Don't Miss!
- Finance
அதானி குழுமத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டி பார்த்த ஹிண்டர்ன்பர்க்.. 3 நாளில் 29% மதிப்பு சரிவு!
- News
பழிக்கு பழி வாங்கிட்டோம்.. பாகிஸ்தான் பெஷாவர் மசூதி தாக்குதலுக்கு காரணம் சொன்ன தெஹ்ரிக்-இ-தாலிபான்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
அடேங்கப்பா.. ஆளு என்ன இப்படி இருக்காரு.. செம திமிரு வில்லன் ஜான் லூகாஸின் பிரத்யேக பேட்டி!
சென்னை: நடிகர் அர்ஜுனின் தங்கை மகனும் கன்னட நடிகருமான துருவ் சார்ஜா நடிப்பில் வெளியாகி உள்ள செம திமிரு படத்தின் வில்லன்களில் ஒருவரான வெளிநாட்டு பாடி பில்டர் ஜான் லூகாஸ் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.

அர்னால்டுக்கு புள்ள மாதிரி இருக்கும் இவருக்கு இணையாக துருவ் சார்ஜா சண்டையிடும் காட்சிகள் எல்லாம் படத்தில் வேற லெவல் அப்ளாஸ் அள்ளி உள்ளன.
இயக்குநர் நந்தா கிஷோர் இயக்கத்தில் துருவ சார்ஜா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கன்னடத்தில் பொகரு என்றும் தமிழில் செம திமிரு என்றும் இந்த படம் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு துருவ சார்ஜாவின் சகோதரர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு காரணமாக மரணமடைந்தது ஒட்டுமொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அப்பா இறந்ததும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் அம்மாவை சரியாக புரிந்து கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறும் நாயகன் யாருக்கும் அடங்காதவனாக வளர்வதும், காசுக்காக எதையும் செய்யும் நபராக மாறியும் தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார். கடைசியாக எப்படி திருந்தி தனது ஏரியா மக்களுக்கு உதவி செய்கிறான் என்கிற கதையில் சிறப்பாக நடித்துள்ளார் துருவ சார்ஜா.
துருவ சார்ஜாவுடன் படத்தில் சில வெளிநாட்டு பாடி பில்டர்கள் நடித்துள்ளனர். அதில், ஒருவரான ஜான் லூகாஸ் தென்னிந்திய சினிமாவில் நடித்த தனது அனுபவத்தையும், நடிகர் அர்ஜுன் பற்றியும் இந்த பேட்டியில் பேசியுள்ளார்.
மேலும், பாடி பில்டிங்கில் ஆர்வமுடன் இருக்கும் இளைஞர்களுக்கு சூப்பரான சில டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார். அது என்னன்னு தெரிந்து கொள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!