For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பத்து டேக் போச்சி அந்த முத்தக் காட்சி!- ப்ரீத்தி தாஸின் லிப் லாக் அனுபவம்

  By Shankar
  |

  ப்ரீத்தி தாஸ்!

  பாம்பே பொண்ணுதான் என்றாலும் கோதுமையுடன் வீரமும் விளையும் பஞ்சாப் மாநிலம் அவரது சொந்த ஊர். தாய்மொழியான பஞ்சாபியுடன், ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் தமிழும் தெரிந்து வைத்திருக்கிறார். ப்ளஸ்டூ முடித்து விட்டு மாடலிங்கைத் தேர்ந்தெடுத்தவர், இப்போது நடிக்க வந்துவிட்டார். எடுத்த எடுப்பில் இரண்டு படங்களில் ஹீரோயின்... அவருடன் ஒரு பேட்டி...

  எப்படி நடிகையானீங்க...? அதுவும் பஞ்சாபிலிருந்து வந்து முதல் படமே தமிழில்...?

  எப்படி நடிகையானீங்க...? அதுவும் பஞ்சாபிலிருந்து வந்து முதல் படமே தமிழில்...?

  மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது இயக்குனர் கமல் அவரது படத்திற்குக் கதாநாயகி தேடிக்கொண்டிருந்தார். எனது புகைப்படத்தைப் பார்த்து விட்டு தேர்வுக்கு (ஆடிஷன்) வரச்சொன்னார்.... நம்பிக்கையுடன் கலந்து கொண்டேன். ஆனால் அடுத்த மூன்று நாட்கள் ஒரே டென்ஷன் வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்று. திடீரென்று ஒரு போன் இயக்குனரிடமிருந்து "உங்களை செலக்ட் பண்ணியிருக்கோம்.." என்று. இன்று அடுத்தடுத்த இரண்டு படங்கள் 'மறுமுகம்' மற்றும் 'உயிருக்கு உயிராக' வெளியாகவிருக்கிறது.

  மாடலிங்கிலிருந்து நடிக்க வந்தது எப்படி இருக்கிறது?

  மாடலிங்கிலிருந்து நடிக்க வந்தது எப்படி இருக்கிறது?

  மாடலிங்கில் விதவிதமான உடைகளை உடுத்திக் கொண்டு ராம்ப் வாக் மட்டும் தான் வரமுடியும்.

  ஆனால், நடிப்பது அப்படியல்ல. கதாபாத்திரங்களுக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். காதல், ரொமான்ஸ், சோகம் இப்படி பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சவாலான துறை நடிப்புத் துறை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

  மறுமுகத்தில் என்ன கேரக்டர்?

  மறுமுகத்தில் என்ன கேரக்டர்?

  ராதிகா என்கிற கதாபாத்திரம். டேனியல் பாலாஜி, அனூப் இருவரும் நடித்துள்ளனர். பக்கா த்ரில்லர். முதல் படம். முதல் படம்.. மொழி தெரியாது. காமிரா தெரியாது. எனக்கு முன்னாடி நடிப்பில் தூக்கி சாப்பிடுகிற டேனியல் பாலாஜி. நிறைய சொதப்பினேன். ஆனால் எல்லோரும் பொறுமையா என்னை நடிக்க வச்சாங்க. தேங்க்ஸ் டு டைரக்டர் கமல். தயாரிப்பாளர் சஞ்சய்க்கு நன்றி சொல்லியே ஆகணும். என் சினிமா வாழ்க்கையை தொடங்கி வச்சார். மறுமுகத்தில் நடிக்க நிறைய இடம் கிடைச்சது. ஒன்றும் தெரியாத வயதில் நாம் எடுக்கும்முடிவுகள் நம்மை எப்படிப் பாதிக்கின்றன. அதிலிருந்து எப்படி வெளியே வருகிறோம் என்பதுதான் என் கேரக்டர்...

  'உயிருக்கு உயிராக'...?

  'உயிருக்கு உயிராக'...?

  இதில் எஸ் ஆர் எம் கல்லூரியில் படிக்கும் பிங்கி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்... துறுதுறுப்பான பப்ளி ஹீரோயினாக இயக்குனர் விஜய மனோஜ்குமார் என்னைக் காட்டியிருக்கிறார்....

  இரண்டு படங்களுமே எதிரும் புதிருமான கதைகள். மறுமுகம் திரில்லர் படம் என்றால் உயிருக்கு உயிராக ஒரு மென்மையான படம்.

  எடுத்த எடுப்பில் இரண்டு படங்கள், நான்கு ஹீரோக்கள்….?

  எடுத்த எடுப்பில் இரண்டு படங்கள், நான்கு ஹீரோக்கள்….?

  மறுமுகத்தில் டேனியல் பாலாஜி மற்றும் அனுப். உயிருக்கு உயிராகவில் சஞ்சீவ் மற்றும் சரண்.... இதில் நந்தனாவும் இருக்கிறார்.... நான்கு ஹீரோக்களுமே என்னுடைய நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

  கவர்ச்சியாக நடிப்பீர்களா..?

  கவர்ச்சியாக நடிப்பீர்களா..?

  ஆம்... சினிமா என்று வந்த பிறகு இயக்குநர் சொன்னால் கவர்ச்சி காட்டுவது தப்பில்லையே! மேலும் நம்முடைய அழகை ஆரோக்கியமாக வெளிப்படுத்திவதில் தனி கிக் இருக்கிறது!

  லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறீர்களாமே ?

  லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறீர்களாமே ?

  மறுமுகத்தில் அப்படி ஒரு காட்சி வருகிறது...முதல் படத்திலே லிப் டு லிப் கொடுக்க வைத்து விட்டார்கள். கதாநாயகர்களுக்கு சந்தோஷமாக இருக்கலாம் . ஆனால் நமக்குத்தான் அத்தனை பேருக்கு முன்னால் கொடுக்க தயக்கமாகி விடுகிறது. அதுவும் ஒரு டேக்கில் முடிந்தால் பரவாயில்லை. எது சீக்கிரம் முடிஞ்சிடம்னு நினைக்கிறோமோ அது இன்னும் அதிக டேக் வாங்கும். முத்தக்காட்சி பத்து டேக் போயிருக்கும். இருந்தாலும் கதைக்குத் தேவைப்பட்டது , நடித்தேன்... மிகவும் கண்ணியமாக படமாக்கியிருக்கிறார்கள்!

  விருதுகள் வாங்கற அளவுக்கு நடிக்கணும் என்பது போன்ற லட்சியம் ஏதும் இருக்கா?

  விருதுகள் வாங்கற அளவுக்கு நடிக்கணும் என்பது போன்ற லட்சியம் ஏதும் இருக்கா?

  அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். எனது முதல் இரண்டு படங்களுமே ஹீரோயினை மையப்படுத்தி எழுதப்பட்ட படங்கள்... அதுபோல ஹீரோயினுக்கும் ஓரளவு நடிக்க வாய்ப்பிருக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும்.... அவ்வளவுதான்.

  சீனியர் நடிகைகள் யாரும் அட்வைஸ் பண்ணாங்களா?

  சீனியர் நடிகைகள் யாரும் அட்வைஸ் பண்ணாங்களா?

  சினேகாவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். ரொம்ப அன்பா பழகினார். 'உனக்கு என்ன விருப்பமோ அதை தைரியமாகச் செய். கிளமாரோ ஹோம்லியோ அதை அழகாகச் செய்யணும். வெறுக்கும்படி இருக்கக்கூடாது' என்று ஊக்கப்படுத்தினார்...அவ்வளவு பெரிய நடிகை என்னையும் மதித்து அறிவுரை சொன்னது எனக்கு பெரிய விஷயம்.

  நீங்க அஜீத் ஃபேனாமே... அவருடன் நடிக்க ஆசையா?

  நீங்க அஜீத் ஃபேனாமே... அவருடன் நடிக்க ஆசையா?

  அஜீத்தை கல்யாணமே பண்ணிக்கலாம். நடிக்க மாட்டேனா என்ன... ப்ச், அவருக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சு. அதனால் பொழச்சிப் போகட்டும். ஆனா நடிக்க எப்போ எப்போன்னு எதிர்பார்த்திருக்கேன். ஆனா அப்படியொரு வாய்ப்பு அமையுமான்னு தெரியல. குட் லக் டு மைசெல்ஃப். இருந்தாலும் எனக்கு எல்லா நடிகர்களுடனும் நடிக்கணும். அஜித், விஜய், இன்றைய டாப் நாயகர்களுடன் நடிக்கணும். நயனுக்கு அடிச்ச லக் எனக்கும் அடிச்சா போதும்ங்க.

  காதல் அனுபவம் ஏதேனும்..?

  காதல் அனுபவம் ஏதேனும்..?

  காதல் ஒரு சுகமான அனுபவம்தான். நான் இன்னும் யாரையும் காதலிக்கவில்லை.....

  தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கிறீர்களா..?

  தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கிறீர்களா..?

  ஆம்.... தமிழ்ப் படங்கள் நிறைய பார்க்கிறேன். கடைசியாக எதிர்நீச்சல் பார்த்தேன்.

  இந்தியில் நடிக்கப்போகவில்லை...?

  இந்தியில் நடிக்கப்போகவில்லை...?

  ஷாருக்கான் தீபிகா படுகோன் போன்றவர்கள் தென்னிந்திய குறிப்பாக தமிழ்ப் படங்களுக்கு கொடுக்கும் மரியாதையை நான் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் வடக்கில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் இங்கு தங்களை பிரபலப் படுத்திக்கொள்ளவே ஆசைப்படுகின்றனர். ஆக தமிழ்நாடு இந்திய சினிமாவின் மிக முக்கியமான இடம். இங்கு ஜெயித்தால் போதும் எனக்கு.

  English summary
  Preethi Das, a Punjabi girl now becomes a Chennaitie is playing as heroine in two films simultaneously speak out her lip lock experience in her very first movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X