர்களைக் கூட வாழ வைத்துவிடும் கதைகளும், இயக்கும் திறமையும் வாய்த்தவர் அவர். ரொம்ப பிஸியான மனிதர். அவருக்கு இந்த மாதிரி எரிச்சல்களையும் தொல்லைகளையும் தராமல் இருந்தால் இன்னும் நிறைய நல்ல படங்களைத் தருவார்.

இது மாதிரி கிசுகிசு நான்சென்ஸ்களில் அவரை வம்புக்கு இழுத்துவிட்டால் நஷ்டம் தமிழ் சினிமாவுக்குத் தான். அவருக்கு அழகான குடும்பம், குழந்தைகள் உள்ளனர்.

நேர்மைக்குப் பேர் போன அந்த மனிதரை இது மாதிரியான காஸிப்களால் துன்புறுத்தாதீர்கள்.

அவரது குடும்பம் ஒரு அழகான கூடு, அதில் போய் கை வைப்பதில் என்ன தான் சுகம் கிடைக்கிறதோ இந்த கிசுகிசு ஆசாமிகளுக்கு.. என்று தெளிவாகவே பேசினார் நவ்யா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil