»   »  ஆர்வம், தேடல் இருந்தால்தான் நல்ல படம் தரமுடியும்!- பிரபு சாலமன்

ஆர்வம், தேடல் இருந்தால்தான் நல்ல படம் தரமுடியும்!- பிரபு சாலமன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Prabhu Solomon
இயக்குநர்களுக்கு நல்ல ஆர்வமும் தேடலும் இருந்தால்தான் வித்தியாசமான படங்களைத் தர முடியும், என்றார் இயக்குநர் பிரபு சாலமன்.

இயக்குனர் பிரபு சாலமன் நீலாங்கரையில் உள்ள ஊடகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாணவர்கள் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "எனது மைனா படம் வித்தியாசமான கதைக் களத்தில் வந்தது. 40 ஆண்டுகளாக கிராமங்கள் என்று எதை காட்டினார்களோ அது மாதிரி இல்லாமல் வித்தியாசமான இடத்தை மைனாவில் காட்டினேன்.

அந்த இடத்தை கண்டுபிடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். நான் உதவி இயக்குனராக இருந்தபோது பிலிம் சிட்டியில் சென்னை நகர தெருக்களை செட் போட்டு படமாக்கினார். அது எனக்குப் பிடிக்கவில்லை. அதில் ஜீவனே இருக்காது.

ஆனால் 'கொக்கி' படத்தை பாரிமுனையில் கூட்டத்தோடு கூட்டமாய் ரகசிய காமிராக்கள் வைத்து யதார்த்தமாய் எடுத்தேன். பாராட்டினார்கள்.

ஆர்வமும் தேடலும் இருந்தால்தான் நல்ல படங்களைக் கொடுக்க முடியும். ஒரு படத்துக்கு ஜீவன் ரொம்ப முக்கியம். யதார்த்தமான படங்கள்தான் ஜெயிக்கின்றன...", என்றார்.

English summary
Prabhu Solomon shared his film experiences with media students yesterday. He told that the real passion and interest induced one to make good movies.
Please Wait while comments are loading...