twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாயகிகளுக்கு முக்கியத்துவமே இல்லையே: பாவனா

    By Siva
    |

    Bhavana
    இந்திய திரையுலகில் கதாநாயகர்களின் ஆதிக்கம் தான் உள்ளது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமே இல்லை என்று வருதப்படுகிறார் பாவனா.

    தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமான பாவனாவுக்கு இங்கு அவ்வளவாக மார்க்கெட் இல்லை. அவ்வப்போது ஒன்று அல்லது இரண்டு படத்தில் வந்துவிட்டு போவார். இப்போது அவர் கையில் ஒரு தமிழ் படம் கூட இல்லை. மலையாளத்தில் தான் 2 படங்களில் நடித்து வருகிறார்.

    என்னாச்சு பாவனா தமிழ்ல ஆளையே காணவில்லை என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது,

    நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் எல்லாம் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாக இருக்கின்றன.

    ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியைப் போன்று வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது. ஆனால் அது மாதிரியான கதாபாத்திரங்கள் இங்கு கிடைக்காது. ஏனென்றால் இங்கு கதாநாயகன்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. கதாநாயகிகளுக்கு முக்கயத்துவமே இல்லை. ஒரேயொரு படத்திலாவது ஹூரோ போல நடிக்க வேண்டும். ஹீரோ போன்று தம் அடிப்பது, மது குடிப்பது, சண்டை போடுவது மாதிரி நானும் நடிக்க வேண்டும்.

    சில நாயககிகள் ஓரிரு படங்களோடு காணாமல் போய்விடுகின்றனர். நான் சினிமாவை விட்டுப்போக விரும்பவில்லை. நான் இத்துறையில் நிலைத்து நிற்பேன். திருமணத்திற்குப் பிறகும் கூட நடிப்பேன் என்றார்.

    Read more about: பாவனா bhavana
    English summary
    Actress Bhavana feels sad as the Indian cinefield is male dominated and the movies hero centric. She wants to act like a hero in at least one movie. She has decided to continue acting even after marriage.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X