நடிகர்களை அப்படி கூப்பிடாதீங்க.. ரஜினிகாந்த், கமல் எல்லாம் எப்போவோ பண்ணிட்டாங்க.. பிரியாமணி ஓபன்!
சென்னை: நடிகை பிரியாமணி, 'பான்-இந்தியா நடிகர்கள்' என்ற சொல் தேவையற்றது என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர்கள் எப்போதுமே பல மொழிகளில் பணியாற்றி வருவதாகவும், இந்த புதிய அடையாளச் சொற்கள் தேவை இல்லை எனவும் அவர் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
தமிழ் சினிமவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் இதுபோன்ற அடையாள சொற்கள் எல்லாம் இல்லாமல் தேசிய அளவில் பல மொழிகளில் நடித்து அங்கீகாரம் பெற்றதை சுட்டிக்காட்டினார்.

திறமையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், குறிப்பிட்ட மொழிசார்ந்த அடையாளங்கள் தேவையில்லை என்றும் பிரியாமணி வலியுறுத்தியுள்ளார்.
பிசியான பிரியாமணி: இடையே சிறிது காலம் பெரிதாக படங்களில் கவனம் செலுத்தாமல் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட்டு வந்த பிரியாமணிக்கு தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மிகப்பெரிய அங்கீகாரத்தையும் கம்பேக்கையும் கொடுத்தது. விரைவில் தி ஃபேமிலி மேன் சீசன் 3 வெளியாகவுள்ள நிலையில், பிரியாமணி தற்போது ரொம்பவே பிசியாகி விட்டார். விஜய்யுடன் ஜன நாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்துள்ள குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு குட் ஒயிஃப் எனும் வெப்சீரிஸிலும் பிரியாமணி நடித்திருந்தார்.
பான் இந்தியா நடிகர்கள் என சொல்ல வேண்டாம்: சமீபத்தில் ஒரு நேர்காணலில், "பான்-இந்தியா என்ற சொல்லைப் பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும். இறுதியில் நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தப் 'பான்-இந்தியா' என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை" என்று பிரியாமணி கூறினார்.
"நீங்கள் பிற துறைகளில் பணியாற்றுகிறீர்கள் என்பது நல்ல விஷயம். ஆனால் பாலிவுட்டிலிருந்து தென்னிந்தியாவுக்கு வரும் ஒருவரை 'பான் இந்தியா நடிகர்' என்று அழைப்பதில்லை. பல ஆண்டுகளாக, இருதரப்பு நடிகர்களும் பல மொழிகளில் பணியாற்றி வருகின்றனர். இப்போது ஏன் திடீரென்று இத்தகைய அடையாளங்களைச் சூட்டுகிறோம்?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.
கமல், ரஜினி எல்லாம் எப்போவோ: கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரகாஷ் ராஜ், தனுஷ் போன்ற கலைஞர்கள் பல வருடங்களாக பல மொழிகளில் பணியாற்றி வருவதை அவர் எடுத்துரைத்தார். இவர்களை யாரும் 'பான்-இந்தியா நடிகர்கள்' என்று குறிப்பிட்டதில்லை, மாறாக 'இந்திய நடிகர்கள்' என்றே அனைவரும் அறிந்திருந்தனர் என்று பிரியாமணி சுட்டிக்காட்டினார்.
"நாம் எந்த மொழியில் பணியாற்றினாலும் பரவாயில்லை. நம்மை நாமாகவே, நாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக ஏற்றுக்கொள்ளுங்கள். நடிகர்கள் இந்த வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்த முற்படுவது வேடிக்கையானது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதீத விமர்சனம் வேண்டாம்: படம் மற்றும் தொடர்கள் குறித்து பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் முறை குறித்தும் பிரியாமணி பேசினார். "மக்கள் அதிக உணர்ச்சிவசப்படுகிறார்கள். கருத்துக்கள் சொல்வது சரிதான், ஆனால் அவற்றை மிகையாக ஆய்வு செய்யவோ அல்லது மற்றவர்களைப் பாதிக்க முயற்சிக்கவோ வேண்டாம்" என்று அவர் கூறினார்.
"ஒரு படத்தைப் படமாகப் பாருங்கள். பலர் கடினமாக உழைக்கிறார்கள் - அதை மட்டும் பாராட்டினால் போதும். ஒரு படத்தைப் பார்க்கும்போது, அதைப் படமாகப் பாருங்கள். நிச்சயமாக, தயாரிப்பாளர்களும் நடிகர்களும் நிறைய முயற்சி செய்திருப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
"அது வெற்றி பெறலாம், பெறாமலும் போகலாம் - அது பரவாயில்லை. உங்களுக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதுவும் சரியே. கருத்துக்கள் சொல்வது முற்றிலும் சரிதான்" என்று அவர் விளக்கினார்.
"ஒரு படத்தைக் criticise செய்யலாம் - உங்களை வரவேற்கிறோம். ஆனால் அதை மிகையாகக் criticised செய்யவோ அல்லது மிகையாக ஆய்வு செய்யவோ வேண்டாம். 'ரெட் ஃப்ளாக்', 'கிரீன் ஃப்ளாக்', 'Gen Z' என்று அதைக் குறிக்க வேண்டாம். அது ஒரு திரைப்படம் அவ்வளவுதான்!" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"அது எப்போதும் இன்றைய உலகின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டியதில்லை. இயக்குநருக்கு ஒரு பார்வை இருக்கும், கதாபாத்திரங்கள் உங்களுக்கு ஒத்துப் போகலாம் அல்லது போகாமல் இருக்கலாம், அதுவும் பரவாயில்லை" என்று பிரியாமணி தனது கருத்தை நிறைவு செய்தார்.


Click it and Unblock the Notifications











