Just In
- 1 hr ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
- 4 hrs ago
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- 11 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 16 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
Don't Miss!
- News
இந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க முடியாத நாள்!
- Lifestyle
ஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்!
- Sports
கோலிதான் என்னை காப்பாற்றியது.. அவர் இல்லையென்றால் அவ்வளவுதான்.. உருகிய ரஹானே.. செம பின்னணி
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒவ்வொரு இயக்குநரும் தயாரிப்பாளராகணும்! - 'மெரினா' இயக்குநர், தயாரிப்பாளர் பாண்டிராஜ்

இப்போது இவர் உருவாக்கியுள்ள புதிய படம் மெரினா. தலைப்பே சொல்லிவிடும் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை.
ஆம்... மெரினா கடற்கரையே வாழ்க்கை என அங்கே சுண்டல், டீ விற்றபடி திரியும் சிறுவர்கள், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள லோக்கல் புரோக்கர்கள், மெரினாவில் காதல் வளர்க்கும் இளசுகள்... என நாம் பார்க்கும், ஆனால் விரிவாகத் தெரியாத இன்னொரு உலகம் பற்றித்தான் இந்தப் படத்தில் அவர் சொல்லியிருக்கிறாம்.
இந்தப் படம் குறித்து நம்மிடம் பேசினார் பாண்டிராஜ்.
படம் பற்றி வெளியாகியுள்ள தகவல்களை வைத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட டாகுமெண்டரி எஃபெக்ட் தெரிகிறதே, என்று ஆரம்பித்தோம்.
உடனே சட்டென்று இடைமறித்தவர், "இதுதான் கதை என்பது முடிவானதுமே, எனக்குள் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. ஆனால் மெரினாவில் பல உலகங்களைப் பார்க்க முடிந்தது. அது ஒரு முடிவற்ற கதைக் களம். அதில் உள்ள சில சுவாரஸ்யமான நிகழ்வுகள், மனிதர்களைப் பற்றி வணிக ரீதியில் பொழுதுபோக்காகச் சொல்லியிருக்கிறேன். ஏதோ உபதேசம் போலவோ, செய்திப் பட சாயலோ இதில் எள்ளளவும் பார்க்க முடியாது. மெரினா கடற்கரையை சுற்றி ஆயிரம் சோகங்கள், இருட்டு உலகங்கள் என்று இருந்தாலும், நான் காட்டியிருப்பது ரொம்ப ஜாலியான மெரினாவை மட்டும்தான்," என்றார்.
இந்தப் படத்தில் தயாரிப்பாளராகவும் மாறியது ஏன்?
"எனக்கு இப்போது 2 படங்கள் வெளித்தயாரிப்பாளர்களுக்கு செய்து தரவேண்டிய கமிட்மெண்ட் உள்ளது. ஆனாலும் இந்தக் கதையை நான் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன். யாரிடமும் இந்தக் கதையைக் கொண்டுபோய் கொடுத்து தயாரிப்பாளராக இருக்கச் சொல்லவில்லை.
இதுபோன்ற படங்களுக்கு இயக்குநரே தயாரிப்பாளராக இருப்பதுதான் வசதியானது. என்னைக் கேட்டால் ஒவ்வொரு இயக்குநரும் தயாரிப்பாளராகணும். அப்போதுதான் தயாரிப்பாளரின் வலி புரியும். நான் இது வரை பண்ண இரண்டு படங்களிலும் தயாரிப்பாளர்களின் இயக்குநராக, அவர்களுக்கு எந்த வகையிலும் நஷ்டம் ஏற்படுத்தாத இயக்குநராகவே இருந்துள்ளேன்," என்றார்.
இந்தப் படத்துக்காக நிறைய ஆய்வுகளெல்லாம் மேற்கொண்டு, அதில் கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் காட்சிகளை அமைத்தாராம் பாண்டிராஜ்.
படத்தின் நடிகர்கள் குறித்து அவர் கூறுகையில், "புதுமுகம் சிவகார்த்திகேயன், ஓவியா, 'பசங்க' படத்தில் நடித்த பக்கடா மற்றும் 13 சிறுவர்கள் நடித்துள்ளனர் மெரீனாவில். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரத்தில் விமலையே நடிக்க வைக்கலாம்னுதான் நினைச்சேன்.
அப்புறம் 'பசங்க' படம் மாதிரியே ஆயிடுமோன்னு சந்தேகமா இருந்தது. அப்போ தான் ஒரு நிகழ்ச்சியில் சிவ கார்த்திகேயனை பார்த்தேன். நம்ம கதைக்கு இவரு பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. என்னுடைய உதவி இயக்குனர்களும் இதையே சொன்னார்கள். இந்த படத்தில் இவர் எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருப்பார். இவருக்கு ஜோடியா ஓவியா நடிச்சிருக்காங்க. இருவருக்குள் இருக்கும் காதல்தான் படம்.
'பசங்க' படத்தில் நடித்த பக்கோடா பாண்டி இந்த படத்தில் மெயின் ரோல் பண்ணிருக்கான். இந்த சின்ன வயசிலேயே அவனுக்குள்ளே இவ்வளவு திறமையானு படம் பார்க்கும் எல்லாரையும் நினைக்க வைப்பான். 'பசங்க' படத்தில் அவனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா கிடைக்கல. இந்தப் படம் அந்தக் குறையைத் தீர்க்கும்," என்றார்.
உங்கள் சக இயக்குநர்கள், முதல் படம் தந்த சசி போன்றவர்களுக்கு இந்தக் கதை தெரியுமா... அவர்கள் கருத்து என்ன?
"இந்த கதை இயக்குனர் சுசீந்திரனுக்கு மட்டும் தான் தெரியும். சசி சாருக்கு இந்த கதையின் ஒன்லைன் தெரியும்," எனும் பாண்டி, இதுவரை எந்த புதிய இயக்குநரும் செய்யாத ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் செய்கிறார்.
இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியும் விருதுகளும் குவித்த மீரா நாயரின் 'சலாம் பாம்பே' என்ற படத்தினை பார்த்துதான் இந்த படத்தின் கதையை தயார் செய்தாராம் பாண்டிராஜ். ஆகையால் படத்தின் ஆரம்பத்திலேயே இதற்கான நன்றி அறிவிப்பை தெரிவிக்க இருக்கிறாராம்!