»   »  பிரியமுடன் மலையாளத்துக்கு...

பிரியமுடன் மலையாளத்துக்கு...

Subscribe to Oneindia Tamil

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பிரியங்கா இங்கு தேட்டை சரிவராததால், மீண்டும் மலையாளத்துக்குத் தாவியுள்ளார்.

மலையாளத்து சேச்சிகள் கோலோச்சும் தமிழில், தனக்கென்று ஒரு தனி இடம் கிடைக்காமலா போய் விடும் என்ற எதிர்பார்ப்புடன் வெயில் படத்தில் தலை காட்டினார் பிரியங்கா.

இதில் அவருக்கு ஹீரோ பரத்துடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, அருமையான கேரக்டராக, பசுபதியின் காதலியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சின்ன கேரக்டரே என்றாலும் கூட மனதைக் கவ்வும் வகையில் கலக்கலாக நடித்தார் பிரியங்கா. இதனால் அவரது கேரக்டரும் பரவலாக பேசப்பட்டது.

முட்டை விழிக் கண்கள், மஞ்சள் நிற அழகு என வண்ணமயமாக இருந்த பிரியங்காவுக்கு அதற்குப் பிறகாவது ஹீரோயின் வாய்ப்பு வராதா என்ற ஏக்கத்தில் இருந்தார். ஆனால் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பது என்ற பிடிவாதத்தில் இருந்த அவருக்கு திருத்தம் பட வாய்ப்பு கிடைத்தது. இதில் ஹரிக்குமாருடன் ஜோடி போட்டு நடிக்கிறார் பிரியங்கா. அடக்கி மட்டும் வாசிக்காமல் லேசு பாசாக கிளாமரிலும் இப்படத்தில் திறமை காட்டுகிறார் பிரியங்கா.

இந்தப் படம் தவிர வேறு படம் இல்லையாம் பிரியிங்காவிடம். இதனால் அப்செட் ஆகிப் போன பிரியங்கா மறுபடியும் தாயகத்திற்கேத் திரும்பத் தீர்மானித்து விட்டார்.

அவரது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு சிந்தாமணி எம்.பி.ஏ. என்ற மலையாளப் படம் பிரியங்காவைத் தேடி ஓடி வந்துள்ளதாம். இதனால் ஹேப்பியாகியுள்ள பிரியங்கா, மலையாளத்தில் தீவிர கவனம் செலுத்தப் போகிறாராம்.

நினைத்தது கிடைக்காவிட்டால், கிடைத்ததை எடுத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். பிரியங்காவும் புத்திசாலிதான்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil