»   »  தேசிய நெடுஞ்சாலை 47

தேசிய நெடுஞ்சாலை 47

Subscribe to Oneindia Tamil

சென்னை 600028 வெற்றிப் படத்தை இயக்கி, வெற்றிப் பட இயக்குநர் வரிசையில் சேர்ந்துள்ள வெங்கட் பிரபு, அடுத்து தேசிய நெடுஞ்சாலை 47 என்ற படத்தை இயக்கவுள்ளார்.

கங்கை அமரனின் மகனான பிரபு, சென்னை 600028 படத்தின் வெற்றிக்குப் பிறகு கோலிவுட்டில் கவனிப்புக்குரிய இயக்குநராக உயர்ந்துள்ளார். தற்போது 2வது படத்துக்கு ரெடியாகி விட்டார்.

படத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று செய்தியாளர்களை இப்படம் தொடர்பாக சந்தித்த வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது, பெண்களுக்குத்தான் ஆசைப்படக் கூடாது, எண்கள் மீது ஆசை கொள்வதில் தப்பில்லையே என்று ஜாலியாக பதிலளித்தார்.

தலைப்பு வைப்பதில் கோலிவுட்காரர்கள் ராசி பார்ப்பது வழக்கம். அந்த ராசி பார்க்கும் பார்ட்டிகளின் வரிசையில் வெங்கட்டும் சேர்ந்து விட்டார் போலும். முதல் படத்தின் கடைசியில் எண்கள் வருவதால், அடுத்த படத்திலும் எண் வருவது போல பார்த்துக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து வெங்கட் பிரபு பேசுகையில், முதல் படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய படங்களை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் நல்ல கதை கிடைக்காததால் நான் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. வித்தியாசமான கதைகளுடன், என்னை திரைத் துறையில் நிலை நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

இப்போது நல்ல கதை கிடைத்துள்ளது. நண்பன் எஸ்.பி.சரண்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். இதிலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்தவுள்ளேன். ஹீரோ, ஹீரோயின் புதுமுகங்கள்தான். யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பாளர். சக்தி சரவணன் கேமராமேன் என்றார் வெங்கட் பிரபு.

இந்தப் படத்தை முடித்து விட்டு அஜீத்தை வைத்து இந்த ஆண்டு இறுதியில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம் வெங்கட் பிரபு. படத்தின் பெயர் மற்றும் பிற கலைஞர்கள் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லையாம்.

சில வாரங்களுக்கு முன்புதான் தனுஷ் நடிப்பில் தேசிய நெடுஞ்சாலை 47 என்ற பெயரில் பட விளம்பரம் வந்தது. ஆனால் இப்போது வெங்கட் பிரபு அந்த டைட்டிலைக் கூறுகிறார். வெங்கட் பிரபுவுக்கு டைட்டிலை விட்டுக் கொடுத்து விட்டாரா தனுஷ்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil