»   »  அலட்டிக்காத கூல் மனிதர் அஜீத்.. 'ஒன்இந்தியா' விடம் மனம் திறந்த 'என்னை அறிந்தால்' பார்வதி நாயர்!

அலட்டிக்காத கூல் மனிதர் அஜீத்.. 'ஒன்இந்தியா' விடம் மனம் திறந்த 'என்னை அறிந்தால்' பார்வதி நாயர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாடல் அழகி, விளம்பரப் பட நடிகை, மிஸ் கேரளா அழகி என பல முகம் தாண்டி இப்போது நடிகையாகவும் பரிமளித்து வருகிறார் பார்வதி நாயர்.

தமிழில் நிமிர்ந்து நில், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் இப்போது என்னை அறிந்தால் படத்தின் மூலம் அஜீத் படத்திலும் இணைந்துள்ளார்.


ஒரே நேரத்தில் அஜீத், கெளதம் மேனன் என இரு பெரும் திரை இமயங்களுடன் இணைந்தது அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த சூட்டோடு சூடாக "ஒன்இந்தியா தமிழ்" இணையத்திற்கு ஒரு பிரத்யேக பேட்டியைக் கொடுத்தார் பார்வதி நாயர்.


மாடல், நடிகை – இரண்டில் எது மகிழ்ச்சி தருகிறது?

மாடல், நடிகை – இரண்டில் எது மகிழ்ச்சி தருகிறது?

என்னால் இந்த இரண்டையும் ஒப்பிட்டு கூற முடியாது. ஏனெனில், நான் இன்னும் மாடலிங் துறையில் இருக்கின்றேன். நேற்றைக்குக்கூட ஒரு விளம்பர படத்தில் நடித்துவிட்டுதான் வந்துள்ளேன். இரண்டுக்கும் தனித்தனியான நிறை, குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. மாடலிங் துறையில் வேலை எளிது. ஆனால், சினிமாவைப் பொறுத்த வரையில் கடின உழைப்பு இருக்க வேண்டும். அதனால்தான், விளம்பரத்துறையினைச் சேர்ந்த பலர் சினிமாவில் நடிக்க முன்வருவதில்லை. என்னைப் பொறுத்த வரையில் சினிமா என் கனவு என்பதால் நடிப்பு எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. அதனால் எனக்கு இரண்டுமே மகிழ்ச்சிதான்.மைசூர் சோப் விளம்பரத்தில் நடித்திருக்கிறீர்கள்... உங்களுக்கு பிடித்த சோப்?

மைசூர் சோப் விளம்பரத்தில் நடித்திருக்கிறீர்கள்... உங்களுக்கு பிடித்த சோப்?

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்தில் நடிக்கும்போதுதான் அந்த சோப்பினை முதன்முதலாக உபயோகித்தேன். அந்த சமயத்தில்தான் விளம்பரத்திற்கு பின்னர் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட மைசூர் சாண்டல் சோப்பினை தொடர்ச்சியாக உபயோகிக்க ஆரம்பித்தேன். நிஜமாகவே மிகவும் அருமையான சோப் அது. நறுமணமும், சந்தனத்தின் வாசனையும் கொண்ட சோப். ஆனால், இப்போது நான் ஷவர் ஜெல்தான் உபயோகிக்கிறேன். மற்றபடி இப்போதும் கூட மைசூர் சாண்டல் சோப் உபயோகிக்க நான் ரெடிதான்.


உங்களுடைய விளம்பரங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளனவா?

உங்களுடைய விளம்பரங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளனவா?

இதுவரையில் அதுபோன்ற எந்த எதிர்ப்புகளையும் நான் மக்களிடம் இருந்து சந்தித்ததில்லை. நல்ல வரவேற்பினைத்தான் பெற்றுள்ளேன்.


கிளாமர் - பாந்தம் எது உங்களுக்கு பிடிக்கும்?

கிளாமர் - பாந்தம் எது உங்களுக்கு பிடிக்கும்?

என்னைப் பொறுத்த வரையில் உடைகளில் சில கட்டுப்பாடுகள் உண்டு. எனக்கு பாந்தமான உடைகளை கண்டிப்பாக அணிவேன். இன்றைய மாடர்ன் உலகில் எது சாத்தியமான உடைகளோ அதனை அணிந்து நடிக்க எனக்கு மறுப்பு ஒன்றும் இல்லை. கதைகளுக்கு ஏற்றவாறு நடிப்பதையே நான் விரும்புகின்றேன். அதனால், இரண்டுமே எனக்கு ஓகேதான்.


படித்தது எஞ்சினியரிங்… எப்படி சினிமா மீது ஈர்ப்பு வந்தது?

படித்தது எஞ்சினியரிங்… எப்படி சினிமா மீது ஈர்ப்பு வந்தது?

நான் எப்போதுமே என்னுடைய படிப்பில் குறைவாக இருந்ததில்லை. நல்ல மதிப்பெண்களையே பெற்று வந்துள்ளேன். என்னுடைய பட்டப்படிப்பினைக் கூட முதல் தர மதிப்பெண்களுடனேயே முடித்துள்ளேன். மேலும், எனக்கு வளாகத் தேர்விலும் நல்ல வேலை கிடைத்திருந்தது.


கிரியேட்டிவ் துறையில் ஈடுபாடு

கிரியேட்டிவ் துறையில் ஈடுபாடு

ஆனாலும், எனக்கு கிரியேட்டிவ் துறையில்தான் ஈடுபாடு இருந்து வந்தது. சினிமாத்துறை எனக்கு அப்படி ஒரு துறையாக அமைந்தது. என்னுடைய பெற்றோரில் யாருமே நடிப்புத் துறையில் கிடையாது. எனினும், எனக்கு பிடித்த துறையாக இருந்த காரணத்தினால் சினிமாவினைத் தேர்ந்தெடுத்தேன்.


எந்த மொழியில் நடிப்பது உங்களுக்கு எளிது?

எந்த மொழியில் நடிப்பது உங்களுக்கு எளிது?

நான் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இதுவரையில் நடித்ததில்லை. ஆனால், இதுவரையில் நடித்த படங்களில் மொழி எனக்கு ஒரு இடைஞ்சலாக இருந்ததில்லை. படத்தின் கதை, சூழல், இயக்குனர், சக நடிகர்களைப் பொறுத்துதான் ஒரு படத்தில் நம்முடைய நடிப்பின் ஆழம் அமையும் என்பது என்னுடைய கருத்து. மேலும், இப்போது எனக்கு தமிழ் மொழி கூட நன்றாக பழகிவிட்டது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்த வரையில் நன்றாகவே நடிப்பிற்கு மதிப்பு கொடுக்கிறார்கள். நடிப்பினைப் பொறுத்த வரை என்ன மொழியாக இருந்தாலும் ரசிகர்களின் வரவேற்பே உண்மையான மகிழ்ச்சி.


அஜித்துடன் நடித்த அனுபவம்

அஜித்துடன் நடித்த அனுபவம்

அஜித் சார் ஒரு மென்மையான மனிதர். மனிதர்களை மதிக்கக் கூடிய மனதினைக் கொண்டவர். அவருடன் இணைந்து பணியாற்றிய எல்லோருக்குமே மிகவும் பிடித்த ஒருவர். அடிமட்ட ஊழியர்கள், மேல்மட்டத்தில் இருப்பவர்களையும் சமமாக மதிக்கக் கூடிய ஒருவர். எனக்கு மிகவும் பிடித்த ஒருவர். அவருடன் பணியாற்றுபவர்கள் எல்லோருமே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவருடன் நடித்த போது மிகவும் எளிதாக உணர்ந்தேன்.


கமல்ஹாசன், அஜித் பற்றி...!

கமல்ஹாசன், அஜித் பற்றி...!

