»   »  நடிப்பு+கிளாமர்=பூர்ணிதா

நடிப்பு+கிளாமர்=பூர்ணிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

படு ஃபிரஷ்ஷாக இருக்கிறார் முன்னாள் குட்டிப் பாப்பா பூர்ணிதா. தமிழ் கைவிட்ட போதிலும் தெலுங்கில் அட்டகாசமான வாய்ப்பு வந்ததால்தான் இந்த பூரிப்பாம்.

குட்டிப் பெண்ணாய் ஏராளமான டிவி சீரியல்களிலும், ஓரிரு தமிழ்ப் படங்களிலும் தலை காட்டியவர் பூர்ணிதா. அப்போது அவரது பெயர் கல்யாணி. குமரியான பின்னர் பூர்ணிதா என நாமகரணம் சூட்டிக் கொண்டு நானும் ஹீரோயின்தான் என்று மார் தட்டி ரசிகர்களைக் கலக்க மார்க்கெட்டில் குதித்தார்.

இவரது தாயார் பீனா. இவர் ஒரு நடன மங்கை. வெஸ்டர்ன், கிளாசிக்கல் என எல்லா வகை டான்ஸ்களும் பீனாவுக்கு அத்துப்படி என்பதால் சின்னப் பெண்ணாக இருந்தபோதிலிருந்தே பூர்ணிதாவையும் டான்ஸில் கலக்கலாக ரெடி செய்து விட்டார்.

இதனால் ஹீரோயினாக மாற பூர்ணிதாவுக்கு பெரும் தடை என்று எதுவும் இல்லை. பேபி முகம் இன்னும் முழுமையாகப் போகவில்லை என்பதைத் தவிர பூர்ணிதாவிடம் எந்தக் குறையும் இல்லை.

இருந்தாலும் நானும் ஒரு ஹீரோயின்தான், எல்லா வகையான ரோல்களிலும் நான் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கையாக கூறுகிறார் பூர்ணிதா.

தமிழில் அவர் நடித்த முதல் இரு படங்களிலும் கவர்ச்சியை ஜூஸ் பிழிந்து கொடுத்திருந்தார். ஏன் இப்படி என்று கேட்டால், நடிப்புதான் முக்கியம். அதேசமயம், கிளாமரையும் புறக்கணித்து விட முடியாது. இரண்டும் இணைந்திருந்தால்தான் அந்த கேரக்டர் முழுமை பெறும். அதனால்தான் நடிப்போடு, கிளாமரையும் கலந்து நான் தருகிறேன் என்கிறார் பிராக்டிகலாக.

தமிழில் இப்போது புதிய படங்கள் எதுவும் இல்லையாம். இருந்தாலும் தெலுங்கில் இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறதாம். கேமராமேன் (மீரா வாசுதேவனின் மாமனார்) அசோக்குமார்தான் அந்தப் படத்தை இயக்கப் போகிறாராம்.

இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதற்காக வீட்டில் கடுமையாக ஹோம் ஒர்க் செய்து வருகிறாராம் பூர்ணிதா. இதில் ஒரு வேடத்தில் கிளாமரில் பிரளயமாக மாறியிருக்கிறாராம்.

பூர்ணிதாவுக்கு நடிப்பு, கிளாமர் தவிர பரத நாட்டியம் நன்றாகத் தெரியுமாம். பாடத் தெரியுமாம். நீச்சலில் கில்லாடியாம். இரண்டு மலையாளப் படங்களில் பாடியுள்ள பூர்ணிதாவுக்கு தமிழிலும் சொந்தக் குரலில் பாட பேரராசையாக உள்ளதாம்.

எல்லா வகையான நடிப்பிலும் அசத்தி, பொம்பள கமல் என்ற பெயர் வாங்குவதே பூர்ணிதாவின் லட்சியமாம்.

உண்மையில் இதுதான் பேராசை பூர்ணிதா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil