»   »  பத்மப்ரியாவின் அந்த கேரக்டர்

பத்மப்ரியாவின் அந்த கேரக்டர்

Subscribe to Oneindia Tamil

கொழுந்தனை காம வெறியோடு விரட்டிய அண்ணி வேடத்தில் சங்கீதா நடித்த சர்ச்சையைக் கிளப்பிய உயிர் படத்தை இயக்கிய சாமி, இன்னொரு பரபரப்பு கதையோடு பட்டையக் கிளப்ப வருகிறார். இப்படத்தில் பத்மப்பிரியா விபச்சாரி வேடத்தில் நடிக்கவுள்ளார்.

தவமாய் தவமிருந்து படத்தில் அடக்கம் ஒடுக்கமாக நடித்த பத்மப்ரியா அடுத்து கிளாமருக்குத் தாவி வட்டாரம் படத்தில் பின்னி எடுத்தார். அவரது உடல் வாகுக்கு கிளாமர் படு அேகாரமாக இருந்ததால் தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் பெங்களூருக்குத் திரும்பி படிக்க ஆரம்பித்த பத்மப்பிரியாவை மலையாளம் இரு கரம் கூப்பி வரவேற்றதால் அங்கு தனது பார்வையைத் திருப்பினார். சொல்லிக் ெகாள்ளும்படியான வாய்ப்புகள் கிடைத்ததால் ெதாடர்ந்து மலையாளத்தில் திறமை காட்டி வந்தால் பாலக்காட்டு மாமி பத்மப்பிரியா.

இப்போது மலையாளத்தில் பிசியான நடிகை பத்மப்பிரியா. தற்சமயம் தமிழில் அவரிடம் உள்ள ஒரே படம் சத்தம் போடாதே மட்டும்தான். தனது ஸ்டிரெயிட் பார்வேர்ட் கேரக்டரால்தான் தமிழில் அதிக படம் வரவில்லை என்கிறார் பத்மா.

குறிப்பாக டிஸ்கஷனில் பத்மப்பிரியா அதிக ஆர்வம் காட்டாததும், ஒத்துழைப்பு கொடுக்காததும் இயக்குநர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாம். இதனால்தான் பத்மா இருக்கும் பக்கம் கூட திரும்பிப் பார்க்க விரும்புவதில்லையாம் இயக்குநர்கள்.

இத்தனைக்கும் படு ஜோவிலயான பொண்ணு பத்மா. அப்படி இருந்தும் கூட தமிழில் அதிக வாய்ப்புகள் வராததால், அதுகுறித்துக் கவலைப்படாமல் மலையாளத்தில் பிசியாக இருக்கிறார் பத்மா.

இந்த நிலையில் தமிழில் அவரைத் தேடி ஒரு வாய்ப்பு வந்துள்ளது. உயிர் படத்தை இயக்கிய சாமி அடுத்து ஒரு பரபரப்பான கதையுடன் கிளம்பி வருகிறார். ஒரு விபச்சாரியின் காதல் கதைதான் சாமியின் புதுப் படத்தின் கதையாம்.

இதில் இதுவரை இல்லாத அளவுக்கு படு வித்தியாசமான நடிப்பைக் கொடுக்கவுள்ளாராம் பத்மப்பிரியா.

இதுகுறித்து பத்மப்பிரியா கூறுகையில், விபச்சாரப் ெபண் கேரக்டரில் நடிப்பது சவாலானது. ஆனால் எனக்கு சவால் என்றால் ரொம்பப் பிடிக்கும். எனவே இந்த கேரக்டரில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். சில விருதுகளையும் இதன் மூலம் அள்ள முடியும் என்று நம்புகிறேன் என்கிறார் பத்மா.

விருதுகளை அள்ளுவதோடு நின்று கொள்ளுங்கள். சர்ச்சையில் சாமியை தள்ளி விட்டு விடாதீங்க.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil