»   »  அரசியலில் குதிக்கும் நோக்கத்தில்தான் உதவிகள் செய்கிறேனா?- விஷால் பதில்

அரசியலில் குதிக்கும் நோக்கத்தில்தான் உதவிகள் செய்கிறேனா?- விஷால் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்தக் கட்சியையும் சாராதவனாக இருந்து மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன் என்று நடிகர் விஷால் கூறினார்.

விஷால் நடிகர் சங்கம் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுதவிர ஏழை, எளியவர்களுக்கும், மாணவர்களுக்கும் தனது தாயார் பெயரில் இயங்கும் அறக்கட்டளை மூலம் உதவுகிறார்.


நல்லது செய்தால் போதும்

நல்லது செய்தால் போதும்

இந்த உதவிகள் குறித்துக் கேட்டபோது, "மனதுக்கு நல்லது என்று பட்டால் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்பதுதான் எனது கொள்கை. அதைப்பற்றி எந்த கவலையும் படமாட்டேன். என்னைப் பார்த்து 10 பேர் சமூகத்துக்கு நல்லது செய்தால் அது வரவேற்க வேண்டிய விஷயம்தானே.


அரசியலா?

அரசியலா?

அரசியல் நோக்கத்தில் இந்த உதவிகளைச் செய்யவில்லை. இப்போது அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை. எந்த கட்சியையும் சாராதவனாக சமூகத்துக்கு நல்லது செய்ய ஆசைப்படுகிறேன்.


அரசியல்வாதிகளை விட அதிகமாக....

அரசியல்வாதிகளை விட அதிகமாக....

அரசியல் தப்பான விஷயம் அல்ல. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாங்கும் சம்பளத்தை விட நடிகனாக அதிகம் சம்பாதிக்றேன். எனவே, அவர்களை விட முடிந்த அளவு சேவை செய்கிறேன்.


எப்போது திருமணம்?

எப்போது திருமணம்?

எனக்கு இப்போது திருமண ஆசை இல்லை. 2018 ஜனவரி 14-ந்தேதி நடிகர் சங்க கட்டடம் திறப்பு விழா.. அதற்கு மறுநாள் என்னுடைய திருமண தேதியை அறிவிப்பேன்," என்றார்.


English summary
Vishal says that there is no political motive behind his aids to poor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil