»   »  விக்ராந்துக்கு திருப்புமுனை தருமா நெஞ்சில் துணிவிருந்தால்?

விக்ராந்துக்கு திருப்புமுனை தருமா நெஞ்சில் துணிவிருந்தால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதைய இயக்குநர்களில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவானவர் சுசீந்திரன். ஒரு படம் முடிவதற்கு முன் அடுத்த படத்தை சரியாக திட்டமிடுவார். அதன் வெற்றி தோல்வியெல்லாம் அப்புறம்தான்.

மாவீரன் கிட்டு படத்துக்குப் பிறகு அவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படம் நெஞ்சில் துணிவிருந்தால். இந்தப் படம் சுசீந்திரனுக்கு மட்டுமல்ல, ஹீரோவாக நடித்திருக்கும் விக்ராந்துக்கும் முக்கியமான படம்.

நெஞ்சில் துணிவிருந்தால்

நெஞ்சில் துணிவிருந்தால்

எவ்வளவோ படங்கள் நடித்தும் இன்னும் முன்னணி நடிகராக வரமுடியவில்லை என்ற தவிப்பிலிருக்கும் விக்ராந்த், இந்தப் படம் குறித்துக் கூறுகையில், "பாண்டிய நாட்டிற்கு பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் இது. சந்தீப், சூரி, ஹரிஷ் உத்தமன் போன்ற மொத்த குழுவுடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த சந்தோஷம். இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாகக் கொண்ட படம். ‘பாண்டிய நாடு' எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம். இப்போது நெஞ்சிலே துணிவிருந்தால் என்னை அடுத்த உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என நம்புகிறேன்.

கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு

கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு

சுசீந்திரன்தான் எனக்கு குரு. அவர் என்னை கௌரவ வேடத்தில் நடிக்கச் சொன்னாலும் நான் நடிக்க தயார். சுசீந்திரன் என்னிடம், "எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருக்க... இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம். முதலில் சாதுவா காட்டலாம்," என்று கண்ணாடிலாம் கொடுத்தாங்க. 'அதிகமா சிரிச்ச மாதிரி இருக்கணும்' என்றார்.

சூரியுடன் 25 நாட்கள்

சூரியுடன் 25 நாட்கள்

பாண்டிய நாடு படத்தில் சூரியுடன் நான் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் இருபத்தி ஐந்து நாட்கள் வைசாக்-ல் ஒன்றாக மிகுந்த சந்தோசமாக இருந்தோம். சூரி எனக்கு நீண்ட நாள் பழக்கம். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே உள்ளார். சந்தீப் இந்தப் படத்தில் இருந்துதான் பழக்கம். நட்பு ரீதியா பழகினார். பாடல் காட்சிகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கொடுத்துக்கொள்வோம்.

மெஹரின்

மெஹரின்

தெலுங்கில் ஹீரோயின் மெஹரின் மூன்று படங்கள் இந்த ஆண்டு வெளிவந்து உள்ளன. அவை சூப்பர் ஹிட் படங்களாகவும் அமைந்து உள்ளன. அது போல் இந்த படமும் ஹிட் ஆக அமைந்து அவர்கள் தமிழிலும் மிக பெரிய கதாநாயகியாக வர கடவுளை வேண்டிக் கொள்கின்றேன்.

ஓடுகிறேன்

ஓடுகிறேன்

நடுவில் படம் அமையவில்லை என்ற விரக்தியில் அதிக எடை கூடிவிட்டேன் இப்பொழுது அதனை குறைக்க ஓட ஆரபித்தேன் இப்பொழுதும் காலை எழுந்தவுடன் அது தொடர்கிறது. சுசீந்திரன் இந்த படம் ஆரம்பத்திலேயே சொன்னது போல, அடுத்து வெண்ணிலா கபடி குழு-2 பண்ணுகிறோம். முதல் பகுதியில் விஷ்ணு இறந்து விடுவார் அவருக்கு பதில் நான். மற்ற நடிகர்களெல்லாம் அப்படியே தொடர்கிறார்கள். படத்தை செல்வசேகரன் இயக்குகிறார். வெண்ணிலா கபடி குழு 2-காக கபடி முறையாக கற்று வருகிறேன்.

வெண்ணிலா கபடி குழு 2

வெண்ணிலா கபடி குழு 2


வெண்ணிலா கபடி குழு முதல் பகுதி 1980-ல் நடக்கும் கதை அக்கதையை பொறுத்த வரை சுசீந்தரின் தந்தைதான் நிறுவனர். வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் முதலாம் பாகத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது.

கவண், தொண்டன், கெத்து நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற மல்டி-ஹீரோ சப்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்க எதிர்பார்த்து இருந்த நேரத்தில் வெண்ணிலா கபடி குழு படம் அமைந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

English summary
Interview of Actor Vikranth who played lead role in Suseenthiran's Nenjil Thunivirunthal movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil