For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சார்பட்டா பரம்பரை பாகம்-2... தீவிரம் எடுக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்!

  |

  சென்னை : தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றிபெற்றுள்ளது சார்பட்டா பரம்பரை திரைப்படம்.

  Sarpatta Parambarai ரங்கன் வாத்தியார் Meme Collections | Oneindia Tamil

  வடசென்னையில் 1970களில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், இந்த துஷாரா விஜயன், அனுபமா, தங்கதுரை, சபீர், ஜான் கொக்கேன் என பலர் நடித்துள்ளனர்.

  விக்ரம் லேட்டஸ்ட் அப்டேட்...கமலுக்கு ஜோடி இவரா? தீயாய் பரவும் ஃபோட்டோ விக்ரம் லேட்டஸ்ட் அப்டேட்...கமலுக்கு ஜோடி இவரா? தீயாய் பரவும் ஃபோட்டோ

  சார்பட்டா பரம்பரை வெற்றியை தமிழ் ரசிகர்கள் சலைக்காமல் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் சார்பட்டா பரம்பரை பாகம் 2 இயக்கும் தீவிரத்தில் இயக்குனர் பா ரஞ்சித் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

  அட்டகத்தி

  அட்டகத்தி

  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் கொடுத்தாலும் அதை நச்சின்னு கொடுக்கும் இயக்குனர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவிற்கு அட்டகத்தி படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகமானவர். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்த இவர் சென்னை 28,சரோஜா,கோவா ஆகிய படங்களில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அறிமுகப் படமாக அட்டகத்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ரஞ்சித்தை பிரபலப்படுத்தியது. அட்டக்கத்தி காதல் படமாக வெளியாகி இருந்தாலும் அதிலும் சில சமூக கருத்துக்களை கொண்ட வசனங்களை வைத்து கைத்தட்டல்களை பெற்றிருப்பார்.

  நேர்மையான வடசென்னை

  நேர்மையான வடசென்னை

  வடசென்னையை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வந்திருந்தாலும் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் இன்றளவும் தனிச் சிறப்பைப் பெற்றுள்ளது அதற்கு காரணம் உண்மையான வடசென்னை என்றால் இப்படித்தான் இருக்கும் என நேர்த்தியாக காட்டியிருப்பார் . நேர்மையான வடசென்னை மக்கள் எவ்வாறு அரசியல் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டி இருப்பார். மெட்ராஸ் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பாராட்டுக்களை தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களையும் இயக்கும் வாய்ப்பை பெற்றார். பா ரஞ்சித், ரஜினிகாந்த் கூட்டணியில் முதன்முறையாக உருவான கபாலி முந்தைய படங்களைப் போலல்லாமல் பக்கா கேங்ஸ்டர் படமாக உருவானது. ரஜினிகாந்த் மலேசியன் கேங்ஸ்டர் டானாக நடித்து தீயை கிளப்பி இருப்பார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றதில்லை என பேசப்பட்டது. அந்த அளவிற்கு பாலிவுட் வரையிலும் கபாலி படத்தின் எதிர்பார்ப்பு பலமாக வீச ஆரம்பித்தது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான கபாலி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் முதல்நாளிலேயே வசூலை வாரி குவித்தது.

  தாராவி மக்களின் உணர்வு

  தாராவி மக்களின் உணர்வு

  கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற கபாலி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்து காலா என்ற படத்தை இயக்கிய பா ரஞ்சித் இந்த முறை மும்பையில் தமிழர்கள் வசிக்கும் தாராவி மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து இருப்பார். இதில் ரஜினிகாந்த் மக்களையும் மண்ணையும் காக்க போராடும் போராளியாக நடித்து இருப்பார். இவ்வாறு தன்னுடைய படங்களின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் சமூகத்தில் சமநிலை இருக்க வேண்டும் என ஒவ்வொரு படைப்புகளிலும் பதிய வைத்து வரும் பா ரஞ்சித் இந்த முறை சற்று வித்தியாசமாக குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

  குத்துச்சண்டை

  குத்துச்சண்டை

  தமிழ் சினிமாவில் இதுவரை குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளியான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த இந்த அளவிற்கு சொற்ப அளவிலேயே வெளிவந்துள்ளது . ஆனால் இதுவரை குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான படங்களிலேயே சார்பட்டா பரம்பரை தனிச் சிறப்பைப் பெற்றுள்ளது. இதுவரை பலரும் அறிந்திராத கேட்டிராத வடசென்னையில் 1970களில் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கு உள்ளே நடக்கும் தீவிர குத்துச் சண்டை போட்டியை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா கபிலன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

  டான்சிங் ரோஸ்

  டான்சிங் ரோஸ்

  மேலும் பசுபதி, ஜான் விஜய், அனுபமா,கலையரசன், ஜான் கொக்கேன், சபீர், தங்கதுரை என மிகப் பெரிய பட்டாளமே இதில் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுவதுபோல இப்படத்தில் வரும் சிறு சிறு கதாபாத்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அனைவரையும் நடிக்க வைத்திருப்பார் இயக்குனர் பா ரஞ்சித். படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் என்றே சொல்ல வேண்டும். ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வகையில் உண்மையான குத்துச் சண்டை விளையாட்டை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ளார். திரையரங்கில் வெளியாக இருந்த இந்த திரைப்படம் கொரோனா சூழல் காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியான போதும் ரிலீசான முதல் நாளிலிருந்தே இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

  சார்பட்டா பரம்பரை பாகம் 2

  சார்பட்டா பரம்பரை பாகம் 2

  குறிப்பாக டான்சிங் ரோஸ், கெவின் டாடி,மாரியம்மா, பாக்கியம்,வேம்புலி கதாபாத்திரங்கள் மிக பிரபலமாக பேசப்பட்டுள்ளன. இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் குறித்து ரஞ்சித் கூறியதாவது " சார்பட்டா பரம்பரை படத்தில் வைக்க முடியாத சில விஷயங்களை முன் கதையாக வைத்து படமெடுக்க யோசிக்கிறேன். 1925இல் கதை ஆரம்பிப்பது போல இருக்கும். இதை வெப் தொடர் அல்லது திரைப்படமாக எடுக்க உள்ளேன். என திட்டவட்டமாக கூறியுள்ளார். பா.ரஞ்சித் அடுத்ததாக "நட்சத்திரம் நகர்கிறது" என்ற ரொமான்டிக் காதல் படத்தை இயக்குகிறார். இதில் அசோக் செல்வன் மற்றும் துஷாரா விஜயன் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

  English summary
  Director Pa Ranjih has said that he has idea to make the sequel of Sarpatta Parambarai soon.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X