»   »  பிரியாமணியின் புது பாலிஸி

பிரியாமணியின் புது பாலிஸி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரனைப் போல என்னையே மாற்றிக் காட்டுகிற மாதிரியான ரோல்களில்தான் இனிமேல் நடிக்கப் போகிறேன் என்று டிக்ளேர் செய்துள்ளார் பிரியா மணி.

விளங்காமல் போய்க் கிடந்த பிரியா மணியின் மார்க்கெட் பருத்தி வீரனுக்குப் பிறகு விறுவிறுப்படைந்துள்ளது. தமிழில் நிறையப் படங்களில் புக் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரியா மணி வித்தியாசமாக தெலுங்கில் கை நிறையப் படங்களுடன் கலக்க ஆரம்பித்துள்ளார்.

டாஸ், எம்மதொங்கா ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். எம்மதொங்காவில் ஜூனியர் என்.டி.ஆருடன் திறமை காட்டி வரும் பிரியா, டாஸ் படத்தில் ராஜாவுடன் லாலி பாடி வருகிறார். இதுதவிர புன்னகை தேசத்தின் ரீமேக் படத்திலும் தருணுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

படு பிசியாக நடித்து வரும் பிரியா மணியிடம், தமிழில் அடுத்த படம் என்ன என்று கேட்டபோது, நிறைய பட வாய்ப்புகள் வரத்தான் செய்கிறது. இருந்தாலும் வருகிற வாய்ப்பையெல்லாம் ஏற்று நடித்து என்னை இறக்கிக் கொள்ள விரும்பவில்லை.

பருத்தி வீரனைப் போல என்னையே புரட்டிப் போடுகிற, என்னையே மாற்றிக் காட்டுகிற மாதிரியான ரோல்களில்தான் நடிக்கப் போகிறேன்.

சும்மா ரெண்டு பாட்டுக்கு டான்ஸ், கிளாமர் டிரஸ் என்று வந்து போக எனக்கு ஆசை இல்லை. நல்ல கதையாக இருந்தால்தான் இனிமேல் நடிப்பேன். எனக்குக் கிடைத்துள்ள நல்ல பெயரை விட்டு விட விரும்பவில்லை என்கிறார் தெளிவாக.

இப்படிச் சொல்லும் பிரியா மணி, டாஸ் படத்துக்காக சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டு குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளாராம்.

நட்ட நடுச் சாலையில் பிரியா மணி போட்ட கெட்ட ஆட்டத்தைப் பார்த்து மலேசியர்கள் வாயடைத்துப் போய் விட்டார்களாம்.

அங்க ஒன்னு, இங்க ஒன்னு, இது என்ன பாலிசி கண்ணு?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil