ஃபேமிலி மேன் வெப் தொடரில் தீவிரவாதியாக மக்கள் என்னை ஏற்றுக்கொண்டனர்.. நீரஜ் மாதவ் எமோஷனல்!

சென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிலம்பரசன், நடிகை சித்தி இத்னானி நடிப்பில் வெளிவந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இப்படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு இணையாக, நடிப்பில் முத்திரை பதித்துள்ளார் நடிகர் நீரஜ் மாதவ். இவர் ஃபேமிலி மேன் வெப் தொடரில் நடித்தது குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் நீரஜ் மாதவ் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

 நடிகனாக வளர்ச்சி பெற...

நடிகனாக வளர்ச்சி பெற...

கேள்வி: ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?


பதில்: ஃபேமிலிமேன் வெப்சீரிஸ் நான் நடித்தது, நடிப்பில் நான் செய்த புரட்சி என்றே கூறலாம். நடிகனாக நாம் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த தருணத்தில் தான் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் நடிக்க ராஜ் மற்றும் டி.கே.கிருஷ்ணா என்னை அழைத்தனர். அப்பொழுது தான் நெட்பிளிக்ஸ் அறிமுகமானது. அப்பொழுது நான் ஒடிடி குறித்த தகவல்களை அவ்வப்போது அறிந்து கொண்டேன். சினிமாத்துறையில் இருக்கும் சிலர், நான் ஒடிடியில் நடிக்க சென்றபோது எல்லோரும் சினிமாவிலிருந்து சீரியலுக்கு செல்கிறாயா என்று கேட்டார்கள். பொதுவாக தென்னிந்திய நடிகர்கள் வடஇந்திய படங்களில் நடிப்பது குறைவு. எனவே கதையை கேட்க வேண்டும் என்று விரும்பினேன். நல்ல கேரக்டர் வரும்போது கண்டிப்பாக அவற்றை விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

 தனிப்பட்ட முத்தக்காட்சிகள்

தனிப்பட்ட முத்தக்காட்சிகள்

கேள்வி: ஒவ்வொரு படத்திலும் உங்களுக்கு முத்தக்காட்சிகள் இருக்கிறது... அது குறித்து....


பதில்: வாழ்க்கையில் முத்தம் கொடுப்பதற்கு யோசிப்பதில்லை. ஃபேமிலிமேன் கதையானது டிராமா தொடர்பானது. சவாலான காட்சிகள் இருந்தது. பொதுவாக தீவிரவாதி கேரக்டரை மக்கள் எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள். ஆனால் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் நான் செய்த தீவிரவாதி கேரக்டரை மக்கள் விரும்பினார்கள். ஏனென்றால் அவனுக்குள் ஒரு எமோஷனல் இருந்தது. தனிப்பட்ட முத்தக்காட்சிகள் எதுவும் கிடையாது.
கேள்வி: உங்கள் தலைமுடியின் ரகசியம் என்ன?
பதில்: நான் தலைமுடியை சீவ மாட்டேன். பெரிதாக ஒன்றும் செய்வதும் கிடையாது. தலைமுடியை கையால் க்ரெஞ்ச் மட்டுமே செய்வேன் என்றார்.

 நடிகர் மம்முட்டியுடன் நடிக்க வேண்டும்

நடிகர் மம்முட்டியுடன் நடிக்க வேண்டும்

கேள்வி: உங்களுடைய லட்சியம் என்ன?


பதில்: இளம் தலைமுறையினர் விருப்பத்தை புரிந்து கொண்டு வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே எனது ஆசை. மலையாளத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். நடிகர் மம்முட்டியுடன் மட்டும் நடிக்கவில்லை. தேசிய விருது பெற்ற அபர்ணா முரளியும், நானும் நடித்த சுந்தரி கார்டன்ஸ் என்று வெப்சீரியஸ் தற்போது சோனி லைவ்வில் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியில் ஒரு படம் நடித்துள்ளேன். தமிழ் படத்தில் நடிப்பதற்கான ஒரு டிஸ்கஷன் போய் கொண்டு இருக்கிறது. மின்னல் முரளி தயாரிப்பில் ஆர்டிஎக்ஸ் என்ற படத்தில் நடிக்கிறேன். இப்படத்திற்கு அன்பறிவு சண்டைக்காட்சியும், சாம் சி.எஸ்.இசையமைக்கிறார் என்றார்.

என்னுடைய முதல் படம்

கேள்வி: நடிகனாக எப்பொழுது பரிணாமம் அடைந்தீர்கள்?


பதில்: இயக்குநர் மற்றும் எழுத்தாளராக வேண்டும் என்பது எனது குறிக்கோள். ஸ்கூல் ஆப் டிராமில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் தான் படித்தேன். . என்னுடைய முதல் படத்தை யாராலும் பார்க்க முடியாது. ஆடியன்ஸ் மூலம் தான் படத்துக்கு வந்தேன். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மெமரிஸ் படத்தில் நடித்தேன். என் நடிப்பை பார்த்து இயக்குநர் ஜீத்து ஜோசப், மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தில் சிறுவன் கதாபாத்திரம் அளித்தார். இது எனது மூன்றாவது படமாகும். எல்லோரும் நமது நடிப்பை பாராட்டுகிறார்கள். நாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிப்புக்கு வந்தேன். அதுவே தொடர் கதையாக மாறிவிட்டது என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/uj-wQjwIZpE இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X