»   »  அமீர் மீது ப்ரியாமணி பாய்ச்சல்!

அமீர் மீது ப்ரியாமணி பாய்ச்சல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priyamani
பருத்தி வீரன் மூலம் பெரிய பிரேக் கொடுத்த இயக்குநர் அமீரை கடுமையாக சாடியுள்ளார் அப்படத்தின் நாயகி ப்ரியா மணி.

தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கும், அவர்களை அறிமுகப்படுத்துகிற இயக்குநர்களுக்கும் அப்படி என்னதான் ஏழாம் பொருத்தமோ தெரியவில்லை. முதல் படத்தில் அறிமுகமாகும் போது இயக்குநர்களை கடவுளுக்குச் சமமாக வைத்து ஆராதனை செய்யும் நடிகைகள், பிரபலமாகி பிஸி நடிகை என்ற நிலைக்கு வந்ததும் அதே கடவுளை தூக்கி தூர வைத்து விடுகின்றனர்.

இந்த வரிசையில் இப்போது சேர்ந்திருக்கிறார் பிர்யா மணி. அவரால் சாடப்பட்டுள்ளவர் இயக்குநர் அமீர். ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு மூலையில் கிடந்த பிரியாமணியை, பருத்தி வீரன் படத்தில் நடிக்க வைத்து, அவர் ஏற்று நடித்த முத்தழகி கேரக்டரை பெரிய அளவில் பேச வைத்தவரான அமீரை, ப்ரியா மணி கடுமையாக சாடி பேட்டி அளித்துள்ளார்.

பருத்தி வீரனால் அமீர் பட்ட பாடுகள் உலகுக்கே தெரியும். முதலில் சிவக்குமார் குடும்பத்திற்கும், அமீருக்கும் இடையே பெரும் பிரச்சினை எழுந்தது. இன்னும் கூட அந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு வரவில்லை என்கிறார்கள். இந்த நிலையில் ப்ரியா மணியும் தன் பங்குக்கு சைடில் குத்தியுள்ளார்.

சமீபத்தில் அமீர் அளித்த ஒரு பத்திரிகைப் பேட்டியில், தான் இப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் யோகி படத்துக்கு நாயகியாக முதலில் ப்ரியாமணியைப் போடவே விரும்பியதாகவும், ஆனால் முத்தழகி பாத்திரத்தில் நடித்ததே பாவம் என்பது போல ப்ரியாமணி கொடுத்து வரும் பேட்டிகளும், உள்ளாடை தெரிகிற அளவுக்கு அலங்கோல உடையில் மேடைகளில் அவர் தோன்றுவதும் அந்த முடிவை மாற்றிக் கொள்ள வைத்ததாகவும் கூறியிருந்தார்.

இதைக் கேள்விப்பட்ட ப்ரியா மணி கொந்தளித்துவிட்டார்.

நான் எந்த உடை போட்டுக் கொள்வது என்பதை அமீர் தீர்மானிக்க முடியாது. அது என் இஷ்டம். நான் ஒன்றும் முத்தழகியல்ல, எப்போதும் பாவாடை தாவணியிலேயே சுற்றிக் கொண்டிருக்க.

பருத்தி வீரன் படத்தில் நான் நடித்ததற்கு ஒழுங்காக சம்பளம் தரவில்லை இயக்குநர் அமீரும், படத்தின் தயாரிப்பாளரும். அப்படிப்பட்ட ஒரு இயக்குநருக்கு என்னைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது...? நீங்கள் நினைப்பது போல் அமீர் ஒன்றும் சிறந்த, தொழில்முறை இயக்குநர் அல்ல என கடுமையான வார்த்தைகளில் பேசியுள்ளார்.

இதுகுறித்து அமீரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சிறிது நேரம் மௌனமாயிருந்த அமீர் பிறகு பேசினார். "பருத்தி வீரன் படத்தையே நான் எடுத்திருக்கக் கூடாது சார். படம் நன்றாக ஓடினாலும், ஒரு படைப்பாளியான எனக்கு எத்தனை எத்தனை அவமானங்கள், இழப்புகள். எல்லாம் என் நேரம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல என்றார் விரக்தி வெளிப்பட.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil