»   »  வாய்ப்பு மழையில் ப்ரீத்தி

வாய்ப்பு மழையில் ப்ரீத்தி

Subscribe to Oneindia Tamil

தெலுங்குப் படப்பிடிப்பிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி மீண்டும் சென்னைக்குத் திரும்பியுள்ள ப்ரீத்தி வர்மாவைத் தேடி புதிய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதாம்.

ராஜமுந்திரிக்கு படப்பிடிப்புக்குப் போன இடத்திலிருந்து திடீர் என மாயமாகி பரபரப்பை ஏற்படுத்தியவர், 2 மாத கால தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் நேற்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி தனது பெற்றோர் குறித்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

நீதிமன்றம் ப்ரீத்தியை தனியாக வாழ அனுமதி அளித்தது. மேலும், அவருக்குப் பாதுகாப்பு கொடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ப்ரீத்தி சென்னையில் ரகசியமாக ஒரு இடத்தில் தங்கியுள்ளார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகி மீண்டும் திரும்பியுள்ள ப்ரீத்திக்கு இப்போது அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்துள்ளது. அவரைத் தேடி இரண்டு தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களும், ஒரு தெலுங்குப் படத் தயாரிப்பாளரும் வந்துள்ளனர்.

மூன்று படங்களிலும் ஹீரோயினாக தனி ஆவர்த்தனம் செய்யும் வாய்ப்பாம். அதில் ஒருவர் அன்புத் தோழி படத்தின் தயாரிப்பாளர். இப்படத்தில் திருமாவளவனை ஒரு தலையாக காதலிக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளாராம் ப்ரீத்தி.

ப்ரீத்தியின் காதலை ஏற்காமல் போர்க்களத்திற்குப் போகும் போராளியாக திருமா நடித்துள்ளார். ப்ரீத்தியின் நடிப்பு திருமாவுக்கு ரொம்பப் பிடித்து விட்டதாம். அதேபோல தயாரிப்பாளருக்கும் ப்ரீத்தியைப் பிடித்துப் போய் விட்டது.

இதையடுத்து தனது அடுத்த படத்தில் தனி நாயகியாக நடிக்க வைக்க ப்ரீத்தியை அணுகியுள்ளார் அன்புத் தோழி தயாரிப்பாளர். ப்ரீத்தி தற்போது தங்கியுள்ள ஹோட்டலுக்குப் போய் அவரைப் பார்த்து பேசியுள்ளார் இந்தத் தயாரிப்பாளர்.

அதேபோல இன்னொரு தயாரிப்பாளரும் கூட ப்ரீத்தியை அணுகியுள்ளாராம். பெரிய தொகை தருவதாக கூறியுள்ள இவரும், தனி நாயகியாக ப்ரீத்தியை நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் உள்ள ஒரு தெலுங்குப் படத் தயாரிப்பாளரும் ப்ரீத்தியை தனது படத்தில் புக் பண்ண விருப்பம் தெரிவித்துள்ளார்.

அசிங்கம் பிடித்த குடும்பம்: ப்ரீத்தி ஆவேசம்

இதற்கிடையே, எனது பெற்றோர் என்னை மிகவும் அசிங்கமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்ல முயன்றனர். அடித்துத் துன்புறுத்தினார்கள். அவர்களிடமிருந்து விடுபட்டு விட்டேன். இனிமேல் நான் தனியாக வாழ்வேன், தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் ப்ரீத்தி வர்மா.

நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்த ப்ரீத்தி ஒரு ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது மனம் விட்டுப் பேசினார்.

எனக்குப் பூர்வீகம் ஹரியானா மாநிலம். ஆனால் சிறு வயது முதல் சென்னையில்தான் வளர்ந்தேன். இதனால் தமிழ் நன்கு தெரியும்.

நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. கல்யாணமும் செய்து கொள்ளவில்லை. சிறு வயது முதலே நான் எனது தந்தை வழி தாத்தா, பாட்டியிடம்தான் வளர்ந்தேன். அவர்கள் இப்போது உயிருடன் இல்லை.

எனது தந்தை டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். ஆரம்பத்தில் என்னை எனது பெற்றோர் நன்றாகத்தான் வைத்திருந்தனர். ஆனால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் அவர்கள் தடம் மாறிப் போனார்கள்.

விருப்பப்பட்டுத்தான் நான் சினிமாவில் சேர்ந்தேன். மாறன் படம்தான் எனது முதல் படம். அதில் விருப்பட்டு நடித்தேன். ஆனால் அதன் பின்னர் நடித்த படங்களில் நான் இஷ்டம் இல்லாமல்தான் நடித்தேன். காரணம் எனது பெற்றோர் செய்த கொடுமைகள்.

திருமகன், அன்புத்தோழி ஆகிய படங்களில் விருப்பமே இல்லாமல்தான் நடித்தேன். எனது சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்ட ஒரு விவரத்தையும் எனது பெற்றோர் என்னிடம் கூற மாட்டார்கள்.

அவர்கள் சொல்வதை மட்டும் நான் கேட்க வேண்டும். பணத்துக்கு ஆசைப்பட்டு தவறான பாதைக்கு என்னைக் கொண்டு போனார்கள். அறிமுகமே இல்லாத ஆண்களுடன் தங்கச் சொன்னார்கள். ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் என்னை படுக்கையைபப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார்கள்.

அடித்துத் துன்புறுத்தினார்கள், நிம்மதி இல்லாமல் இருந்து வந்தேன். ஆனால் நான் கோழை அல்ல. அதனால்தான் அவர்களிடமிருந்து தைரியமாக வந்து விட்டேன். சில நடிகைகள் அவர்களது பெற்ேறார்களிடம் அடிமையாக இருக்கிறார்கள். அவர்களைப் போல என்னால் இருக்க முடியாது.

சென்னையில் தங்கியிருப்பேன். தொடர்ந்து நடிப்பேன். என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பயப்படவே அவசியம் இல்லை. இனிமேல் என்னால் அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படாது.

எனது குடும்பத்தினர், உற்றார், உறவினர்களை நான் அடியோடு ெவறுக்கிறேன். அந்த அளவுக்கு அவர்கள் தரம் கெட்டவர்கள். அசிங்கமானவர்கள். அவர்களது செயலால் எனது மனம் காயப்பட்டுள்ளது.

எனது நண்பர்களான அருண், விஜய், மகேந்திரனைக் கூட நான் நம்பவில்லை. அதிலும் அருண் ஒரு சைக்கோ (இவர்தான் விந்தியாவின் மேனேஜர் பிளஸ் காதலராக இருந்தவர்). அதனால்தான் மும்பை வரை கூட்டிக் கொண்டு போய், அங்கேயே விட்டு விட்டு நான் போய் விட்டேன் என்றார் ப்ரீத்தி வர்மா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil