»   »  நயன் சொல்வதை கேளுங்க!

நயன் சொல்வதை கேளுங்க!

Subscribe to Oneindia Tamil

காதலிக்கும் முன்பே தெளிவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் என் கதைதான் என்று புலம்பலாகப் பேசுகிறரார் நயனதாரா.

ஐயா நாயகி இப்போது அய்யோப் பாவமாக இருக்கிறார். சென்னைப் பக்கம் வரவே பயப்படுகிறார். தனுஷுடன் இப்போது நடிக்கப் போகும் படத்தின் பெரும் பகுதியை நயனதாரா விருப்பத்தின்படி ஆந்திராவில் வைத்துக் கொள்ளப் போகிறார்களாம்.

எப்போது வேண்டுமானாலும் வம்பு வரலாம், வம்பு செய்யலாம் என பயப்படுகிறாராம் நயனதாரா.

அத்தோடு தனது நிலை குறித்தும் நெருங்கியவர்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம். கிட்டத்தட்ட தாடி வைக்காத சித்தி (சித்தரின் பெண் பால்) போல பேசுகிறாராம் நயன்ஸ்.

சம்பாதிப்பதற்கு வாய்ப்பு உள்ள காலகட்டத்தில் காதலில் விழவே கூடாது. அப்படி விழுந்தால் அது நம் தலையில் நாமே மண் அள்ளிப் போடுவதற்கு சமானம்.

அப்படியே காதலிக்க முடிவெடுத்தாலும், காதலிக்கும் நபரைப் பற்றி தெளிவாக, முழுமையாக தெரிந்து கொண்டு, அறிந்து கொண்டு அப்புறம்தான் காதலிக்க வேண்டும்.

அப்படி இல்லாமல், கண்டோம், காதலிப்போம் என்று அதிரடியாக, அவசர கதியாக, காதலிக்க ஆரம்பித்தால் பிறகு என் கதை போல ஆகி விடும். காதலில் விழுந்தால் என் கதை போல ஆகிவிடும்.

என்னைப் பொருத்தவரை ஒரு பெண் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்தால் காதலைப் பற்றி கனவில் கூட நினைக்கக் கூடாது. அதுதான் புத்திசாலித்தனம், பாதுகாப்பு என்று புலம்புகிறாராம் நயனதாரா.

புலம்ப விட்டுட்டியே பொன்னப்பா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil