»   »  "நான் சாயிஷாவோட அண்ணி.." - நீலிமா ராணி எக்ஸ்குளூசிவ் பேட்டி! #Exclusive

"நான் சாயிஷாவோட அண்ணி.." - நீலிமா ராணி எக்ஸ்குளூசிவ் பேட்டி! #Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil
தேவர்மகன் படத்தில் நடித்த நீலிமா ராணி..வீடியோ

சென்னை : குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் 'நிறம் மாறாத பூக்கள்' சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தயாரிப்பு ஒருபக்கம் இருக்க, சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் நீலிமாவிடம், ஷூட்டிங் பிரேக்கில் பேட்டி கேட்டோம். நம் வாசகர்களுக்காக நீலிமா ராணி கொடுத்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...

தயாரிப்பாளர் நீலிமா.. எப்படி இருக்கு?

தயாரிப்பாளர் நீலிமா.. எப்படி இருக்கு?

"எங்களோட இசை பிக்சர்ஸ் தயாரிக்கிற 'நிறம் மாறாத பூக்கள்' சீரியல் ரொம்ப நல்லா போய்க்கிட்டு இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ 100 எபிஸோட் கிராஸ் பண்ணியிருக்கோம். அந்த சீரியலுக்கு நல்ல ரேட்டிங் ரிப்போர்ட் கிடைச்சிருக்கு. ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸும் பாசிட்டிவா வந்திட்டிருக்கு. சீரியல் பார்க்கிறவங்க நல்லா இருக்குனு சொல்றாங்க. ரொம்பவே சந்தோஷம்."

சீரியல் நடிப்பு எப்படி போகுது?

சீரியல் நடிப்பு எப்படி போகுது?

"ஜீ தமிழ் சேனல் தான் உங்களால் நிச்சயம் பண்ண முடியும்னு மோட்டிவேட் பண்ணி எங்களை அங்கீகரிச்சிருக்காங்க. நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தாமரை' சீரியல் சன் டிவி-யில் 1000 எபிஸோட்ஸ் தாண்டி போய்க்கிட்டு இருக்கு. 'வாணி ராணி' சீரியலிலும் முக்கியமான கேரக்டர். சீரியல்ல இப்போ நடிச்சிக்கிட்டு இருக்கிற மூணுமே நல்லா போய்க்கிட்டு இருக்கு. என்னதான் இருந்தாலும், ராதிகா அம்மாவை அப்போஸ் பண்ணி ஒரு கேரக்டர் பண்ணினா அதுக்கு கிடைக்கிற லைக்ஸ் ஜாஸ்தி. டிம்பிள், ஸ்நேகா, மல்லிகா மூணுமே செம ராக்கிங் ரோல்ஸ்."

நடிகையா இருந்து தயாரிப்பாளர்... கஷ்டமா இல்லையா?

நடிகையா இருந்து தயாரிப்பாளர்... கஷ்டமா இல்லையா?

"தயாரிப்பை ஒரு வேலையா நினைக்காம ரொம்ப விருப்பமானதா தான் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். வேலையில் வர்ற சிக்கல்களையெல்லாம் குறையா பார்க்கலை. அது நம்மளோட வளர்ச்சியாகவும், துறையில் அடுத்தகட்டத்தை நோக்கிய பயணத்துக்காகவும் தான்னு எடுத்துக்கிட்டு இருக்கோம். சிக்கல்கள் எல்லா இடத்துலேயும் இருக்கத்தான் செய்யும். நிறைய சிக்கல்கள் மூலமாகத்தான் நாம் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு. யெஸ், இது ரொம்ப நல்லாயிருக்கு."

ஒரே துறையா இருந்தாலும் வித்தியாசம் இருக்குமே?

ஒரே துறையா இருந்தாலும் வித்தியாசம் இருக்குமே?

"இன்னொரு பக்கத்தில் நாம் கத்துக்கிறதுக்கு நிறைய இருக்கு. ஷூட்டிங்னா 9 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட்னா எட்டரை மணிக்கு லொக்கேஷன்ல இருப்போம். அப்படி இருந்து பார்த்துட்டு இப்போ தயாரிப்பாளர் ஆனதும் முழுசா வேற மாதிரி இருக்கும் இல்லையா? இப்போ தயாரிப்புத் துறைக்கு வந்துட்டதால எல்லாமே தெரியணும். டயலாக், டப்பிங், மிக்ஸிங் என ஏ டு இசட் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கும். கத்துக்கிற, கத்துக்கிட்டே இருக்கிற அனுபவம் தான் எல்லாம்."

தேவர் மகன் படத்தில் நடித்தது பற்றி?

தேவர் மகன் படத்தில் நடித்தது பற்றி?

" 'தேவர் மகன்' படத்தில் நடிச்சப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசுங்கிறதால எதுவும் ஞாபகம் இல்ல. எனக்கு ஞாபகம் இருக்குற ஒரே விஷயம், கமல் சார் என் கழுத்துல கத்தி வைக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கும். அந்த ஷாட் எடுக்கும்போது நான் நிஜமாவே அழுதுட்டேன். 'ஒண்ணும் பண்ணமாட்டாங்க.. ஒண்ணும் ஆகாது'னு சொல்லி எல்லோரும் சமாதானப்படுத்தி அப்புறம் நடிக்க வெச்சாங்க. அது மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு. அவ்ளோ பெரிய அரிவாளை கழுத்துல வெச்சா பதற மாட்டோமா?"

சிவாஜி உடன் நடித்தது?

சிவாஜி உடன் நடித்தது?

"இன்னும் சில விஷயங்கள் ஞாபகம் இருக்கு. ரேவதி அம்மா எங்களையெல்லாம் கூப்பிட்டு நடுவுல நின்னுக்கிட்டு எங்களை சுத்தி நிக்கவெச்சு பால் விளையாட வைப்பாங்க. அதே மாதிரி, கமல் சார் எங்ககிட்ட மேஜிக்லாம் பண்ணுவாரு. இதெல்லாம் ஆஃப் ஸ்கிரீன்ல எனக்கு ஞாபகம் இருக்கிற விஷயங்கள். சிவாஜி சார் கூடவும் அதே படத்துல சேர்ந்து நடிச்சிருக்கேன்றதே ரொம்ப பெருமை. அதெல்லாம் செம எக்ஸ்பீரியன்ஸ். ஞாபகம் இல்லேன்னாலும், அவ்ளோ பெரிய லெஜண்ட்ஸ் நடிச்ச படத்துல நாமளும் இருந்திருக்கோம்ங்கிறதே அமேஸிங்."

நடித்ததில் பிடித்த சினிமா?

நடித்ததில் பிடித்த சினிமா?

"நான் நடிச்சதுல 'நான் மகான் அல்ல' எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அதுல என்னோட கேரக்டர் ரொம்ப அழகா இருக்கும். சமீபத்துல ரிலீஸ் ஆன 'மன்னர் வகையறா' படத்தில் நடிச்சதும் எனக்கு ரொம்ப பிடிச்சது. அந்தப் படத்தோட சீன்ஸ் அவ்ளோ காமெடியா இருந்தது. 'மொழி' படத்துல நான் பண்ணின ரோல் ரொம்ப பிடிக்கும். என் படத்தில் நான் பண்ணின எல்லா ரோல்களையும் எனக்கு பிடிக்கும். பிடிச்சாதானே படமே பண்றோம். நல்ல ரீச் கிடைச்சதால 'நான் மகான் அல்ல' படத்தை முதலில் சொன்னேன்."

கஜினிகாந்த் படத்தில் நடித்தது பற்றி?

கஜினிகாந்த் படத்தில் நடித்தது பற்றி?

"சமீபமாக, ஆர்யா சார், சாயிஷா நடிக்கும் 'கஜினிகாந்த்', கதிர் நடிக்கும் 'சத்ரு' படங்களில் நடிச்சிருக்கேன். ரெண்டுமே சீக்கிரம் திரைக்கு வந்துடும். 'கஜினிகாந்த்' படத்துல எனக்கு ரொம்ப நல்ல ரோல். ஹீரோயின் சாயிஷாவோட அண்ணியா நடிச்சிருக்கேன். அந்தப் படத்துல ஒரு டெலிவரி சீக்குவன்ஸ் பண்ணும்போதே சிறப்பா தோணுச்சு. அந்த சீக்குவன்ஸ் படத்துலயும் ரொம்ப நல்லா வரும் பாருங்க."

ஃப்ரெண்ட்ஸ் - ரோல் மாடல்

ஃப்ரெண்ட்ஸ் - ரோல் மாடல்

"என்னோட பெரிய இன்ஸ்பிரேஷன் ராதிகாம்மா. அவங்களோட தைரியம், நடிப்பு எல்லாமே பிடிக்கும். ஃப்ரெண்ட்ஸ்னா நிறைய பேர் இருக்காங்க. ஒவ்வொரு சீரியல்லேயும் நடிக்கும்போதும் சர்க்கிளா நல்ல ஃப்ரெண்ட்ஷிப் உருவாகிற அளவுக்கு நான் ரொம்பவே ஃப்ரெண்ட்லி. நடிப்பு தாண்டி சொல்லணும்னா நிரோஷா அக்கா எனக்கு அம்மா மாதிரி. அவங்களை அம்மினு தான் கூப்பிடுவேன்."

குடும்பத்தினரின் ஆதரவு எந்த அளவுக்கு கிடைக்கிறது?

குடும்பத்தினரின் ஆதரவு எந்த அளவுக்கு கிடைக்கிறது?

"ஃபேமிலியில பெரிய சப்போர்ட் இல்லைன்னா இத்தனை வருசம் தொடர்ந்து நடிச்சு இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்க முடியாது. முழுக்க முழுக்க உழைப்பும், குடும்பத்தினரின் ஆதரவும் இல்லைன்னா நான் இன்னிக்கு இந்தக் கட்டத்துக்கு வந்திருக்க வாய்ப்பே இல்ல. அதனால், என்னோட குடும்பத்தினருக்கும், கணவருக்கும், மற்றும் எல்லோருக்கும் எவ்ளோ வேணாலும் நன்றி சொல்லலாம்."

தயாரிப்பாளராக அடுத்த திட்டம்

தயாரிப்பாளராக அடுத்த திட்டம்

தயாரிப்பாளராக அடுத்த திட்டம் "என் கணவர் இசை மற்றும் என்னோட பல வருஷக் கனவான தயாரிப்பு நிறுவனத்தை இப்போ தான் வெற்றிகரமா ஆரம்பிச்சிருக்கோம். அடுத்து வெப் சீரிஸ் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். அது தொடர்பான வேலைகளும் போய்க்கிட்டு இருக்கு. இதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். நிச்சயம் ஒரு நல்ல வெப் சீரிஸோட வருவோம்." என நம்பிக்கையோடு பேசினார் நடிகையும், தயாரிப்பாளருமான நீலிமா ராணி. வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.

English summary
Neelima Rani, who has been introduced as a child artist, and now a famous actress. Neelima turned as a producer by 'Isai pictures'. Here is an exclusive interview with Neelima Rani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X