»   »  சிம்புவை பிரிந்துவிட்டேன்: நயனதாரா

சிம்புவை பிரிந்துவிட்டேன்: நயனதாரா

Subscribe to Oneindia Tamil

எனக்கும் சிலம்பரசனுக்கும் இடையே இருந்த நட்பு முறிந்துவிட்டது, இனிமேல்நானும் அவரும் அவரவர் பாதையில் போகப் போகிறோம் என நயனதாராபகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சிம்புவோடு சேர்ந்து சுற்றியதால் நயனதாராவை தமிழ், தெலுங்கைச் சேர்ந்த பிற இளம்ஹீரோக்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். பெரிசுகள் மட்டுமேஅவ்வப்போது ஜோடி போட்டு ஆட கூப்பிடுகின்றனர். இதனால் சினிமாவில் தனதுஎதிர்காலம் பெரிய கேள்விக் குறியாகிவிட்ட நிலையில் இந்த முடிவுக்கு வந்துள்ளார் நயனதாரா.

வல்லவன் படத்தில் நயனதாரா நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கும், சிம்புவுக்கும்இடையே உதட்டுக் கடி ஸ்டில் மூலம் நட்பு உருவானது. அது நாளடைவில்இறுக்கமாகி, உருக்கமாகி, நெருக்கமாகி காதலாக கசிந்து உருகியது.

இருவரும் ஒருபோதும் பிரியாமல் பழகி வந்தனர். நயனதாராவைச் சிம்பு சுற்றிவந்ததால் வல்லவன் படப்பிடிப்பே பலமுறை பாதிக்கப்பட்டது.

நயனதாரா மலேசியா போனாலோ, துபாய் போனாலோ தம்பி சிம்புவும் அடுத்தபிளைட்டில் அங்கே போய்விடுவார். இருவரும் ஹோட்டலில் ஒரே ரூமில் தங்கி தீவிரடிஸ்கசன் செய்து வந்தனர்.

இப்படி பாசக்காரப் புள்ளைகளாய் மாறிவிட்ட இருவருக்கும் இடையே அவ்வப்போது ஊடலும் வந்தது.சிம்புவின் கவனம் வேறு ஆட்கள் பக்கம் திரும்பும்போதெல்லாம் இந்த சண்டைஓவராகும். சிம்பு தனக்கு துரோகம் செய்து விட்டதாக அவரிடம் நயனதாரா சண்டைபோட ஆரம்பித்தார்.

சில வாரங்களுக்கு முன் நயனதாராவை தேடி அவர் தங்கியிருந்த வந்த சிம்பு, அறைக்கதவை நயனதாரா திறக்காததால் நீண்ட நேரமாக கதவைத் தட்டி திறக்க வைத்தார்.

இதனால் சிம்புவை உள்ளே வரவழைத்த நயனதாரா கடுமையாக திட்டி, இனிமேல்சங்காத்தமே வேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பினார். இந்த நிலையில்தான்நயனதாரா தற்கொலைக்கு முயன்றதாக ஒரு பரபரப்பு கிளம்பியது.

ஆனாலும் அடித்தாலும் பிடித்தாலும் மீண்டும் இருவரும் சேர்ந்து கொண்டனர்.

சிம்பு இல்லாமல் என்னால் வாழக் கூட முடியாது என்று சொல்லி வந்தார் நயனதாரா.இப்படி இருவரும் நகையும், சதையுமாக இருந்து வந்த இருவரும் இப்போது நகையும்நெயில் பாலிஷுமாக மாறியுள்ளனர்.

இப்போது, தங்களுக்குள் இருந்த நட்பு முறிந்து விட்டதாக நயனதாராதிட்டவட்டமாகக் கூறியுள்ளார். அவர் கூறுகையில்,

சிம்புவுக்கும், எனக்கும் இடையே இருந்து வந்த நட்பு முடிந்து விட்டது. இருவரும்அவரவர் வழியில் செல்ல முபடிவெடுத்துள்ளோம்.

அவருடன் வைத்திருந்த நட்பு காரணமாக சில படங்களை என்னால் ஒப்புக் கொள்ளமுடியாமல் போய் விட்டது. அந்தத் தவறை இப்போது உணர்ந்து விட்டேன். இனிமேல்அப்படி நநிடந்து கொள்ள மாட்டேன்.

முன்பை விட அதிக படங்களில் இனிமேல் நடிப்பேன். புதிய நயனதாராவைஇனிமேல் பார்ப்பீர்கள் என்று கூறியுள்ளார் நயனதாரா.

வல்லவன் பட பூஜையின்போது ஆரம்பித்த இந்தக் காதல் படம் ரிலீஸானதும் முடிந்துவிட்டது.

அட இது தான்டா சினிமா காதல்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil