»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபுதேவா, முண்ணனி நடிகர் லிஸ்டிஸ் மெல்ல இடம் பிடித்து விட்டார். ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்திற்குபிறகு அந்த அளவு அவருக்கு வேறு எந்தப் படத்திலும் பெயர் வரவில்லை.

அண்மையில் வெளிவந்த பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் அண்ணன் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துடன்சேர்ந்து நடனமாடி இருக்கிறார்,

இந்த அனுபவம் எப்படி இருந்தது என்ற நமது கேள்விக்கு பதில் கொடுத்த அவரும், உடன் இருந்தஅண்ணன் ராஜு சுந்தரமும் நமது கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளனர்.

பிரபு தேவா முதலில் பேசினார்:

ஜெண்டில் மேன் படத்தில் வரும் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலுக்கு நான் முக்கியமாக ஆடினேன்.அதில் இவன் (ராஜு சுந்தரம்) ஒரு சில இடங்களில் ஆடி இருப்பேன். பெண்ணின் மனசைத்தொட்டு படம்போல சேர்ந்து ஆடவில்லை.

ராஜு சுந்தரம் உங்களுக்கு அண்ணன். இருவருக்கும் எத்தனை வருடம் இடைவெளி. மரியாதைஇல்லாமல் அவன் இவன்னு சொல்றீங்களே?

எனக்கும், அவனுக்கும் மூணு வருஷம் வித்தியாசம். ராஜுன்னுதான் கூப்பிடுவேன். இரண்டு பேரும்போடா, வாடான்னுதான் கூப்பிட்டுக் கொள்வோம்.

அண்ணன் தம்பின்னா சண்டை வருமே, உங்களுக்குள் அப்படி வருவதுண்டா?

அது எப்பவுமே வரும். இப்போ இல்ல. இருவருமே பிசியாக ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறோம். அவன்எங்கேயோ அவுட்டோர், இல்ல நான் எங்கேயாவது அவுட்டோர், அவ்வளவா வீட்டில்இருப்பதில்லை.

முன்னால, வீட்டில இருக்கிறபோது சண்டை அடிக்கடி வரும். பெரும்பாலும் டிரஸ், ஷுன்னு தொடங்கிஎல்லாவற்றிலுமே போட்டிதான். சாப்பாடு யாருக்கு முதல்ல வருதுங்கிற வரைக்கு சண்டை போட்டுக்கொள்வோம்.

அடிதடி, கலாட்டா, கைகலப்பு வரைக்குங்கூட போயிருக்கு. எல்லாம் நீ பெரியவனா, நான் பெரியவனாசண்டைதான். என்ன ஒண்ணு, நாங்க வீட்டில சினிமா பற்றி எதுவுமே பேச மாட்டோம், அதைப் பற்றியசண்டைகள் வந்ததில்லை.

புக்கார் என்ற இந்திப்படத்தில் மாதுரி தீட்சித்துடன் சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடி இருக்கிறீர்களாமே, இந்தஸ்டேஜிலுமா நடனம்?

ஸ்ரீதேவி, போனிகபூர் தயாரித்த படம். ஸ்ரீதேவி என்னிடம் ஒரு நடனம் ஆட வேண்டும்னு கேட்டாங்க.அவங்க கேட்டதால ஒத்துக் கொண்டேன்.

மாதுரி தீட்சித் வேற எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏ.ஆர்.ரகுமான் மியூசிக். பெரிய பேனர் அதனாலஒத்துக் கொண்டேன். இந்தியில் நான் ஹீரோவாக இல்லையே. தமிழில்தானே ஹீரோவாக நடிக்கிறேன்.

நீங்க நடிப்புத்துறைக்கு வந்ததால, ஒரு நல்ல டான்சரையும், டான்ஸ் இயக்குனரையும் இன்டஸ்ட்ரி இழந்துவிட்டதாக நினைக்கவில்லையா?

அதான், ராஜு இருக்கான். அதுபோல நிறைய பேர் இருக்காங்க. அப்படி ஒரு ஃபீலிங் இருக்கு.அதைத்தான் நடித்துக் கொணடே வாய்ப்புக் கிடைக்கும் போது, செய்து கொண்டு தானே இருக்கேன்.

கொரியோ கிராபராக - டான்ஸ் வடிவமைப்பு பற்றி, ஒரு சின்ன ஃபிலிம் இருக்கு. அதெல்லாம்,பின்னால முடிவு எடுப்பேன்.

மைக்கேல் ஜாக்சனை சந்தித்தபோது எப்படி இருந்தது? அவருடன் எடுத்த போட்டோ என்ன ஆச்சு?

என் வாழ்க்கையில் ஒரு திரில்லிங் மொமெண்டுகளில் நம்பர் ஒன், மைக்கேல் ஜாக்சனை சந்தித்ததுதான்.அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவை அவரது போட்டோகிராபர்தான் எடுத்தார்.அனுபபி வைப்பதாக சொன்னார் - இதுவரை வரவில்லை.

அண்ணன் ராஜு சுந்தரமும் நீங்களும் சேர்ந்து ஆடுற இந்த பாடலுக்கு யார் டான்ஸ் கம்போஸ்பண்றாங்க?

அண்ணன்தான். அவரு சீனியராச்சே! டூ மெனி குக்ஸ் ஸ்பாயில் தி ஃபீஸ்ட்- ன்னு சொல்வாங்க. அதனாலஅவரு சொல்றபடி நான் ஆடிடுவேன்.

உங்கள் படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

எல்லாரும் போலத்தான். கதை கேட்பேன். டைரக்டர், புரடியூசர் -பார்த்து ஒத்துக் கொள்வேன்.அதுக்காக டான்ஸ் ஸ்கோப் மட்டும் இருக்கிற மாதிரி இருந்தால் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

எனக்கு சூட்டபிளான கேரக்டராக தெரிபவற்றை ஒத்துக் கொள்வேன். நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்புஇருந்தால்தான் ஒத்துக் கொள்வேன் என்பதெல்லாம் கிடையாது.

வானத்தைப் போல படத்துல ஒரு நல்ல கதாபாத்திரம். அதில் ஒரு நடனக் காட்சி கூட இருக்கும்.அதெல்லாம், டைரக்டரோட சாய்ஸ்தான். நானாக கேட்பதில்லை.

பொதுவாக நீங்க டிரஸ் கான்சியஸ் அதிகம் காட்டுவதில்லை. ஏதோ ஒரு பனியனை இடுப்பில் கட்டிக்கொண்டு வந்து ஆடுகிறீர்கள். ஏன்?

நான் வெளியே ரொம்ப சிம்பிளான டிரஸ்தான் உடுத்துவேன். ஆனால், படத்திலே ஓரளவுக்கு நல்லகாஸ்டியூம்ஸ் போட்டுத்தான் நடிக்கிறேன். அதிகமான அக்கரை எடுத்துக் கொள்வதில்லை என்பதுஉண்மைதான்.

எனக்குக் கிடைக்கிற கேரக்டர்கள், நடுத்தர வர்க்கமாக, லுங்கி கட்டிக் கொண்டு வருவது போலஅமைந்து விடுகிறது. அவ்வளவுதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil