Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஈரமான ரோஜாவே வெற்றிக்கு பிடித்த பிக்பாஸ் கண்டஸ்டண்ட்
சென்னை : விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே புகழ் வெற்றி யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. பெண்கள் மனம் கவர் கள்வன், சாக்லெட் பாய் என ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது வெற்றியாக நடித்த திரவியத்திற்கு தனது மூன்று வருட காதலியை கரம் பிடித்த திரவியத்திற்கு சொந்த ஊர் கோயம்புத்தூர். புகைப்படத்துறை, அனிமேஷன் கல்வி போன்ற திறமைகளையும் கொண்டவர்.
Recommended Video
தங்கமே
தேடி
வந்தேனே...
6
ஆண்டுகளை
கடந்த
நானும்
ரெளடி
தான்
விஸ்காம் படித்து புகைப்படத்தின் மீது தீராக்காதல் கொண்ட இவரை கலைத்துறையும் சீரியலும் பிடித்துக்கொண்டது. நமது ஃபிலிம்பீட் தளத்திற்கு அவர் அளித்த பேட்டி இதோ

நிஜ ஜோடிகள் தானா?
கேள்வி : வெற்றி-பவித்ரா ஜோடி எப்படி?
பதில் : நிஜமாவே நல்ல கேரக்டர் கிடைச்சது அந்த ப்ராஜெக்ட்ல. நிறையபேர் நிஜ ஜோடிகள்தானான்னு நெனக்க வச்ச அளவுக்கு அமைஞ்சது ஈரமான ரோஜாவே. அந்த டீம் மொத்தமாவே ஒரு குடும்பம் மாதிரிதான் சந்தோஷமா, ஒத்துமையா இருந்தோம். அதுதான் எங்க எல்லாருக்கும் கிடைச்ச வெற்றி

மன நிலை சூழ் நிலை
கேள்வி : பிக்பாஸ் 3 க்கு உங்கள கூப்பிட்டா நீங்க போவீங்களா?
பதில் : அது கூப்பிடும் போது பாத்துக்கலாமே..
கேள்வி : ஆனா உங்க பேர் பரிந்துரைக்கப்பட்டுச்சாமே
பதில் : ஆமா. நானும் கேள்விப்பட்டேன். ஆனா என்ன ஆச்சோ தெரியல, கை நழுவி போயிருக்கு. பார்க்கலாம். ஒருவேள கூப்பிட்டா அப்ப உள்ள மன நிலை சூழ் நிலை பொறுத்து முடிவெடுத்துக்கலாம்.

அனைவர் அன்பையும்
கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் படித்த திரவியம் அந்த கல்லூரி ஆசிரியர்களுக்கும் உடன் படித்த மாணவர்களுக்கும் மற்றும் சீனியர் ஜூனியர் என்று அனைவர் அன்பையும் பெற்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். கொங்கு மண்டலத்தில் இருந்து ஈரமான ரோஜாவே சீரியல் ரசிகர்கள் ஏராளம். வெற்றி என்னும் இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் பலவகை .கோவையில் ஒரு தனி கூட்டமே திரவியத்தை பாராட்டி கொண்டிருக்கிறது
ஜெயிச்சிட்டு வரணும்
கேள்வி : இப்ப பிக்பாஸ்-ல யார பிடிக்கும்?
பதில் : பிரியங்கா.
கேள்வி : ப்ரியங்காவுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
பதில் : அவங்களுக்கு சொல்ல எதுவுமே இல்ல. நார்மலாவே அவங்க இருந்தாலே அந்த இடத்துல ஒரு நல்ல வைப்ரேஷன் இருக்கும். நிச்சயமா ஜெயிச்சிட்டு சந்தோஷமா வாங்க. வாழ்த்துக்கள்.
என்று கலகலப்பாகவும் கேஷ்வலாகவும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார் திரவியம். மேலும் வீடியோவை கான ஃபிலிம் பீட் தமிழ் யூட்யூப் தளத்தில் காணலாம்