»   »  விஜய்யுடன் நல்ல 'கெமிஸ்ட்ரி'- திரிஷா

விஜய்யுடன் நல்ல 'கெமிஸ்ட்ரி'- திரிஷா

Subscribe to Oneindia Tamil
Trisha
எனக்கும், விஜய்க்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதால் நாங்கள் ஜோடி சேரும் படங்கள் வெற்றி பெறுகின்றன என்று திரிஷா கூறியுள்ளார்.

விஜய்க்கு மட்டுமல்லாமல், அவருடைய ரசிகர்களின் விருப்ப நாயகியும் திரிஷா. அந்த அளவுக்கு இருவரும் இணைந்து நடிக்கும் படங்களுக்கு செமத்தியான வரவேற்பு கிடைப்பது வழக்கம்.

இதுவரை திரிஷாவுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளிலேயே திரிஷாதான் அவருக்குப் பொருத்தமானவர் என்பது திரையுலகினரின் கருத்தும் கூட. தென்னிந்திய தேவதையாக விளங்கும் திரிஷா, விஜய் படம் என்றால் கூடுதல் உற்சாகத்தோடு பணியாற்றுவார்.

சமீபத்தில் இதுகுறித்து அவர் தமிழ் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விஜய்தான் எனக்கு மிகவும் பொருத்தமான நாயகன். வெற்றிகரமான ஜோடியும் நாங்கள்தான் என்று கூறுகிறார்கள். இதைக் கேட்க பெருமையாக உள்ளது.

விஜய் எனக்கு நல்ல நண்பர். அவருடன் நடிப்பதில் எனக்கு எந்த அசவுகரியமும் ஏற்பட்டதில்லை. ரொம்பவும் இனிமையான மனிதர். சக கலைஞர்களுடன் மிகவும் ஈசியாக பழகுவார்.

அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கால்ஷீட்களை தளர்த்திக் கொடுக்கத் தயங்கியதே இல்லை. அந்த அளவுக்கு எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இருவரின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக இருப்பதால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

சக ஹீரோயின்களுடன் எனக்கு எந்தப் போட்டியும் இல்லை. யாரையும் நான் போட்டியாக நினைத்ததும் இல்லை. முன்னணி நாயகிகளான ஷ்ரியா, ஆசின், நயனதாரா ஆகியோருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது என்றார் திரிஷா.

திரிஷா விஜய்யுடன் தற்போது ஜோடி சேர்ந்துள்ள குருவி நான்காவது படமாகும். முதல் படம் கில்லி. பிறகு திருப்பாச்சி, ஆதி ஆகிய படங்களிலும் விஜய், திரிஷா ஜோடி சேர்ந்தனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil