For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'சார்பட்டா' எனக்கு திருப்பு முனை கொடுத்த படம்... பழைய ஜோக் தங்கதுரை நெகிழ்ச்சி !

  |

  சென்னை : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாருவில் கலந்து கொண்டு மக்கள் மனத்தை கவர்ந்தவர் பழைய ஜோக் தங்கதுரை.

  தங்கதுரை சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார்.

  மனுஷன் தூங்குவாரா இல்லையா? அடுத்த மாசம் 3 படம் ரிலீசாகுதே; இதோ அனபெல் சேதுபதி ஃபர்ஸ்ட் லுக்!மனுஷன் தூங்குவாரா இல்லையா? அடுத்த மாசம் 3 படம் ரிலீசாகுதே; இதோ அனபெல் சேதுபதி ஃபர்ஸ்ட் லுக்!

  இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்த பேசியுள்ளார் தங்கதுரை.

  தங்கதுரை

  தங்கதுரை

  தங்கதுரையின் சொந்த ஊர் சென்னை தான். இவர் கல்லுரியில் படிக்கும்போதே சென்னை ஸ்டாண்டாஃப் காமெடி,கானா பாடல் என பல திறமைகளை கொண்டு இருந்தவர். மேலும்,சின்ன சின்ன நிகழ்ச்சிகளிலும் ,கல்லூரி மேடைகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். பின் காமெடி நிகழ்ச்சிக்காக நடந்த ஆடிஷனில் தன் நண்பர்களின் உதவினால் பங்கேற்று நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் தேர்வு ஆனார். இவர் பயோ டெக்னாலஜி படித்து இருந்தாலும் கலைத் துறையின் மீது அதிக ஆர்வம் உடையவர். இவரை முதலில் நண்பர்கள் டைகர் கார்டன் தங்கதுரை என்று தான் அழைப்பார்களாம்.

  பழைய ஜோக் தங்கதுரை

  பழைய ஜோக் தங்கதுரை

  கலக்கப்போவது யாரு முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே பெரிய அளவு பிரபலமானவர் தங்கதுரை. இவரை அனைவரும் பழைய ஜோக் தங்கதுரை என்று தான் அனைவரும் கூப்பிடுவார்கள். ஏன்னா, அவர் சொல்ற ஜோக்குகளும் எல்லாம் அதர பழசாகவும், போர் அடிக்கிற மாதிரியும் இருக்கும். அதிலும்,அவர் சொன்ன புளிய மரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே என்று சொன்ன ஜோக் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் கொடி கட்டி பறக்கிறது.

  சின்ன சின்ன வேடத்தில்

  சின்ன சின்ன வேடத்தில்

  காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தங்கதுரை, தமிழில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். எங்கேயும் எப்போதும், மாநகரம், அட்டகத்தி தினேஷின் அண்ணனுக்கு ஜே, இன்று நேற்று நாளை படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியில் அசத்தி இருப்பார். குறைந்த காட்சியில் வந்தாலும் அந்த காட்சி ரசிக்கும் படி இருக்கும்.

  மனத் திறந்த தங்கதுரை

  மனத் திறந்த தங்கதுரை

  சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற சார்பட்டா பரம்பரையில் முக்கிய கதாபாத்திரத்தில் தங்கதுரை நடித்திருந்தார். பாக்ஸ் சண்டையை தொகுத்துவழங்கும் கேரக்டரில் மிகவும் இயல்பாக பேசி நடித்திருந்தார். இவர் வந்த காட்சிகளைவிட இவர் பேசிய வசனம் திரையில் அதிகம் எதிரொலித்தது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து தங்கதுரை மனம் திறந்து கூறியுள்ளார்.

  திருப்புமுனை

  திருப்புமுனை

  சார்பட்டா பரம்பரை எனக்கு திருப்பு முனை கொடுத்த படம்னு சொல்லலாம். ஏற்கனவே பல படங்கள் பண்ணியிருந்தாலும் இந்தப் படம் என்னை உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. இந்த பெருமை எல்லாம் பா.ரஞ்சித்தையே சேரும். பா.ரஞ்சித் சார் ரொம்ப பொறுமைசாலி. எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் நடிகர், நடிகைகளிடம் டென்ஷன் இல்லாமல் கூலாக வேலை வாங்குவார்.

  முக்கியமான கேரக்டர்

  முக்கியமான கேரக்டர்

  கபாலி படம் எடுக்கும் போது ரஞ்சித்தை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். சார்பட்டா பரம்பரையில் நினைவுவைத்து அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அந்த படத்திற்கு மிகவும் முக்கியமான வர்ணனையாளர் கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்ததற்கு மிகவும் நன்றி என்றார். ஆர்யா, பசுபதி ஜி.எம்.சுந்தர், கலையரசன், காளிவெங்கட், ஜான்விஜய் உட்பட மொத்த டீமும் ஜாலியாக பழகினார்கள் என்று அகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.

  ஏராளமான படங்கள்

  ஏராளமான படங்கள்

  பழைய ஜோக் தங்கதுரை நடித்த பன்னிகுட்டி, ஜாங்கோ, ப்ளான் பண்ணி பண்ணனும், செல்பி, பார்ட்னர்,மஹா போன்ற திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன . மேலும், எதற்கும் துணிந்தவன், கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம், சிபிராஜ் நடிக்கும் படம், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், சன்னிலியோன் நடிக்கும் படம் உட்பட ஏராளமான படங்கள் என ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார்.

  English summary
  Vijay Tv comedian Palaya joke thangadurai Shared her experience about sarpatta parambara.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X