»   »  என் மகள் பிக் பாஸ் வீட்டில் நடிக்கவில்லை... அவளுக்கு நிஜத்தில் நடிக்கத் தெரியாது! - ஓவியாவின் அப்பா

என் மகள் பிக் பாஸ் வீட்டில் நடிக்கவில்லை... அவளுக்கு நிஜத்தில் நடிக்கத் தெரியாது! - ஓவியாவின் அப்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஓவியாவைப் போலவே அப்பாவியாகவும் இயல்பானவராகவும் இருக்கிறார் அவரது தந்தை நெல்சன். மிக எளிய குடும்பப் பின்னணி. அரசுப் பள்ளியில்தான் மகளைப் படிக்க வைத்திருக்கிறார்.

ஓவியா நடிகையான பிறகுதான் தலை நிமிர்ந்திருக்கிறது நெல்சன் குடும்பம். ஒரு வீடியோ பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களைக் கூறியுள்ளார்.

கண்டிச்சதில்லை

கண்டிச்சதில்லை

அதில், "நான் ரொம்ப சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். என் மகள் ஹெலனை (ஓவியா) நான் ஒரு முறை கூட கண்டிச்சதில்லை. அவளை 3 வயசுலருந்தே சுதந்திரமாதான் இருக்க விட்டேன்.

தமிழ்

தமிழ்

என் மகளை ஆங்கில வழியில் படிக்கை வைக்கவில்லை. மலையாளத்தில்தான் படித்தாள். ஆனால் தமிழை தாய்மொழி போல இவ்வளவு சரளமாகப் பேசுவதைப் பார்க்க ஆச்சர்யமாக உள்ளது.

வீழ்த்த முடியாது

வீழ்த்த முடியாது

ஹெலனுக்கு நிஜத்தில் நடிக்கத் தெரியாது. அவள் மிகவும் எச்சரிக்கையானவள். அத்தனை சுலபத்தில் அவளை யாரும் வீழ்த்திவிட முடியாது.

கமல் ஹாஸனுக்காக...

கமல் ஹாஸனுக்காக...

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி என்னிடம் சொன்னாள். 100 நாள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றாள். முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் நிகழ்ச்சியை நடத்துவது கமல் ஹாஸன் என்றதும் மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டேன்.

அழைத்து வந்துவிட விருப்பம்

அழைத்து வந்துவிட விருப்பம்

இப்போது அவள் அழுவதைப் பார்த்ததும், எப்படியாவது அவளைப் பார்த்து அழைத்து வந்துவிட வேண்டும் என விரும்பினேன்.

என் மகள் யாரையும் காதலிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் காட்டப்படுவதை நம்ப முடியவில்லை. என் மகள் எதையும் தைரியமாக, நேருக்கு நேர் சந்திப்பவள். அவளுக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை என்றால் நாங்கள் அழைத்து வந்துவிடத் தயாராக இருக்கிறோம்," என்றார்.

English summary
Oviya's father Nelson has wanted to bring back her daughter to home.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil