twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோலிவுட் பற்றி இப்படி சொல்லிட்டாரே ஓவியா: அப்போ, இனி அவ்ளோ தானா?

    By Siva
    |

    சென்னை: தமிழ் திரையுலகம் பற்றி ஓவியா கூறியுள்ளது பலருக்கும் பிடிக்கவில்லை.

    கோலிவுட்டில் போராடிக் கொண்டிருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் அதன் பிறகும் அவரின் கெரியர் பிக்கப் ஆகவில்லை. இந்நிலையில் அவர் பிளாக் காபி என்கிற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    சினிமா, வாழ்க்கை பற்றி ஓவியா பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

     பிளாக் காபி

    பிளாக் காபி

    மலையாள திரையுலகில் என்னை யாருக்கும் தெரியாததால் நான் புதுமுகம் போன்று உணர்கிறேன். நான் மலையாள படத்தில் நடிக்க திட்டமிடவில்லை. ஆனால் இயக்குநர் பாபுராஜை எனக்கு பல காலமாக தெரியும், அவர் வலியுறுத்தியதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

    மல்லுவுட்

    மல்லுவுட்

    தமிழ் திரையுலகை போன்று இல்லாமல் மலையாள திரையுலகில் அனைவரும் நட்புடன் பழகுகிறார்கள், மேலும் நம்மை ஒரு நடிகையாக அல்ல மாறாக குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள். மலையாள திரையுலகில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை பார்க்கிறோம். ஆனால் தமிழில் மாலை 6 மணிக்கு பேக்கப் செய்துவிடுவார்கள். கோலிவுட்டில் வேலை முடிந்ததும் அவரவர் வீட்டிற்கு கிளம்பிவிடுவார்கள். ஆனால் இங்கு உடனே கிளம்பாமல் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுகிறார்கள். மேலும் தமிழை போன்று இல்லாமல் இங்கு ஷாட் முடிந்ததும் யாரும் கேரவனுக்குள் செல்வது இல்லை.

     படப்பிடிப்பு

    படப்பிடிப்பு

    பிளாக் காபி படத்தில் நடிப்பது ஜாலியாக உள்ளது. என் தோழியின் வீட்டில் ஷூட்டிங் நடந்தது. அது வேலை போன்று இல்லாமல் தோழியின் வீட்டில் ரிலாக்ஸ் செய்தது போன்று இருந்தது. பிளாக் காபி படத்தின் இயக்குநர் பாபுராஜ் திறமையானவர். இந்த படத்திற்கு என் சொந்த குரலில் டப்பிங் பேச ஆசைப்படுகிறேன். தாய்மொழியில் பேசுவது பெரும் திருப்தி அளிக்கும்.

    பாசம்

    பாசம்

    கேரளாவுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் ரசிகர்கள் அதிகம் பாசம் வைத்துள்ளனர். ஸ்டார்களுக்காக ரசிகர்கள் எதையும் செய்வார்கள். நான் நடிகையானது எதிர்பாராமல் நடந்த சம்பவம். நான் கேரளாவில் செட்டில் ஆக விரும்புகிறேன். நான் என்னை அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். நான் சென்னையில் வசிப்பதால் கேரளாவில் உள்ள என் நண்பர்கள், உணவு ஆகியவற்றை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.

    English summary
    Oviya finds Mollywood friendlier than Kollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X