அஜித் சாரைப் பொறுத்த வரையில் வெளியிலும் சரி, நடிக்கும் போதும் சரி மிகவும் கூலான ஒருவர். அலட்டிக் கொள்ளவே மாட்டார்.


கமல் சாரைப் பொறுத்த வரையில் வெளியில் மிகவும் எளிமையான, பழகுவதற்கு சாதரணமான மனிதர். ஆனால், கேமராவிற்கு முன்னால் நின்றுவிட்டால் மனிதர் அப்படியே நடிப்புடன் ஒன்றிவிடுவார்.சினிமாத் துறையில் எதிர்கால திட்டம்

சினிமாத் துறையில் எதிர்கால திட்டம்

வித்தியாசமான கதாப்பாத்திரங்களிலும், கம்பீரமான கதாப் பாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய, எல்லா வகையான மக்களும் ரசிக்கக் கூடிய வகையிலான கதாபாத்திரங்களில் நடிக்கவே நான் விரும்புகின்றேன்.


உங்களுடைய ஓவிய ஆர்வம் பற்றி கூறுங்களேன்

உங்களுடைய ஓவிய ஆர்வம் பற்றி கூறுங்களேன்

என்னுடைய தாயார் மிகச்சிறந்த ஓவியர். நான் தனியாக ஓவியக் கலையைக் கற்றுக் கொண்டதில்லை. அந்தக் கலையின் மீதான என்னுடைய ஈடுபாட்டுற்கு ஒருவேளை ஜீன் கூட காரணமாகக் இருக்கலாம்.


அதனால்தானோ என்னவோ எனக்கு இடதுகையால் வரையும் பழக்கம் கூட சிறு வயதில் இருந்தது. நான் எழுதத் தொடங்கிய போது இடது கையால்தான் எழுதத் தொடங்கினேன். இப்போது அப்படி இல்லாவிட்டாலும் என்னால் இடது கையாலும் ஓரளவிற்கு வரையவோ, எழுதவோ முடியும்.உத்தம வில்லன் - கமல் பற்றி கூறுங்கள்

உத்தம வில்லன் - கமல் பற்றி கூறுங்கள்

உத்தம வில்லன் திரைப்படத்தினைப் பொறுத்த வரையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. பெரிய, பெரிய நடிகர்களுடன் நடிக்க சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்துள்ளது. எல்லோருக்குமே ஒரு நிமிட கதாப்பாத்திரமானலும் கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.


கமலுடன் நடித்தது அதிர்ஷ்டம்

கமலுடன் நடித்தது அதிர்ஷ்டம்

என்னைப் பொறுத்த வரையில் இது பெரிய அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். கமல் சார் நடிப்பினைப் பொறுத்த வரையில் எனக்கு மிகவும் உதவி செய்தார். ஒவ்வொருக்கும் அவர்களுக்கான இடத்தினைக் கொடுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு அரிய மனிதர் கமல் சார்.


“தல” கூட நடிச்சிட்டீங்க… “தளபதி” கூட நடிக்கிற ஐடியா இருக்கா?

“தல” கூட நடிச்சிட்டீங்க… “தளபதி” கூட நடிக்கிற ஐடியா இருக்கா?

கண்டிப்பாக... அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.


திரிஷா, அனுஷ்கா கூட நடித்த அனுபவம் ..

திரிஷா, அனுஷ்கா கூட நடித்த அனுபவம் ..

இரண்டு பேருமே மிகவும் இனிமையானவர்கள். சினிமாத் துறையில் முதன்மையான இடத்தில் இருந்தாலும் அந்த ஈகோவே கிடையாது இருவருக்குமே. அவர்கள் இருவருடன் நடிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தேன். இருவருமே பழக்குவதற்கு மிகவும் "ஸ்வீட்". அதனால்தானோ என்னவோ எல்லோருமே அவர்களுடன் நடிப்பதை இனிமையாகவே உணர்கின்றார்கள்.


English summary
One India Tamil made a special interview with the actress Parvathy Nair who has been acted in “Ennai arinthal” movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more